Thursday, June 7, 2018

பதஞ்சலிநாதர்

இறைவன் - பதஞ்சலிநாதர் (மிகக்குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார்)
இறைவி - கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்
தலமரம் - வெள்ளெருக்கு, (தற்போதில்லை)
தீர்த்தம் - சூரிய தீர்த்தம். (கோயிலின் எதிரில் தூர்வாரப்படாமல்  பெருங்குட்டை போலுள்ளது).

கொள்ளிடக்கரையில் உள்ள தலம்.

விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் பாடல் பெற்றது.

    ‘அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும்
         அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
      திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
         தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக்
      குருமணிகள் கொழித்திழிந்து சுழிந்திழியுந் திரைவாய்க்
         கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
      கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
          கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே.’      (சுந்தரர்)
                             
         

ஆலய தொடர்புக்கு:-
ஜெயச்சந்திரன் குருக்கள்
Mob # 97903 33377, 98946 84269
  
அமைவிடம்:-
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, ‘மோவூர்’ தாண்டி, சாலையில் ‘முட்டம்’ என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. (இடப்புறமாக) சென்று ‘முட்டம்’ கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே 1 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது.
***************************************************************************************
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள் பின்வருமாறு:-

1. திருநாரையூர் – சௌந்தரேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் போகும் வழியில் 18 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8
    கி.மீ தொலைவிலும் உள்ளது.

2. காட்டுமன்னார்கோயில் (உடையார்குடி) – அனந்தீஸ்வரர் திருக்கோயில்
    காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

3. மேலக்கடம்பூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
 
4. கீழக்கடம்பூர் – ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்
    மேலக்கடம்பூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருக்கானாட்டுமுல்லூர் - பதஞ்சலிநாதர் திருக்கோயில் * * * * *
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கீழக்கடம்பூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

6. ஓமாம்புலியூர் - பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)   
    திருக்கானாட்டுமுல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. இலுப்பைப்பட்டு (திருமண்ணிப்படிக்கரை) – நீலகண்டேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    ஓமாம்புலியூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.

8. பாப்பாகுடி - வரதராஜ பெருமாள் திருக்கோயில்
    நீலகண்டேசுவரர் கோயிலில் இருந்து 500 மீ தொலைவில் உள்ளது.

9. திருவாளபுத்தூர் (திருவாழ்கொளிப்புத்தூர்) – ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    இலுப்பைப்பட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

* திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.
இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.

Please share & invite your friends to like this page.

https://www.facebook.com/pg/ancienttemplesintamilnadu/photos/?tab=albums

No comments:

Post a Comment