Thursday, June 7, 2018

ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்

ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்
==============================


ஓம் என்ற ஒலி முறையான அதிர்வுடன் உச்சரிக்கப்பட்டால் மட்டுமே பலன் கொடுக்கும். எனவே அவரவர்கள் தங்கள் சுயபரிசோதனை மூலமோ அல்லது குருவிடமோ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்

ஓங்கார ஒலி பிரபஞ்சத்தின் மூல சப்தம் அது அண்டத்திலும் உள்ளது பிண்டத்திலும் உள்ளது மேலும் பல மந்திர ஒலிகளும் இது போல விண்வெளியில் பரவியுள்ளது என்றும் அதை யோக சாதனை செய்வதன் மூலமே கேட்க முடியும் என்று சித்தர்களின் பாடல்கள் தெரிவிக்கிறது நாம் வாயால் உச்சரிக்கும் ஒலிகள் எப்படி இருக்கிறது என்றால் சினிமா பாடகி ஜானகியின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொல்வதற்கும் தேன் இனிப்பாக உள்ளது சொல்வதற்கும் எவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளதோ அது போலவே வெளியில் ஒலிக்க கூடிய மந்திரங்களும் இருக்கிறது

வேதங்கள் கூறுவது என்னவெனில் ஓம் என்ற ஒலியிலிருந்தே பிரபஞ்சம் உண்டாகி விரிவடைந்து கொண்டு செல்கிறது அது ஒவ்வொரு அணுவிலும் சக்தியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது

அந்த ஒலியை உணர வேண்டுமெனில் மனிதன் தன் ஐம் புலன்களை கடந்த நிலைக்கு செல்ல வேண்டும் அது யோக சாதனைகளால் மட்டுமே முடியும் ஏனெனில் அதற்கான விஞ்ஞான விளக்கத்தை பார்ப்போம்.

மனிதன் தன் காதுகளால் உணர கூடிய ஒலி அலைகளின் எல்லையை விஞ்ஞானம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது அதாவது 20 Hz என்பது ஒரு துகள் ஒரு நொடிக்கு இருபது முறை அதிர்வதால் உண்டாகும் ஒலியின் நிலையாகும் இவ்வாறு ஒரு நொடிக்கு 20 Hz முதல் 20,000 Hz வரை அதிரக்கூடிய துகளின் ஒலி அலைகளை மட்டுமே மனித காதுகளால் கேட்க முடியும் விலங்குகள் மற்றும் பறவைகள் இதில் விதிவிலக்காக இருக்கிறது அது பிரபஞ்சம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகவே கருதலாம் ஏனேன்றால் அந்த ஓங்கார ஒலியை கேட்டு உணர கூடிய உயிரணங்களே தன்னிலிருந்து இன்னொரு நிலைக்கு பரிமாற்றம் அடைய முடியும்

விலங்குகளும் பறவைகளும் நம்மை போல் தியானம் யோகபயிற்சியெல்லாம் செய்ய முடியாது இயற்கை சீற்றம் பூகம்பம் போன்றவை வருவதற்கு முன்பே அதை உணர்ந்து கொண்டு அதன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக இயற்கை கொடுத்த வரமாகவே கருதலாம் அதனால்தான் பூகம்பம் வருவதற்கு முன்பே சுற்று புற ஒலி அலைகளில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து பறவைகள் சிதறி பறந்தோடுகிறது நாய்கள் குரைக்கிறது மாடுகள் மற்றும் பல விலங்குகள் மிரண்டு ஓடுகின்றன மழை வரும் முன்பே தும்பி என்ற தட்டான் பூச்சி கூட்டமாக பறக்கிறது தவளைகள் கத்துகின்றன மனித இனம் மட்டும் இந்த விஷயத்தில் செவிடாகவே உள்ளது ஏனென்றால் 20 Hz கீழே உள்ள ஒலி அலைகளை உணர முடிவதில்லை ஏனென்றால் விண்ணிலிருந்து வரக்கூடிய ஒலி மற்றும் பூமியின் காந்த விசை ஒலி பூமி சுழலும் ஒலி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்று மோதி கலந்து மீண்டும் பூமியின் தரையில் மோதும்போது அதன் ஒலி அளவு ஏறக்குறைய 7.83Hz என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் இது 20 Hz க்கும் கீழே உள்ளதால் நாம் கேட்க முடியாது ஆனால் ஐம்புலன்களை கடந்த யோகிகளின் காதுகளில் அது ஒலிக்கும் அதையே நாதபிரம்ம ஒலி என் கூறுகிறார்கள் பிரபஞ்சம் மனிதனுக்கு விதித்த வரையறை எல்லைகளை யோகிகள் கடந்து விடுவதால் அவர்களால் உணர முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை செய்ய முடியாத காரியம் என்று எதுவும் இல்லை காற்றிலே பறக்கவும் நீரிலே நடக்கவும் அரூப நிலையை அடையவும் தொலைவில் நடக்கும் விஷயங்களை காணவும் உணரவும் வல்லவர்கள் ஆகிறார்கள் நீங்கள் மனதுக்குள் பேசும் ஒலி அலைகளும் அவர்களுக்கு  கேட்கும் இங்கிருந்தபடி அண்டசராசரங்களில் ஏற்படும் மாற்றங்களை காண முடியும் ஒரு நொடியில் ஒளிவேகத்தையும் மிஞ்சிய நிலையில் பிரபஞ்சங்களை கடந்து செல்ல முடியும் இந்த உடலுக்கு விதிக்கப்பட்ட நிலைகளை கடந்த நிலைகளையே அஷ்டமா சித்திகள் எனப்படுகிறது அந்த நிலையை அடைந்த மனிதர்கள் சித்தராகிறார்கள்

இந்த 20 Hz லிருந்து 20,000 Hz என்ற ஒலி அலைகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளில்தான் தேவ ரகசியங்கள் ஒளிந்துள்ளது அந்த நிலைகளில் இருப்பவர்கள்தான் சித்தர்கள் ரிஷிகள் ஞானிகள்

இந்த ஓம் என்ற ஒலி தொடர்ந்து குறிப்பிட்ட அலைவரிசையில் உச்சரிக்கபடும்பொழுது ஒரு வாயு இந்த உடலுக்குள் உருவாகி நாடி நரம்பு இரத்தம் DNA மற்றும் அனைத்து கோடிக்கணக்கான உயிரணுவிலும் பரவுவதாக விஞ்ஞானம் கண்டாறிந்துள்ளது அந்த வாயுவின் பெயர் NITRIC AXOID

இந்த Nitric axoid பற்றி விரிவாக அறிந்து கொண்டால் சித்தரகசியங்களும் பிரபஞ்ச ரகசியங்களும் புரியும் எனவே அதுபற்றி விளக்கமாக பார்ப்போம்.

சித்தர்களும் ஞானிகளும் கூறியபடி இதயத்தின் துடிப்பாலும் இரத்த ஓட்டத்தாலும் நாடி நரம்புகளில் பிராணஓட்டம் ஓடுவதாலும் ஸோ ஹம் என்ற உள்சுவாசம் வெளி சுவாசத்தாலும் நாத விந்து கலப்பால் உண்டாகும் ஒளியாலும் ஓங்காரம் ஒலிப்பதாக பலவாறாக கூறியுள்ளார்கள் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அண்டத்தில் உள்ளது எதுவோ அது பிண்டத்திலும் உள்ளது என வெளிப்படையாக சொல்லி வைத்தார்கள் ஆனால் அதில் பல அர்த்தங்கள் உள்ளது

இந்த Nitric oxoid நைட்ரிக் ஆக்சைடு என்ற வாயு என்பது ஓம்ம்ம்ம்ம்ம்ம் என்று இழுக்க படும்போது உண்டாகிறது என விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது அதாவது ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற அநுஸ்வாரம் முக்கியமான பங்காற்றுகிறது ஓ என்பது ம் என்ற சப்தத்தை அழுத்தமாக ஒலிப்பதற்கு உந்து விசையாக Audio amplify போல செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அப்பொழுதான் ம்ம்ம் என்ற அநுஸ்வரம் நீண்ட தொலைவுக்கு பயணப்படும் ஆ ஊ ஓ என்ற எழுத்துக்கள் மட்டுமே நீண்ட தொலைவுகளுக்கு ஒலி அலைகளை கடத்தக்கூடியது அல்லது உந்தி தள்ளி கூடியது

இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்த விஷயத்தை 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஒலைசுவடிகளில் எழுதி ஆவணபடுத்தியுள்ளார்கள்
ஓம் என்ற ஒலி நம் உள் சுவாத்தின் போது அதிகமாக ஆக்ஸிஜன் மற்றும் பிராண சக்தி உள்ளிழுக்கப்பட்டு இரத்த மண்டலத்தில் கலந்து உடலின் உள்ளுறுப்புகளான இதயம் நுரையீரல் கல்லீரல் சிறுநீரகம் இனவிருத்தி சுரப்பிகள் நாடி நரம்புகள்  மற்றும் பல ஹார்மோன்கள் ஆகியவற்றில் பாய்வதோடு நில்லாமல் சூட்சும உடலாகிய பிராண உடலிலும் சென்று நிறைகிறது இதுவே வாசியோகம் சிவயோகம் இராஜயோகம் குண்டலினி யோகம் என்று பலவாறாக சொல்கிறோம்

வேத கால ரிஷிகள் சித்தர்கள் உடலளவிலும் மனதளவிலும் சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளார்கள் மேலும் அவர்களுடைய பீனியல் பிட்யூட்டரி போன்ற சுரப்பிகள் பெரிய பாதாம் பருப்பு அளவுக்கு பெரியதாகவும் அல்லது சிறிய எலுமிச்சம் பழ அளவும் மற்றும் பெருநெல்லி அளவும் இருந்திருக்கலாம் என்றும் ஓலை சுவடிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ஏனென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் மிக பெரிய உருவங்களையும் (Gigantic size) மற்றும் பெரிய தலைப்பகுதியும் கொண்டிருந்தார்கள் எனவும் ஆவணங்கள் கூறுவதாக கண்டறியப்பட்டுள்ளது

மேலும் அவர்கள் உடலில் 12 இழை கொண்ட DNA சமாச்சாரம் முழு அளவில் செயல்பாட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது சந்தேகம் உள்ளவர் 12 strand Nill junk Dna என்று கூகுளில்  தேடிப்பார்க்கவும்

தற்போது உள்ள மனித இனத்திற்கு இரண்டு இழை கொண்ட DNA மட்டுமே செயல்பாட்டில் உள்ளது அதாவது இரண்டு இழை கொண்ட ஒரு ஜோடி Dna என்று கவனத்தில் கொள்ளவும் மீதி உள்ள 10 இழை கொண்ட 5 ஜோடி Dna குப்பையாக உள்ளது அதில் உள்ள தகவல்களை கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அந்த 5 ஜோடி Dna பயன்பாட்டில் இல்லாததால் விஞ்ஞான உலகம் அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை எனவே மருத்துவ ஆவணங்கள் ஒரு ஜோடி Dna வில் உள்ள தகவல்களை மட்டுமே கூறி வந்ததால் நாமும் ஒரு ஜோடி Dna மட்டும்தான் நமக்கு உள்ளது என நம்பி கொண்டிருக்கிறோம்

யோகிகளும் ரிஷிகளும் இந்த ஆறு ஜோடி (12 இழை) Dna க்களை activation செய்து ஐம்புலன்களை வென்று மனித உடலுக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை கடந்து விடுகிறார்கள் இந்த ஆறு ஜோடி Dna வின் சக்தி என்பது சுழுமுனையில் ஒருங்கினைந்து பீனியல் சுரப்பியில் வெளிப்படும்போது ஆறுமுக கடவுளாக வெளிப்படுகிறது யந்திர தகடுகளில் வரையப்படும் ஆறு முக முக்கோணம் இந்த Dna வைதான் குறிக்கிறது ஆறுமுகனுக்கு 12 கரங்கள் இடகலை பிங்கலை என்ற இரண்டு மனைவி மேலும அவர் கையில் முதுகு தண்டை குறிக்கும் வேல் மயில் வாகனம் குறிப்பாக மயில் வாகனம் ஏன் வைத்தார்கள் ? மயிலின் கழுத்தின் உள்ள நிறமும் Dna வில் வெளிப்படும் ஒளியும் ஒரே மாதிரி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள் அதாவது Dna என்பது Ultr violet photon என்ற ஒளியை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள் இது பற்றி அப்புறம் விளக்கமாக பார்ப்போம் இப்போ Nitric Oxide விஷயத்துக்கு வருவோம் இந்த வாயுவானது ஒரு செல் உயிரிகளின் தோற்றத்திற்கு அடிப்படையானது என்றும் மனித இனம் இவற்றிலிருந்தே புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பாம்பாய் பறவையாய் தன் பரிணாம மாற்றத்தை அடைந்து மனித இனம் என்ற நிலையை அடைந்துள்ளது என விஞ்ஞானமும் கூறுகிறது சித்தர்களும் மறைபொருளாக கூறுகிறார்கள்

ஓம்ம்ம்ம் என்ற ஒலியை உள்முகமாக கேட்டு தியானம் செய்து வரும்போது Nitric Oxide உற்பத்தியாகி நாடி நரம்பு இரத்தம் ஆகியவற்றில் கலக்கிறது இதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் அமிர்தமாக சுரக்கிறது அதுவே பேரானந்தம் நித்யானந்தம் சச்சிதானந்தம் பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது அமிர்தம் என்பது சுத்திகரிக்கப்ட்ட கபம் என்று ஒரு வாசியோக நூல் கூறுகிறது அதனுடன் பல ஹார்மோன்கள் சுரக்கும் திரவங்கள் கலந்த சுவையே பஞ்சாமிர்தம் என பல யோகிகளும் ஞானிகளும் கூறியுள்ளார்கள் அந்த கலவையில் ஒன்றுதான் இந்த Nitric oxide மேலும் தற்போதைய விஞ்ஞானத்தில் இந்த Nitric oxide வாயுவை சிரிப்பூட்டும் வாயு Lougfing gass என கூறுகிறார்கள் அதாவது இந்த வாயுவை ஒருவர் முகத்தில் Spray செய்தால் அவர் சிரித்து கொண்டே மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் இருப்பார் அப்படிப்பட்ட வாயு உள்முகமாக கிடைக்கும்போது அதை அனுபவித்தவரின் நிலையையே பேரானந்தம் என கூறப்படுகிறது இப்ப பல உண்மைகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்

மேலும் இந்த Nitric Oxide செய்ய கூடிய நற்பலன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது அவற்றை பார்ப்போம்

இந்த வாயுவானது நம் உடலில் உள்ள 50 டிரில்லியன் உயிரணுக்கள் தங்களுக்கு இடையேயான தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது

நரம்பு மண்டலம் மூளை மற்றும் ஹார்மோன்கள் அவற்றின் Dna அணுக்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையும் தங்களுக்குள் இருக்கும் நினைவுதிறன்களும் அழிந்து போகாமல் இருக்க பாதுகாக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியாகிய Immune system மேம்படுத்தபடுகிறது பாக்டீரியா மற்றும் நோய் தொற்று கிருமிகளிடம் போரிடுகிறது Brain tumer என்ற மாளை கட்டி வராமல் காக்கிறது

இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் மூட்டு எலும்பு தேய்மானம் ஏற்படுவதையும் தடுக்கிறது

தசை மண்டலத்தில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது

ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கிறது ஐம்புலன்களின் செயல்பாடுகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்கிறது

உடலுக்கு சக்தியையும் வலிமையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது Endocrines சுரப்பிகள் வலிமை பெறுகிறது மாரடைப்பு தடுக்கப்பட்டு இதயம் வலிமை பெறுகிறது இந்த உடலே காயகற்பமாக மாறுகிறது சித்தர்கள் கண்ட ரகசியம் இதுதான் என்று கூறி சித்தர்களின் அருளோடும் ஆசியோடும் அனைவரும் அறிந்துகொள்ளட்டும் என்று இதை பதிவிடுகிறேன்.

பதஞ்சலிநாதர்

இறைவன் - பதஞ்சலிநாதர் (மிகக்குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார்)
இறைவி - கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்
தலமரம் - வெள்ளெருக்கு, (தற்போதில்லை)
தீர்த்தம் - சூரிய தீர்த்தம். (கோயிலின் எதிரில் தூர்வாரப்படாமல்  பெருங்குட்டை போலுள்ளது).

கொள்ளிடக்கரையில் உள்ள தலம்.

விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் பாடல் பெற்றது.

    ‘அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும்
         அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
      திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
         தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக்
      குருமணிகள் கொழித்திழிந்து சுழிந்திழியுந் திரைவாய்க்
         கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
      கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
          கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே.’      (சுந்தரர்)
                             
         

ஆலய தொடர்புக்கு:-
ஜெயச்சந்திரன் குருக்கள்
Mob # 97903 33377, 98946 84269
  
அமைவிடம்:-
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, ‘மோவூர்’ தாண்டி, சாலையில் ‘முட்டம்’ என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. (இடப்புறமாக) சென்று ‘முட்டம்’ கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே 1 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது.
***************************************************************************************
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள் பின்வருமாறு:-

1. திருநாரையூர் – சௌந்தரேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் போகும் வழியில் 18 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8
    கி.மீ தொலைவிலும் உள்ளது.

2. காட்டுமன்னார்கோயில் (உடையார்குடி) – அனந்தீஸ்வரர் திருக்கோயில்
    காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

3. மேலக்கடம்பூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
 
4. கீழக்கடம்பூர் – ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்
    மேலக்கடம்பூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருக்கானாட்டுமுல்லூர் - பதஞ்சலிநாதர் திருக்கோயில் * * * * *
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கீழக்கடம்பூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

6. ஓமாம்புலியூர் - பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)   
    திருக்கானாட்டுமுல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. இலுப்பைப்பட்டு (திருமண்ணிப்படிக்கரை) – நீலகண்டேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    ஓமாம்புலியூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.

8. பாப்பாகுடி - வரதராஜ பெருமாள் திருக்கோயில்
    நீலகண்டேசுவரர் கோயிலில் இருந்து 500 மீ தொலைவில் உள்ளது.

9. திருவாளபுத்தூர் (திருவாழ்கொளிப்புத்தூர்) – ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    இலுப்பைப்பட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

* திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.
இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.

Please share & invite your friends to like this page.

https://www.facebook.com/pg/ancienttemplesintamilnadu/photos/?tab=albums

குனிகரின் யோசனையும், ஷகுனியின் கேலிகளும்!

குனிகரின் யோசனையும், ஷகுனியின் கேலிகளும்!
தன்னிரு கரங்களையும் ஆசீர்வதிக்கும் பாவனையில் கூப்பியவண்ணம் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் எதிரே நின்று துரோணர் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மந்திரங்களை உச்சரித்த வண்ணம் குருவம்சத்தினருக்கு ஆசிகளை வழங்கினார். ம்ம்ம்ம்ம்ம் ஆனால், பாண்டவர்கள் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால்! இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு சபை கூட்டப்பட்டிருந்தால்? என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்தை மட்டும் அவரால் தவிர்க்க முடியவில்லை. பாண்டவர்கள் ஐவருமே அவரின் பிரியத்துக்கு உகந்த மாணாக்கர்கள் தான். ஆனால்!!!!!!! அவர் மனதில் வருத்தம் சூழ்ந்தது. முட்டாள் தனமாக யுதிஷ்டிரனை யுவராஜ்ய பதவியிலிருந்து அகற்றவேண்டி துரியோதனனுக்கு யோசனை சொன்னது அவரன்றோ! ஆனால் அதற்கு ஒரு காரணமும் அப்போது இருந்தது. ஆத்திரமும், ஆங்காரமும் நிறைந்த துரியோதனனைத் தன் வழிக்குக் கொண்டு வந்து ஹஸ்தினாபுரத்தையே நாம் மறைமுகமாக ஆட்சி செய்யலாம் என்றல்லவோ துரோணர் நினைத்தார்! குருவம்சத்தினரும், ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும் நம் கைகளில் என்றல்லவோ துரோணர் நினைத்திருந்தார். அவர் எண்ணம் பொய்த்துவிட்டது. இன்று வரை அவர் போட்ட திட்டங்கள் பொய்த்ததில்லை. இது தான் முதல்முறையாக இருக்கும். நேர்மையும், நற்குணமும் வாய்ந்ததொரு லக்ஷியவாதிக்கு வழிகாட்டுவது எளிது. ஆனால்!! ஆத்திரத்துடன் நடந்து கொண்டு அதிர்ச்சி உண்டாக்கும் வண்ணம் நடந்து கொள்ளும் ஒரு முட்டாளை எவ்விதம் கையாளுவது!
தன்னிடத்தில் போய் அமர்ந்து கொண்ட ஆசாரியர் துரோணரிடம் அதுவரை சபையில் நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளின் சாரத்தை திருதராஷ்டிரன் தெரிவித்தான். “மரியாதைக்குரிய ஆசாரியரே, ஒரு முக்கியமான முடிவை இப்போது நாம் எடுத்தாக வேண்டும். துருபதனின் அழைப்பை ஏற்று நம் இளவரசர்களை திரெளபதியின் சுயம்வரத்தில் பங்கு கொள்ள அனுப்பி வைக்கலாமா? அது சரியானதா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். தன் குருட்டுக் கண்களை மகன் துரியோதனன் இருக்கும் பக்கம் திருப்பிய வண்ணம் திருதராஷ்டிரன் மேலும் கூறினான்:” இது ஒரு முக்கியமான விஷயம். நாமே கவனித்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று. அவசரமாக எந்த முடிவுக்கும் வரக்கூடாது. ஏனெனில் பாஞ்சால நாட்டு அரசன் நம் நண்பன் அல்ல; எதிரி. அவன் மகளை நம் இளவரசர்களில் ஒருவருக்கு மணமுடித்து நம் அரண்மனைக்கும், நம் நாட்டுக்கும் அழைத்து வருவது முடிவில்லாத கிளர்ச்சிகளிலும், அதன் மூலம் பேராபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடும். “ துரோணர் பீஷ்மபிதாமகரின் அவரின் மன ஆழத்தை அளக்க விரும்புபவர் போல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தார். ஆனால் எதற்கும் கலங்காத பீஷ்மரோ சற்றே அநிச்சையாகத் தன் முகத்துத் தாடியைத் தடவிக் கொடுத்தவண்ணம் எவர் அறிவுக்கும் எட்டாவண்ணம் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். அதற்குள் திருதராஷ்டிரன், குனிகனைப் பார்த்து, “குனிகா, நீ எங்களிடம் சொன்னதை அப்படியே ஆசாரியரிடம் சொல்வாயாக!” என உத்திரவிட்டான். தன் கைகளைக் கூப்பியவண்ணம் மிகவும் வயதான மூத்த மந்திரி குனிகன், முதுமையின் காரணத்தால் ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் கண்ணிமைகளோடு சிரமப்பட்டுப் பார்த்துக் கொண்டு பேசலானான். “அரசே, தங்கள் கட்டளைப்படியே! பிதாமகர் பீஷ்மரின் உத்தரவும் அநுமதியும் பெற்றுக் கொண்டு நான் முன்னர் பேசியதைத் திரும்பச் சொல்கிறேன். பாஞ்சாலம் நம் பக்கம் ஒரு கூரிய முள்ளைப்போல் உள்ள நாடு. கிழக்கே நாம் எந்தப் போரும் செய்ய முடியாமல் எங்கேயும் வெற்றி அடைய முடியாமல் தடுத்த வண்ணம் உள்ளது. உறுதியான தீர்மானங்களை எடுக்கும் துருபதன் நீண்டநாட்களாக நம்முடன் போர் புரிய ஆயத்தங்கள் செய்து வருகிறான். இதோ, இங்கே வீற்றிருக்கும், நம் மரியாதைக்குரிய அரச குரு, நம் படைகளின் தலைவர் ஆசாரியர் துரோணரைத் தன் முக்கிய எதிரியாகக் கருதியும் வருகிறான். அவன் மகன் யுவராஜா த்ருஷ்டத்யும்னனின் வீரத்தைக் குறித்தோ, அவன் மேன்மேலும் உயர்வடைய விருப்பம் கொண்டவன் என்பதிலோ, எதையும் எளிதில் மன்னிக்கும் சுபாவம் இல்லாதவன் என்பதிலோ நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இளவரசி கிருஷ்ணா என அழைக்கப்படும் திரெளபதியோ அசாத்திய மனோபலம் கொண்டவளாகவும் தன் தகப்பனின் அனைத்துக் குறைகளையும் ஏற்றுக் கொண்டு அவளும் அதே அளவு குறைகளை உடையவளாகவும் தகப்பனின் சபதத்தை முடிப்பதில் தீர்மானம் கொண்டவளாகவும் இருக்கிறாள் என ஒற்றர்கள் மூலம் விசாரித்து அறிந்ததில் தெரிய வருகிறது.”
“நம் பிதாமகர் பீஷ்மர் மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடு ஹஸ்தினாபுரத்தின் நிர்வாகத்தையும், குருவம்சத்தினரையும் பாதுகாத்து வருகிறார். இப்போது இந்தப் பாஞ்சால இளவரசி மட்டும் நம் இளவரசர்களில் ஒருவருக்கு மனைவியாக இந்த அரண்மனையிலும், ஹஸ்தினாபுரத்திலும் அடி எடுத்து வைத்தாளானால், இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதோடு அல்லாமல் பெரும் ஆபத்துக்களும் நேரிடலாம். புனிதமான பரத அரசனின் நினைவைப் போற்றும் வண்ணம் உருவான குரு வம்சத்தினருக்குப் பெரிய விபத்து நேரிடலாம். பிதாமகரே, அரசே, ஆசாரியர்களே, இளவரசர்களே, சபையோர்களே, மனுநீதியில் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூர விரும்புகிறேன். மனு நீதியில், “ஒரு பெண்ணை மணந்து கொள்ளும் முன்னர் அவள் பெற்றோர் வந்த வழியையும் கவனித்துப் பாருங்கள்.” என்று சொல்லி இருப்பதை நினைவூட்டுகிறேன். இதைத் தவிரவும் ஒரு முக்கியமான கறை அந்தக் குடும்பத்தில் உள்ளது. திரெளபதியின் சகோதரர்களில் ஒருவன், துருபதனின் மகன்களில் ஒருவன், ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்று சொல்கின்றனர். மாட்சிமை பொருந்திய சபையோர்களே, அவனுக்கு தஷார்னாவின் இளவரசியை மணமுடித்திருக்கின்றனர். “ “ஆஹா, என்ன சொல்ல! அந்த இளவரசியை இந்த இளவரசனோடு வாழ வேண்டி காம்பில்யம் அழைத்து வரும் சமயம்--- இந்த இளவரசன் --- அல்லது இளவரசி—எப்படி வேண்டுமோ சொல்லிக் கொள்ளுங்கள்---- இவன் நாட்டை விட்டே ஓடி விட்டானாம். அதுவும் சக்கரவர்த்தி துருபதன் தான் இப்படிச் செய்துவிட்டான் என்கின்றனர். இவன் ஆணில்லை, பெண் என்பது அவனை மணமுடித்த அந்த இளவரசிக்குத் தெரிந்து விட்டால்? அதன் மூலம் தனக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு விடும் என்பதால் துருபதனே அவனை நாட்டை விட்டு ஓடச் செய்துவிட்டான் எனப் பேசிக் கொள்கின்றனர். “ இத்தனையையும் பேசி முடித்த குனிகன் மீண்டும் தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் அனைவரையும் வணங்கினான். ஆசாரியர் துரோணருக்கு ஷிகண்டினின் மறைவு குறித்து உலகத்தார் பேசிக் கொள்ளும் விதம் பற்றி ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ம்ம்ம்ம்ம்… குனிகனுக்குத் தெரியாது. ஆசாரியர் துரோணர் தான் ஷிகண்டினை ஒரு மாபெரும் வீரனாகவும், பூரண ஆண்மகனாகவும், ஒரு கதாநாயகனாகவும் மாற்றப் போகிறார் என்பதைக் குனிகன் அறிய மாட்டான். துரியோதனனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை. அவன் கோபத்தோடு குனிகனைப் பார்த்தான். வெடுக்கென்று பேச ஆரம்பித்தான். “ குனிகரே, குரு வம்சத்து இளவரசர்களை என்னவென்று நினைத்தீர்கள்? அவர்கள் அவ்வளவு பலஹீனமானவர்களா? தங்கள் மனைவியரின் கைப்பாவைகளாக ஆடுவார்களென்றா நினைத்தீர்கள்?” என்று கோபமாய்க் கேட்டான்.
“யுவராஜாவின் மன்னிப்பைக் கோருகிறேன்.” வயது முதிர்ந்தவரானாலும் அரச குலத்தவருக்கு அளிக்கும் மரியாதையில் இருந்து சற்றும் தவறாத குனிகர் மேலும் தொடர்ந்து, “ வீட்டுக்கு வரும் மருமகளின் கைகளிலிருந்து எந்த மனிதனும், எந்தக் குடும்பமும் தப்ப இயலாது. அதோடு சாந்தமான மருமகளாக இருந்தாலுமே, ஒரு கணவனுக்கு மனைவியானதுமே எந்தப் பெண்ணுமே கடைசியில் அவனை ஒரு மந்தமானவனாக, முட்டாளாக மாற்றிவிடுவாள் என்று பழைய பழமொழி ஒன்று சொல்லும். ஆனால் யுவராஜா அவர்களே, இவளோ? மன உறுதிக்கும் திடத்துக்கும் பெயர் போன பெண்மணி. இவளால் என்னதான் முடியாது?” துரோணருக்கு துரியோதனன் மனதில் ஓடும் எண்ணங்கள் தெளிவாகப் புரிந்தன; பானுமதி சரியாகத் தான் சொல்லி இருக்கிறாள். துரியோதனன் எவ்வாறேனும் திரெளபதியின் கரம் பிடிக்கத் துடிக்கிறான். அதில் சந்தேகமே இல்லை. இப்போது அரசனின் கண்கள் ஷகுனி வீற்றிருந்த திசையில் திரும்பின. “காந்தார இளவரசே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டான். இகழ்ச்சியான பார்வை ஒன்றை வீசினார் துரோணர். அவர் தன் எண்ணத்தைச் சற்றும் மறைக்கவில்லை. தன் மாணாக்கனைக் கெடுத்து அவனுக்குக் கேடு விளைவிக்கும் எண்ணங்களை அவன் மனதில் புகுத்தும் இந்தப் போக்கிரியை அவர் வெறுத்தார். துரியோதனன் மேல் அவன் செலுத்தும் ஆதிக்கத்தையும் வெறுத்தார். இதன் மூலம் குரு வம்சத்தின் ராஜ சபைக்கும், அதன் நடவடிக்கைக்கும் அவன் கொடுக்கும் ஓயாத தொல்லைகளையும் அவரால் பொறுக்க இயலவில்லை. எதற்கும் கவலைப் படாத ஷகுனி சிரித்தான். “ கற்றறிந்த, வயதில் மூத்தவரான, விவேகமுள்ள மந்திரி குனிகனின் கருத்தோடு என் கருத்து சற்றும் ஒத்துப் போகாது. ஆனால் பெருமை மிகுந்த பரத வம்சத்தினரின் இந்த ராஜசபைக்கு உரிய நியாயத்தோடு அவர் நடந்து கொள்ளவில்லை.” ஒரு வெற்றிப் புன்முறுவலோடு துரியோதனனையும் துஷ்சாசனையும் பார்த்த ஷகுனி மேலும் தொடர்ந்து, “குரு வம்சத்தினரின் இளவரசர்கள் என்ன கோழைகளா? சிங்கங்கள், சிங்கக் குட்டிகள். பாஞ்சால நாட்டு இளவரசி இவர்களில் ஒருவனை மணந்தால் அவனுக்கு விசுவாசமுள்ள மனைவியாக இருப்பதல்லாமல் அவளால் வேறென்ன செய்ய முடியும்? “ துரியோதனனைப் பார்த்துக் கண்ணடித்த வண்ணம் இதைச் சொன்ன ஷகுனி மேலும் அவனுடைய பாதி ஏளனமானதும், பாதி கேலியானதுமான தொனியில் தொடர்ந்து, “பிதாமகர் பீஷ்மர் அல்லவோ குரு வம்சத்தின் பாதுகாவலர்! அவர் இருக்கையில் என்ன பிரச்னை! துரியோதனன் யுவராஜா! மந்திரி குனிகனோ நல்லமுறையில் ஆலோசனைகள் சொல்வதில் வல்லவர், அதோடு நம் தளபதியான ஆசாரியர் துரோணர் இருக்கையில் என்ன கவலை நமக்கு? போர்களை எல்லாம் ஜெயிப்பது தானே நம் வேலை? ஒரு இளவரசனால் வேறென்னதான் செய்ய இயலும்?”

HINDU A DIFFERENT VIEW

https://www.youtube.com/watch?v=e58i_4lARgQ

CASTE A DIFFERENT VIEW

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?

திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.

கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு – சக்தி, கொடித் துணி – ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு – பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்

கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன.

இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.

நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை
#
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்
#OmNamaSivaya #ஒம்நமசிவாய

INDIAN ARMED FORCES EXEMPTED TOLL