Saturday, February 8, 2020

ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடு


*ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு.*

*விளம்பரத்தை விலக்கு!*
***************************

*1. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் ஆன்மீக முறைகளையும் வெளிக்காட்ட கூடாது.*

 பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோகமுறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும் போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன.அவர் அதை வெளிபடுத்த காரணமே தன்னை பற்றி பெருமைபட்டு கொள்ளவோ அல்லது தனது முறைகளை பெருமைபடுத்த முற்படுவதே ஆகும். இதில் அவரை பற்றி வெளிபடுத்தும் போது அவரின் ஆணவம் அதிகமாகின்றது. அவரின் முறைகளை பற்றி வெளிபடுத்தும் போது தேவையில்லாத கேலி பேச்சுகளுக்கு ஆளாகின்றார். ஆன்மீகத்தில் உயர்வுநிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான். அதாவது மனதில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ!! மிகவும் அசாதாரண மனிதனும் அவனே. அதாவது அவனால் மட்டும்தான் அசாதாரண செயல்களை செய்யமுடியும். எங்கே எளிமையும், பணிவும் உள்ளதோ!! அங்கே ஆணவமும் ஆடம்பரமும் இருக்காது!! மாறாக அவனிருப்பான்!! ஆன்மீகத்தை பொறுத்தவரை மறைந்து வாழ்பவனுக்கு, அதாவது தன்னை மறைத்து வாழ்பவனுக்கே அனைத்தும் எளிது. அவன் தன்னை எந்த சூழ்நிலையிலும் வெளிபடுத்த மாட்டான். எளிமை என்ற வாழ்க்கையே அனைத்திற்கும் ஆதாரம்.

*கர்மா கரையும்வரை காத்திரு|*
***********************************

*2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை!! இதற்கு காரணம் என்ன??*

ஒருவன் ஒரு முறையை கடைபிடிக்க தொடங்கும் போதே அது அதன் வேலையை தொடங்கிவிடுகின்றது. ஆனால் அது முதலில் வேலை செய்வது அவன் கர்மவினையில் ஆகும். அதாவது முதலில் வாங்கிய கடனை அடைத்த பிறகுதான் சேமிக்க முடியும். இதை புரிந்து கொள்ளாமல் ஆன்மீகத்தில் முன்னேற நிறைய பொருமை அவசியம் என்று கதைகட்டி விட்டார்கள்.

*எண்ணத்திலும் தூய்மை ஏற்படுத்து!*
******************************************

*3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் ஏன் கஷ்டபடுகின்றனர்??*

இதற்கு காரணம் அவர்களே!! அதாவது நுழைந்தால் மட்டும் போதுமா?? அவர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்ற வேண்டாமா!! முன்பே சொன்னது போல் ஒரு பயிற்சியை கடைபிடிக்கும் போது அது வேலை செய்வது அவன் கர்மாவில் ஆகும். இவன் அந்த சமயத்தில் அடுத்தவர்களுக்கு தன் எண்ணங்களால் தீங்கு நினைக்கும்போது அது அவனுக்கே திருப்பப்படுகின்றது. அதுவும் அவனுக்கு அதுபோன்ற எண்ணங்களை வரவிடாமல் தடுப்பதற்கு ஆகும். நல்ல எண்ணம், சொல், செயல் உருவாக்கி கொண்டால் போதும். கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

*பிரபஞ்ச இரகசியத்தை பிரபலப்படுத்தாதே!*
*************************************************

*4.ஆன்மீக அனுபவங்களை பகிர வேண்டாம்!!*

 ஒருநிலைக்கு மேல் செல்லும்போது பலவிதமான அனுபவங்களும் இரகசியங்களும் கிடைக்கும். இதை வெளிபடுத்துவது என்பது தன்னை பற்றி பெருமைபட்டு கொள்வதற்காகவே, மேலும் பக்குவநிலைக்கு தகுந்தவாறே இரகசியங்கள் கற்பிக்கபடுகின்றன. இதை வெளிபடுத்தும் போது அடுத்து வரவிருக்கும் பாடங்கள் தடைசெய்ய படுகின்றன.

*அடுத்தவர்களை அம்பலப்படுத்தாதே!*
*******************************************

*5. அடுத்தவர் முறைகளில் தலையிட வேண்டாம்!!*

 ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதைகளில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று நீங்கள் உணர்ந்தால், அதை சொல்வதற்கு நீங்கள் ஆன்மீகத்தில் கரைகண்டவராக கரைகடந்தவராக இருக்க வேண்டும். இது மனதில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிட தோன்றாது.

எவனொருவன் தன்னை தாழ்த்தி கொள்கின்றானோ, அவனே ஆன்மீகத்தின் உச்சநிலையை எளிதாக அடையமுடியும். இறைவன் தான் குறிகோள் என்றால் நமது கடமைகளிலும் இறைவனின் மீது மட்டும் மனம் செலுத்த வேண்டும். அதுதான் ஆன்மீகத்திற்கு உண்டான எளிமையான பாதை. உங்களை நீங்கள் வெளிகாட்டி கொள்ளாத வரை எந்த ஒரு எதிர்பார்ப்பிற்குள்ளும் சிக்க வாய்ப்பே இல்லை. எளிமை, பணிவு, அன்பு, தன்னை தாழ்த்தி கொள்ளுதல், மறைந்து வாழ்வது(தன்னை(நான்) மறைத்து வாழ்வது) போன்ற நல்ல குணங்களை வளர்த்து கொள்பவர்களுக்கு ஆன்மீகமும் வாழ்க்கையும் எளிமையானது!!! இனிமையானது!!

          - *சித்தர்களின் குரல்*

No comments:

Post a Comment