Thursday, September 13, 2018

காயத்ரி ஜபம்


காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் "சொல்வது" என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர்.  அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே.  வருடக்கணக்காக இந்தப் பயிற்சியை இப்படியே செய்து கொண்டிருப்பது மந்தமான மாணவருக்கு அடையாளம்.  அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்.

ஸ்ரீராம, கிருஷ்ண, சிவ நாமங்கள் உள்ளிட்ட தெய்வீக மந்திரங்களை வாய்விட்டுப் பாடுவது கீர்த்தனம் எனப்படும். அதற்கு மாறாக, ஜபம் என்பது கண்களை மூடி அகத்தைக் குவித்து செய்யப் படுவது. ஜபத்திற்கு முன்பாக பிராணாயாமம் செய்யவேண்டும் என்ற விதி உள்ளதன் காரணம், பிராணன் என்ற நூலேணியைப் பற்றியே அகத்தின் அடுக்குகளுக்குச் செல்ல முடியும் என்பதால் தான்.  இந்த  ஆன்மீக தத்துவங்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத கிறிஸ்தவம் என்கிற பேய் மதத்தினர் தங்களது பிசாசுத்தனமான அலறல்களையும் கூச்சல்களையும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் ஜெபம் என்று அழைப்பதும்,  ஜெபவீடு,  ஜெபக்கூடம் என்றெல்லாம் அவர்களது ஆக்கிரமிப்பு அவலட்ணங்களுக்குப் பெயர்கள் வைப்பதும், அதை நாம் தட்டிக்கேட்காமல் வெட்கமின்றி சகித்துக் கொண்டிருப்பதும்,  காலத்தின் கொடூரங்கள். 

நிற்க. மந்திரத்தை உதடுகளால் உச்சரிப்பது வைகரீ ஜபம்.  உரத்த உச்சரிப்பு சூழலில் லௌகிக ஓசைகள் மிக அதிகமாக இருந்தால் அவற்றை  அடக்க உதவுகிறது.  பின்பு, ரகசியம் பேசுவது போன்ற மெல்லோசையுடனோ அல்லது ஓசையின்றியோ உதடுகள் லேசாக அசையும் வகையில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  'ஜப' என்ற சொல்லின் நேர்ப்பொருள் whispering, muttering என்பது. உபாம்ஶு ஜபம் எனவும் இதைக் கூறுவார்கள்.  அடுத்ததாக, எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.  மனதில் லயம் தவறுவதாகத் தோன்றினால், அதை மீண்டும் மீட்டிக் கொள்வதற்காக மந்திரத்தை மெதுவாகவோ அல்லது வாய்விட்டோ கூறிக்கொண்டு பிறகு மானஸிக ஜபத்திற்குத் திரும்பலாம் என்று சுவாமி சிவானந்தர் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

மந்திரத்தை உச்சரிப்பதல்ல, அதன் பொருளை தியானிப்பதே ஜபம் என்று பதஞ்சலி யோக சூத்திரம் கூறுகிறது.  இதன்மூலம் ஜபம் தன்னளவில் சிறந்த ஆன்மீகப் பயிற்சி என்பதோடு, அதனினும் நுட்பமான தியானம் என்ற உளப்பயிற்சியில் ஆழ்வதற்கான ஒரு படிநிலை என்று கருதவும் இடமிருக்கிறது.

பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின்  உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் சுலோக வடிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 

मुक्ता-विद्रुम-हेम-नील-धवलच्छायै-र्मुखैस्त्रीक्षणै-
र्युक्तामिन्दुकला-निबद्धमुकुटां तत्त्वार्थ-वर्णात्मिकाम्‌ ।
गायत्रीं वरदाऽभयांकुश-कशाः शुभ्रं कपालं गदां
शंखं-चक्र-मथारविन्दयुगलं हस्तै-र्वहन्तीं भजे ॥

முக்தா-வித்³ரும-ஹேம-நீல-த⁴வலச்
சா²யைர்-முகை²ஸ்த்ரீக்ஷணைர்-
யுக்தாமிந்து³கலா-நிப³த்³த⁴முகுடாம்ʼ
தத்த்வார்த²-வர்ணாத்மிகாம்‌ | 
கா³யத்ரீம்ʼ வரதா³(அ)ப⁴யாங்குஶ-கஶா​:
ஶுப்⁴ரம்ʼ கபாலம்ʼ க³தா³ம்ʼ
ஶங்க²ம்ʼ-சக்ர-மதா²ரவிந்த³யுக³லம்ʼ
ஹஸ்தைர்-வஹந்தீம்ʼ ப⁴ஜே ||

முத்து பவளம் பொன் நீலம் வெண்மை வண்ணங்களுடன் கூடிய திருமுகங்களில் முக்கண்களுடையவள்.  சந்திரகலையை மகுடத்தில் தரித்தவள்.  தத்துவ மெய்ப்பொருளைக் கூறும் எழுத்துக்களின் வடிவானவள்.  வரமும் அபயமும் அருளும் கரங்களுடன், அங்குசம், சாட்டை, வெண்மையான கபாலம், கதை, சங்கு, சக்கரம், தாமரை மலர் இணைகள் ஆகியவற்றைக் கரங்களில் தாங்கியவள்.  அந்த காயத்ரி தேவியைப் போற்றுகிறேன்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ரூப லட்சணங்களுடன் கூடிய அற்புதமான தியான ரூபம் இது. சிறு வயதில் காயத்ரி மந்திர ஜபத்தைப் பயிற்சி செய்யத் தொடங்குபவர்களுக்கு  மிகவும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றே இவ்வளவு விஸ்தாரமான தியான ரூபம் கூறப்படுள்ளது என்று நான் எண்ணி வியந்ததுண்டு.  எனது சொந்த அனுபவத்தில், சிறு வயது முதலே, ஓம், பூர்ப்புவஸ்ஸுவ:,  என்று தொடங்கி ப்ரசோதயாத் வரையுள்ள மந்திரத்தின் ஐந்து பகுதிகளை  ஐந்து முகங்களுடன்  பொருத்தி, ஒவ்வொரு முறையும் அந்த முகங்களில் மனத்தை நிலைக்கச் செய்யும் பயிற்சியை  உருவாக்கிக் கொண்டிருந்தேன்.  அந்த முகங்கள்  அவற்றுக்கான லட்சணங்களுடன் அதே சமயம் பல்வேறு விதமாகக்  கற்பனைக்கெட்டாத வகையில் தோன்றிக் கொண்டே செல்லும் அனுபவமும் ஏற்பட்டதுண்டு. பின்பு, ஐந்து முகங்களை ஐந்து தாமரைகளாக,  ஐந்து வண்ண ஒளிகளாக, ஐந்து சுடர்களாக என்று பலவகையில் தியானித்ததும் உண்டு.  ஜபம் வளர்ந்து செல்லச்செல்ல சிறிது நேரத்தில் அவையனைத்தும் முற்றாக ஒரு ஒளியில் கரைந்து போவதாகவும்  உணர்ந்ததுண்டு.  பின்பு, உருவமின்றி மந்திரத்தின் அக்ஷரங்களின் மீதே மனத்தை செலுத்தி ஜபம் செய்யும் பயிற்சியையும் அடைந்ததுண்டு.

காயத்ரி மந்திரத்தின் மகிமையும் பெருமையும் அளவிடற்கரியது. இன்று  காயத்ரி மந்திரம் பல பள்ளிகளின் வழிபாட்டுப் பாடலாகவும்,  'காயத்ரி பரிவார்' உள்ளிட்ட இயக்கங்கள் அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் பரவலாகியுள்ளது  மிகவும் மகிழ்ச்சியளிக்கக்  கூடிய விஷயம்.  இந்த மகாமந்திரத்தை  அதன் முழுப்பலனும் விளங்குமாறு ஜபமும் தியானமும் இணைத்து  முறையாகக் கற்பித்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும். 

#காயத்ரி #மந்திரம் #ஜபம் #தியானம் #யோகம்
Some people have asked me about Japa or mediation whether we have copied it from Christians or we are following that religion. I have been explaining to them patiently that it is from our scriptures.
Lord Krishna says in Bhagavadgita ( Chapter 10) " Yajnaanaam Japa yajno' smi" meaning" among sacrifices, l am Japa".
We should accept that we and our previous one or two generations failed to read our literature and followed westerners ( White men) blindly with slavish mentality and still continue with it. Such attitude should change.
We should say that these are from our scriptures.

ஆசமனம், பிராணாயாமம்,சங்கல்பம், மார்ஜனம், ஜல அபி மந்த்ரனம், புனர் மார்ஜனம், ஆர்க்கிய பிரதானம், கேசவாதி தர்ப்பணம், சமஸ்த் பூத உச்சாடனம், ஆசன சுத்தி, காயத்ரி ஆவாஹனம், காயத்ரி stotram, அங்க ந்யாஸம் , பிராணயாமம் கர ந்யாஸம், ஷடங்க ந்யாஸம், த்யானம், காயத்ரி ஜபம்...
//நம்மை சுற்றியுள்ள துஸ்ட்டகிரகங்கள்//

In general there is no equivalent to Satan (from Christianity)  in our Hindu tradition in my learning.
the lord  is in complete control of things

So one need not worry too much.

Just like in any other aspect (Carnatic music appreciation or Weight lifting in the gym) as one spends more time one grabs more depth and more attachment to sadhana.

One tends to find Sadhana is in a sense its own goal

(if you can attach and interact with God and god is kind enough to appear in mantra and deity form, what more one needs both metaphorically and literally) 

(Grahas etc cannot and will not control our relation to the Goddess.
if our practice isnt going great

a) we can do it better next time. God is kind
b) Goddess herself might limit our awareness of her complete control over things again for our own good.

This is the best understanding that i can glean from understanding of vedas / mantras   
)

Having said that, one cannot be cavalier about sadhana. Focus and care helps practice and also helps bond with the lord and thus mature emotionally too.

hence the nyasa and other mantras to get us to that mental state
(this is my understanding after chatting with people who practice this japa and based on my own chanting of other mantras )

*கடவுளை உணர்ந்தேன் :*

*கடவுளை உணர்ந்தேன் :*

எவர் எவரோ எழுதி வைத்த நூல்களை கற்றேன் ஆராய்ந்தேன், வேதங்களை கற்றேன், ஆராய்ந்தேன், ஆனால் கடவுளை உணர முடிய வில்லை. சிவன் விஷ்ணு, பிரம்மா, எனும் கடவுளர்களின் வரிசையில் எவர் பெயரை சொன்னாலும் அன்னியமாக பட்டது. பிறர் எழுதி வைத்த அனுபவ நூல்களையும் ஆராய்ந்ததில் உயிர் ஒன்றே கடவுள் என உணர்ந்தேன். ஆம் அது ஒன்றே எனது சொந்த பொருளாக பட்டது. அதை மட்டுமே என்னால் உணர முடிந்தது. கற்பனை கடவுளர்கள் எவரையும் என்னால் காண இயலவில்லை. தவத்தினால் உயிரை மட்டுமே உணரமுடிகிறது. உலகின் ஏக கடவுள் உயிர் மட்டுமே.

கன்று தன் தாய்ப்பசுவை அழைப்பது போல், நான் என் உயிர் கடவுளை அன்பு கூடி அழைக்கிறேன், உயிர் ஞான பால் அருந்தவே.

அவன் என்றும் அழியாத தன்மையுடன் நின்று அருள் வழங்குகிறான். தம் குற்றங்களைக் களைந்து, நற் குணங்களைப் பயின்று உயிரை நாடி இருப்பார்கள் அவனுடன் இரண்டற கலந்திருந்து பேரானந்தம் பெறலாம். அறியாமையால் அகத்து ஈசன் உன்னை உணராது, புறத்தே உன்னை வாழ்நாள் முழுக்க தேடி தேடி காலன் ஓலை வந்த பின்பு மாண்டு போன கோடா கோடி மாந்தர் போல் இனியும் எம் மாந்தர் குலம் அழியாது காத்திடுவாய் என்னுயிரே.

அகத்துளே சென்று, ஆதி நாத உயிர் கடவுள் நீதான் என்றுணர இன்னும் எத்தனை காலமுள்ளதோ?
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

*சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி பற்றிய அபூர்வ குறிப்புகள்*

*சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி பற்றிய அபூர்வ குறிப்புகள்*
**************************************************************

குண்டலினி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட  இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை  பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை  காண்போம்.

-திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர
உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,
வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு,
இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும்
இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல
துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை  வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.

நன்றாக கவனித்து பார்த்தீர்களானால்
ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை
கொண்டுள்ளவை. இந்த தொடரில்
ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை
சித்தர்கள் பார்வையாக நான் என்ன பார்க்கிறேன்
என்பதை இந்த கட்டுரை சொல்லும்.

அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல்  பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில்  மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது.

இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த  நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல்
உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலி
பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில்
இருந்து ஒரு பாடல். கைவசம் மூல நூல்
இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள்
இங்கே.

"யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும்
அறியார்கள் ஓர் வாசல்
அது கடையோர முன்வாசல்......"

".....மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி
முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை
நோக்கி...."

நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன
என்பதை அறிவோம். அவை மூலம் முதல்
துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம்
உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை
அறிவீர்களா?

மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல்
ஆறு தளத்தை நோக்கி" என்ற வரி குறிப்பது
அதுவே. பரஞ்சோதி அவர்களின் "நான்
கடவுள்" என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி
ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல்  ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என  கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது.

மற்று இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி
கிடையாது.

மேலே உள்ள அகத்தியர் பாடலில்
"முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"
என கூறுவதும் இதை பற்றி தான்.

மேலும் சில பெயர்கள்:
************************

ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு,
நடராஜர், திருசிற்றம்பலம்,
சுழுமுனை , கரிமுகன்.

சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து
கொள்வதால் என்ன பயன்?

இந்த ஐயம்  உங்களுக்கு எழலாம். உண்மை தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் நான் அறிந்து  கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள
ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை
இந்த தொடரின் இறுதியில் தெரிந்து
கொள்வீர்கள்.

நண்பர்களே, இக்கட்டுரையில் நான்
அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,
சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள் ,
குடம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள்,
திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள்,
ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில்
இருந்து குண்டலி பற்றிய செய்திகளை
கொடுக்க முயல்கிறேன். பல
உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து
கொள்வீர்கள்
நான் இங்கு மேல்கொளாக கொடுக்க இருப்பது
நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை
பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.

நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர
மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று
மண்டலங்கள் உள்ளன. இவை முறையே
பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய
நாடிகளால் குறிக்க படுகின்றன.

ஒரு அவ்வையின் விநாயகர் அகவல் பாடலை
பார்ப்போம்.

"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."

நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை
சார்ந்தே அமைந்துள்ளன.

நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன
என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம்
வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு
செல்லும்.

நமது உடம்பில் ஈசன் நுழை
வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது
மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒரு
வாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக
பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என பயிற்சி
செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம்
முன்னோர்கள் கொடுத்தார்கள்.

மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி
பின் விடுவது அல்ல இந்த
பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின்
வழியாக செய்ய வேண்டியது.

நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல
வாயுக்களை அடிப்படியாக கொண்டது.

உணவை செரிக்க ஒரு வாயு, குரல்
எழுப்புவது ஒரு வாயு . கழிவுகளை வெளியே
தள்ளுவது அபான வாயு இன்னும் பல.

தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு.

உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை
விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில்
இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த
உடம்பில் இருக்கும்.

இப்போது அவ்வையின் பாடலை பார்ப்போம்.

இறைவன் அவ்வைக்கு குருவாக வந்து தீக்ஷை
அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத
பட்டு இருக்கும்.

"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..."

இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது
சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த
உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை
அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக
தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும்
இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான்
காட்டுகிறானாம்.

"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."

"சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி"
என இதை படிக்க வேண்டும்.

கபாலம்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன
சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது?

நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில்
இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக
அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன
நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம்,
அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய
நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த
நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்
படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக
பயிற்சிகளின் நோக்கம்.

இட கலை = சந்திரன்

பிங்கலை = சூரியன்

அக்னி கலை = சுழுமுனை

இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை,
பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக
வேண்டும்.
சரி எவ்வாறு உருவாக்குவது?

காற்றின்
மூலம். அதுவே "பிராண யாம பயிற்சி" என
முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு
மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து
நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.

"மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின…"

மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர,
அக்னி மண்டலங்களை குறிக்கிறது.

இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும்
தூண் எது?

நான்றெழு பாம்பு என்கிறார்
அவ்வை. பாம்பு என்பது குண்டலியை
குறிக்கும்.

இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட
பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும்
ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.

நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை
கவனியுங்கள்.

"ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை
ஈசன்தன் வாயிலில் ஏற்று"
-அவ்வை குறள்

"மூலத்து வாரத்து மூளு மொருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."
-திருமந்திரம்

"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)
லுறுப்புச் சிவக்கும் ரோமங்கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."
-திருமந்திரம்

முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது
பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய
இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை
ஏற்ற வேண்டும்.

சித்தர்கள் "கால்" என்ற
வார்த்தையை காற்றை குறிக்க உபயோக
படுத்தி இருப்பார்கள்.

இரண்டாவது பாடல் = "காலுற்ற..."
மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை,
சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப்
பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக
தெரிகிறது.

ஈரைந்து வாசலில்….

நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு +
ஐந்து. = பத்து. அவ்வை பத்து வாயில்களை
சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில்
தானே நமக்கு தெரியும்?

அது என்ன பத்தாவது வாயில்?

அதுவே ஈசன்
வாயில் அல்லது மூல துவாரம்.

சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை
ஏற்றுவது?

"மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"

நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ
அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே
மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண
வாயு ஏறும்.

இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ...

நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின்
எழுத்து?

நம் தமிழ் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.

அது என்ன வென்றால் மொழியின்
எழுத்துக்களிலே இறைவனை பற்றிய
ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ்
மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய்
எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே
பொதுவாக உண்டு.

இவை இரண்டும்
ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால்
தமிழ்
மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு.

உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து
இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு
சென்று விட்டனர். அது மட்டுமா?

ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற
எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது.

நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம்
இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து
இருப்பீர்கள்?

நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்
நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை
பார்த்து விட்டோம்.

ஆனால் ஆன்மாவை காணோமே?

ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே.
அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது
தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில்
கூறுவார்.

"வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில்
குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில்
ஆச்சுதடி"

நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து
செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை
பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது?

கருவறை வாசல் பூசைக்கு முன்
மூடிஇருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம்
காட்டுகிறார்கள். கூடவே மணியும்
அடிக்கிறார்கள்.

பின் இறைவன் தரிசனம்
கிடைக்கிறது. இதுவேதான் நம்
தவத்திலும் நடக்கிறது.
இப்போது எழுத்துக்கு வருவோம்.

மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி"
என்ற வார்த்தையை கூறிஇருக்கிறார்.

"அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ +ஆச்சி). அவர்
அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை
தான் நண்பர்களே.
சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து
இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த
எழுத்துக்கள்?

அ = பிங்கலை

உ = இடகலை

ம் = சுழுமுனை

இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக
கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.

8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்
தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக
ரகசியமான தத்துவம் இது.

தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.

அவ்வை தன் ஞான குறளில் கூறுவார்.

"கூறும் பொருள் இது அகர உகாரங்கள்
...மகரம் குழல் வழி ஓடிட.." என வரும்.

அது ஏன் கூறும் பொருள் என கூற
வேண்டும்?

குரு வானவர் இடகலையையும்
பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.

இதையே தான் "இடைபிங்கலையின் எழுத்து
அறிவித்து ..." விநாயகர் அகவலில்
கூறுகிறது.

"குரு வடிவாகி குவலயந்தன்னில்
திருவடி வைத்து..."

"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."
இதன் விளக்கம் பார்ப்போம்.

"எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்
சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே"

நடு நாடி = சுழுமுனை

சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர
வேண்டிய நாடி
நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து
இருப்பீர்கள்.

அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்?

ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை
எவ்வாறு இருக்கிறது?
நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.

சுழுமுனையின் இறுதி மலர் போன்ற
மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம் என்று
சொல்ல கூடியது அது தான். நமது
தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி
இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக
பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக
விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை
மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை
சுரக்க ஆரம்பிக்கும்.

சிவ பெருமானுடைய படத்தை பார்த்து
இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு
இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும்.

பிறை சந்திரன் இருக்கும்.
தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து
கொண்டு இருக்கும்.

நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம்.

சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும்
அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர
மண்டலத்தை குறிக்கிறது.

பிறையாக இருக்க
கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக
வேண்டும். எவ்வாறு?

மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய்
முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின்
மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில்
மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக
கிளர்ந்து எரிய செய்யும்.

இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை
மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க
கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க
ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில்
இருக்கும் கங்கை குறிக்கிறது.

மூல நெருப்பை இட்டு முட்டி நிலா
மண்டபத்தில்
பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது
எக்காலம்?
-பத்திரகிரியார்.

அவ்வை "அமுத நிலை" என்ற ஒரு
வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை
கீழ்வரும் பாடலில் கவனியுங்கள்.

குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி.."

குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க
கூடிய இறைவன்.

நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு
உண்டு. அது சந்திர ஒளியை வாங்கி மலரும்.

இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான்
என்பதை இந்த வாக்கியம் மூலம் மிக எளிதாக
விளக்கி விடுகிறார்.

வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,
"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்"
என கூறுகிறார்.

இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர்
தான்.

நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம்.

இந்த உலகம் உய்வதற்கு மிக முக்கிய
கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன்
உயிருக்கு ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு
ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும்
அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும்
உருவாக்குவது இவை தான்.

சந்திரன் பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்?

பெண்களின் வேறுவேறான பருவ
மாற்றஙகளுக்கு சந்திரனே காரணம்.
மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்
சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு.
ரா என்பது ராகுவையும் சி என்பது சிகி
அல்லது கேதுவையும் குறிக்கும்.

சாதகத்திற்கு குண்டலி என்ற பெயர் உண்டு.

நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக
இருந்தாலும் அவை ஒரு பாம்பிலிருந்து
உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது
குண்டலியை குறிக்கும்.

சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது?

சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வெட்டு
புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள்
என்கின்றது.

சூரியனின்
கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள்
. ராகு கேது
ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு
காரணமாகவும்
முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக
சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது இவை
சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது.

இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை ஆசான்
மூலம் தெரிந்து கொண்டால் குண்டலி
அல்லது சிற்சபை எதுவென்றும் பிரபஞ்சத்தில்
எங்கோ ஒரு கேள்வி எழுப்பினால் எங்கிருந்தோ
ஒரு விடை கிடைத்து விடும் !அந்த விடை
டி.வி. மூலம் வரும் ஒரு விளம்பரமாக கூட
இருக்கலாம் உன்னித்து கவனித்தால் விடை
வரும் வழி தெரிந்து விடும் ! மனம்
தெளிவாகலாம்

சக்தி(பார்வதி) என்பது குண்டலினி(மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே(அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது(அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.

நாம் உட்கார்ந்து நமது உடலை உற்று நோக்குவோம். நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர் அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும்.

இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர் நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.

நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர் அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர்.

இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர். இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர்.

இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் கர்த்தா வாகிய விஷ்ணு என்றனர் நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும் இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்.

நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் கர்த்தாவாகிய சிவன் என்றனர் லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று 3சுற்று சுற்றிகொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் 5தலை பாம்பு என்றனர்.இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றிகொண்டுள்ளது,உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

" சுவாசமது நீண்வருந் தோணி போல் அபானவாய்வு எழுந்தால் மாயாசக்தி நீளும் உதான்னுடைய பார்வையானால் கருவான சுவசலீலையாகுமே உயிர்வாழ்க்கை சுவாசம் என்று கூத்தனார் மனம்கிழந்தரே"

- *சித்தர்களின் குரல் shiva shangar*
விநாயகர் காரிய சித்தி மாலை:---

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவண்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறங்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம்புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் கரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம்அடைகின்றோம்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்:--

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார். என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி.

மாரநாடு கோடாங்கி

மாரநாடு கோடாங்கி

(250-300 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி
அருகில் உள்ள மாரநாடு கிராமத்தில் நடை​பெற்ற உண்மைச் சம்பவம்)

அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும் உள்ளே
தெரிந்தால் உடனடியாகத் தூக்கிலிட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு. மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.

இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி. அவளை மணந்து கொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மன்னனுக்குச் சொந்தமாகிவிடலாம், ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு. அதனால், "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர்; அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

நல்லவனாக, வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது. தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான்.

ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது! ஒருநாள் மாலை, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது! என்ன அவசரம் என்று எவருக்கும் தெரியவில்லை. அரசனும் அவசர அரசாங்க ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றான்.

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! இளவரசியின் கழுத்தில் இருந்த "அரசமுத்திரை"மாலையைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே அந்நாட்டின் இளைய பட்டம் ஆவர், அந்த மாலையைக் கையில் வைத்திருப்போரே   இளவரசியை மணந்து கொள்ளும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.

கழுத்தில் இருந்த மாலை காணாமல் போனது எப்படி? காணாமல் போனதைக் கண்டுபிடிப்பது எப்படி? மன்னனுக்கு மகளைப் பற்றி ஒரே கவலை. நல்லவனாக வல்லவனாக அமைந்தால், மகளைக் கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய் இருந்தார். ஆனால், இப்போது நிலைமை வேறு, மாலையை எவன் எடுத்திருந்தாலும், எதுவும் செய்ய முடியாது! பேசாமல் கொள்ளாமல் மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்!

யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் என்ன செய்வது! அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் களவாணி யார்? ஆயிரத்தெட்டு விசாரணைகள். இளவரசிக்குப் பதில் சொல்வதே ஒருபெரும் தொல்லையாய் போய்விட்டது!

"யாரிடமும் நான் மாலையைக் கொடுக்கவும் இல்லை. யாரும் மாலையை எடுக்கவும் இல்லை" என்று எத்தனையோ முறை "இது சத்தியம் சத்தியம்" என்று கூறினாள் !

ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகை எப்படிக் காணாமல் போனது? அரன்மனையிலேயே களவு நடந்துள்ளதால், மக்களிடம் மரியாதை குறைவதை உணர ஆரம்பித்தான் அரசன். என்ன செய்வதென்று எப்போதும் ஒரே நினைப்பு!. நாடுபோனாலும் போகட்டும், நகரம் போனாலும் போகட்டும், மானம் போய் விடக் கூடாதே! எத்தனைபேர் பெண் கேட்டுத் தூதுஅனுப்பியுள்ளனர். அத்தனைபேர் முகத்திலும் எப்படி இனி நான் விழிப்பேன் என்று மன்னன் இரவு முழுவதும் இதை மட்டுமே எண்ணியிருந்தான். எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.

எப்போதும் சரியாய் ஓடுவது காலம் மட்டுமே! விடியற்காலம் வந்துது! அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான் அரசன். ஆளாளுக்கு ஆள், ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள். ஒன்று கூட உருப்படியாய் இல்லை. என்ன செய்வது?  எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!. அரசன், யோசனைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முடிவுசெய்தான் .

அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர் அரசு அதிகாரிகள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. முத்திரைமாலை போன இடத்தை அறியமுடியவில்லை. அதிகாரிகள் விசாரணை விபரங்களை மன்னனிடம் கூறினர். அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம். மானம் போகிறதே என்று கண் கலங்கினான். என்ன செய்வது? ” முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து வையுங்கள்! “ என்று உத்தரவு போட்டான்.

அரண்மனையிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே யிருந்த யாரும் வெளியே வரமுடிய வில்லை. எல்லா இடமும் தேடியாச்சு. அத்தனைபேர் தேடியும் முத்திரைமாலை மட்டும் அகப்படவே இல்லை. என்ன செய்வது? அரண்மனையே ஸ்தம்பித்து. எனவே என்ன ஆலோசனை என்றாலும் ஏற்கத் தயாராக இருந்தான் அரசன். ஆலோசனைக்கு மேல் ஆலோசனை. அதில் ஒன்றுதான் குறிகேட்பது.

குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான் அரசன். குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் தவறாகப் போனது; குறி சொன்னது போல் மாலை கிடைக்கவில்லை;  அரசனுக்குக் கோபமான கோபம். அரசுமுத்திரைமாலை கிடைக்காமல் யாரையும் வெளியே விடுவதாக இல்லை.

தவறாகக் குறி சொன்னவர்களையும் சிறையில் அடைத்தான் அரசன். ஒருவர் இருவர் அல்ல, ஒரு ஊருக்கு  இரண்டு மூன்று என்று குறிசொல்வோர்  இருந்தனர். எத்தனை பேர் இருந்து என்ன செய்ய? அரசமுத்திரை மாலை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து குறி சொல்ல முடியவில்லை! அரசனது கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த குறிசொல்வோர் எல்லாம் அண்டைநாடு, அயலார்வீடு என ஓடி ஒளிந்து
கொண்டனர்.

குறிசொல்வோரில் ஒருவன் மட்டுமே துணிந்து அரசன் முன் சென்று நின்றான். "என்ன? சொல்!" என்றான் மன்னன். "எனக்குச் சரியாகச் குறி சொல்லத் தெரியாது! ஆனால் சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும்; அவன் ஒருவனை மட்டும் அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்" என்றான்.

குறிசொல்பவன் சொன்ன சொல் மன்னனின் காதில் வீழ்ந்தது. ”நீ சொல்வதுபோல் நடந்து விட்டால், உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன்” என்று மன்னன் வாக்களித்தான். மந்திரியை அழைத்தான், "இவன் யாரைச் சொல்கிறானோ, அவனை இங்கே அழைத்து வாருங்கள். இது நமது ஆணை” என்றான் .

” குறி தப்பாமல் சொல்பவன் நாட்டிலேயே ஒருவன்தான் உண்டு; அவன்தான், "மாரநாட்டுக் கோடாங்கி".  அவன் கோடாங்கி எடுத்து அடித்தால்,
கருப்பணசாமி வரும். மாரநாட்டுக் கருப்பணசாமி வந்து சொல்லும்" என்றனர் அறிந்தவர் அனைவரும். அரசு அதிகாரிகள் விரைந்தனர், மாரநாடு
கிராமத்திற்கு. இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில் இருந்தது. கோயில் உள்ளே சென்று கருப்பணசாமியைக் கும்பிட்டனர். கருவறையில் சிலையோ, படங்களோ எதுவும் இல்லை, வெருமெனே இருந்தது, கருவறை முன் மண்டபத்தில் சூலம் மட்டும் நடப்பட்டிருந்தது. அந்தச் சூலத்தையே கருப்பணசாமி என மக்கள் வணங்கி வருகின்றனர், கருப்பண சாமி வழிபாடு முடிந்ததும், கோயில் பூசரியிடம், "கோடாங்கியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்றனர்.

இப்படி மண்டபத்தில் உட்காருங்கள் என்று சொல்லி பிரசாதத் தட்டை கோயில் கருவறையில் வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

சொல்லுங்கள், "மாரநாடு கோயில் பூசாரிதான் மாரநாடுகோடங்கி ஆவான்". நான்தான் அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் கோடாங்கி. வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆஜாகுபான உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஒல்லியான ஒருவ​ரைக் கோடங்கியாகப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்,கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம், என்ன என்றால், "நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும்", இது அரச உத்தவரவு என்றனர்.

"நான் குறி சொல்வது இல்லை, இந்தக் கருப்பணசாமிதான் வந்து குறி சொல்லுவான், உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டார் கோடாங்கி.
”எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும், கருப்பணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றனர்.

”கருப்பணசாமி வருவது என்றால், சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரையில்தான் கருப்பணசாமி வருவார். முடிந்தால் அந்தமாதிரிக் குதிரையுடன் வாருங்கள். அல்லது வரும் மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான் திருவிழாபற்றிப் பேசி முடிவு செய்வார்கள்.பங்குனிமாதம் திருவிழா நடைபெறும், சாமிபுறப்பாடு இருக்கும், அப்போது வந்து குறி கேளுங்கள்” என்று கூறிமுடித்தார்.

கோடாங்கி சொன்னது எல்லாம் சொல்மாறாமல் இராமநாதபுர மன்னனிடம் கூறப்பட்டன. மானம் போகிற பிரச்சனை ஆயிற்றே. எனவே ”உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் ” என எரிந்து விழுந்தான் மன்னன்.

மந்திரி, தயங்கித் தயங்கி மன்னன் அருகில் சென்று, "மன்னா! கோடாங்கி சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட இல்லாமல் வெள்ளைவேளேர் குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதுதான் ஒரே யோசனை" என்றான். ”ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்று மன்னன் கேட்டான்.  “அது பட்டத்துக் குதிரை மன்னா! பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின் மன்னன் ஆவான், பட்டத்துக் குதிரையில் கோடாங்கி ஏறியவுடன், ஏடாகூடமாக ஏதாவது செய்தால், என்ன செய்வது? ஒரே நாளில் ஓராயிரம் கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன செய்வது? பட்டத்துக் குதிரையைத் தவிர்த்து, மற்றொரு குதிரைக்கு எங்கே போவது! மற்றொரு குதிரை வாங்கிவரும் வரை காத்திருக்க முடியாதே!” என விடை கிடைத்தது.

இருக்கும் மானத்தைக் காத்தாக வேண்டுமே! என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருந்தான் மன்னன், மன்னனுக்குப் பட்டத்துக் குதிரையை அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை, மன்னன் பட்டத்துக் குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான், மாரநாடு கருப்பணசாமி கோயில் பூசாரியான கோடாங்கி, வந்திருந்த பட்டத்துக் குதிரைக்கு மாலை அணிவித்தான், மரியாதை செய்தான்.   உடுக்கையையும் விபூதிப் பையையும் எடுத்துக் கொண்டான், கோயிலை வலம் வந்தான், கருப்பணசாமியை வணங்கினான்.

அனைவரும் மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்திற்குச் சொல்லத் தயாராய் இருந்தனர்; ஆனால் கோடாங்கி குதிரையில் ஏறவில்லை!
மந்திரி, கோடாங்கியிடம் சென்று, "குதிரையில் ஏறவில்லையே"? என்று கேட்டான்! ”பட்டத்துக் குதிரையில் கருப்பணசாமிதான் ஏறி வரும். நான்
சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான் கோடாங்கி. மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன், அதில் ஏறி வாருங்கள் என்றான் மந்திரி. கோடாங்கி மறுத்துவிட்டான். சாமி பாதத்துக்கு மேலே நான்  இருக்கக்கூடாது. எனவே நான் இப்படியே சாமிகூட ஓடியே வந்து விடுவேன்” என்றான்.

மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில் ஒரு மனிதன் ஏறிவராமல்  தெய்வம் ஏறிவருவது பெருமையாய் இருந்தது. தான் நினைத்தபடி ஏதுவும் ஏடாகூடமாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் எண்ணி மனநிறைவடைந்தான் மந்திரி.

பட்டத்துக்குதிரை, கோடாங்கி போட்டுவிட்ட மாலையுடன் முன்னே சென்றது. பட்டத்துக் குதி​ரையுடன் கோடாங்கியும் ஒன்றாக ஓடத் துவங்கினான். மந்திரியும் மற்றோரும் அவரவர் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர். மாரநாடு ஊரே ஒன்றாக இணைந்து ஓடத் துவங்கியது. வழி​நெடுக, அலையலையாய் மக்கள் கூட்டம்,

வழியெல்லாம் தண்ணீர் தெளித்து, பாதைஎங்கும் மாக்கோலம் போட்டுத் தோரணம் கட்டி, கொம்பு ஊதி வரவேற்பு செய்தனர் மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும் செய்யும் மரியாதை அத்தனையும் செய்து, பட்டத்துக்குதிரையுடன் ஓடிவரும் கோடாங்கியுடன் ஒன்றாய் சேர்ந்து ஓடத் துவங்கினர் மக்கள்.

மாரநாட்டிலிருந்து கிளம்பி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்தது சேர்ந்தது பட்டத்துக் குதிரை.

குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது ஏறத்தாழ எழுபதுகல் தூரம், மாரநாடு கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது,

அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான் மன்னன், உள்ளே சென்ற கோடாங்கி மன்னனிடம், சாணம் கரைத்துத் தெளித்து அதில் மாக்கோலம் போட்டு​வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோடாங்கி மாக்கோலத்தின் நடுவே உட்கார்ந்து கொண்டான். மன்னனும் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக் கோடாங்கி எதிரே, அவனுக்குச் சமமாக உட்கார்ந்து கொண்டான்,

உடுக்கையை எடுத்து அடித்து கருப்பணசாமியை வரவழைத்தான் கோடாங்கி, "என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,

"சாமி, மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்சனை, பிரச்சனைக்கு உரிய பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை" அதனால் குறி சொல்ல வேண்டும் என்றான் மன்னன். "மன்னன் கேட்டால், மறுக்கக்கூடாது! உன்னைக் காத்து அருளுவோம், இரண்டு குறிக்குமேல் கேட்கக் கூடாது!, கேள், சொல்கிறேன்" என்றது கருப்பணசாமி,

"வந்திருப்பது கருப்பணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள மக்களும் நம்புவது?" என்று கேட்டான் மன்னன்,

"முதற்குறி கேட்டுள்ளாய், கருப்பணன் வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்" என்றது கருப்பணசாமி,

எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர். மன்னன் முன்வந்து, நின்ற குதிரையைத் தொட்டுப் பார்த்தான், அவ்வளவுதான் சடமாய் நின்ற குதிரை செத்துப் பிணமாய் விழுந்தது,

பட்டத்துக்குதிரை பரிதாபமாய் இறந்துகிடப்பது கண்டு மன்னன் உள்ளம்
பதைபதைத்தது! இருப்பினும் கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமை கொண்டான் மன்னன்,

ஓடோடி உள்ளே சென்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப் பொருத்தருள வேண்டும், மனிதன் ஒருவன் கோடங்கியுடன் வந்து குறி சொல்வதாகத் தவறாக நினைத்துவிட்டேன். குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்று அறியாமல் நான் செய்த பிழையைப் பொருத்தருள வேண்டும்" என்று கருப்பணசாமியிடம் வேண்டிக் கொண்டான்,

"என்மகள் கழுத்தில் அணிந்திருந்த அரசமுத்திரைமாலையைக் காணவில்லை?",
"கருப்பணசாமி தான் எங்களைக் காத்தருள வேண்டும்" என்றான் மன்னன்.

"இரண்டாவது குறி கேட்கிறாய், மன்னனே, காணாமல் போன அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசி குளிக்கும் அறையில் தண்ணீர் வெளியேறும் தூம்பின் உள்ளே கிடக்கிறது, போய் எடுத்து வரச் சொல்" என்றது கருப்பணசாமி,

மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக் கட்டளை இட்டான்,

அவ்வளவுதான், மன்னன் இட்ட கட்டளையை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்,

கோடாங்கியையும் மன்னனையும் தவிரக் கூடியிருந்தோர் அனைவரும் அரண்மனை அந்தப்புரம் நோக்கி ஒடினர். மன்னன் மட்டும் கருப்பணசாமியின் அருகிலேயே நின்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து விபூதி பிராசதம் பெற்றுக் கொண்டான், ஓடிய மக்கள்கூட்டம் அரண்மனை அந்தப்புரம் என்பதை எல்லாம் உள்ளே சென்று தேடிப்பார்த்தது. தூம்பாக்குழியைத் தோண்டியே எடுத்துவிட்டது,

உள்ளேகிடந்த அரசமுத்திரைமாலையை அப்படியே கையில் அள்ளி எடுத்துவந்தார் மந்திரி. மந்திரியும் மக்களும் கருப்பணசாமி காலில் கும்பிட்டுவிழ முற்பட்டனர்.

கோடாங்கி அவர்களைக் கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான். "மன்னனுக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப்
போய்விட்டது, என் காலில் நீங்கள் யாரும் விழுந்து கும்பிடக்கூடாது" என்றான் கோடாங்கி.

மன்னனின் மானம் மட்டுமன்று; நாட்டு மக்களின்மானமும் காக்கப்பட்டுள்ளது. காத்தவன் அந்த மாரநாடு கருப்பணசாமி என்றான் கோடாங்கி.

"எங்கள் மானத்தைக் காத்த, கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம் அடிமை" என்றனர் மன்னனும் மக்களும். தங்கக்காசுகள் உட்பட, தாம்பாலம் தாம்பலமாய் பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து மன்னன் கையில் கொடுத்தனர் அரண்மனை அலுவலர்கள், மன்னன், அவற்றை அப்படியே வாங்கிக் கோடாங்கி கையில் கொடுக்க முயன்றான்,

ஆனால், கோடாங்கி அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை, "மானம் காத்த கருப்பணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்" என்றான். "நான் உண்பது நாழி உடுப்பது இரண்டு" என்றான். அப்படியே செய்வதாக வாக்களித்தான் மன்னன்,

சிறை​வைக்கப்பட்டிருந்த அரண்மனை அந்தப்புறத்தில் பணியாற்றி​யோர் மற்றும் குறி​சொன்ன அனைவரும் விடுவிக்கப்பட்டனர், அவரவர் செய்து வந்த தொழிலை அப்படியே தொடர்ந்து செய்துவருமாறு மன்னன் ஆணையிட்டான்,

சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தான். மன்னனும், கோடாங்கியும் மந்திரியும் மக்களும் ஒன்றாய் உட்கார்ந்து உணவருந்தினர். கோடாங்கிக்கு ஒரு வேட்டியும் துண்டும் பரிசாகக் கொடுத்தான் மன்னன்,

இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருந்தாலும், இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர்.

பங்குனித் திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,

இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை, மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர். இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடிக் குறிசொல்லி முடித்துவிடும். விடிந்தால், சாமியும் இருக்காது. மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது !

கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,  குறிகேட்க விழைவோர் எல்லாம் வந்து சாமிக்கு மாலையணிவித்து, மரியாதை செய்து, வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.

இத்த உண்மைக் கதையைக் படித்தோரும், படித்ததைப் பிறருக்குச் சொன்னோரும், அதைக் கேட்டோரும் மாரநாடு கருப்பணசாமியின் திருவருளாள் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர்.

LORD AYYAPPA DEVOTEES PAY HEED *ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!*

*முஸ்லிம் வாவர் பற்றிய பொய் கதை*

*ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!*

 இந்துக்களே !!! ஐயப்பன் வாழ்ந்த காலம் எது, இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்த காலம் எது ?. இது கூட தெரியாமல் இந்த கட்டுக்கதையை ஐயப்ப பக்தர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

*உண்மை கதை என்ன*

*பேட்டை சாஸ்தா என்பவர் வாபர சுவாமி என்ற பூத கணங்களின் தலைவர் ஆவார்*

சுவாமி ஐயப்பன் ராணியின் சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.

வனத்தின் எல்லையாகிய எருமேலியில் சிவபெருமான் அனுப்பிய பூதகணங்கள் *வாபரன்*என்ற பூதகணத்தலைவனின் தலைமையில் ஸ்ரீ ஐயப்பனை சந்தித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகிஷி சம்ஹாரம் செய்ய அவை உதவியாக நின்றன.

பின் ஐயப்பன் புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பினார். 

பூதகணங்கள் வனத்தின் எல்லைவரை உடன் வந்து வழியனுப்பினர். 

அப்போது *ஸ்ரீ ஐயப்பன் வாபரனை அழைத்து வனத்தின் எல்லையான எருமேலியில் தங்கி இருக்குமாறும் தன்னை தரிசிக்க காடு வழியாக சபரிமலை வரும் பக்தர்களை கொடிய வனவிலங்குகளிலிருந்து காத்து வருமாறு ம் கட்டளையிட்டார்.*

புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பிய ஐயப்பன் பந்தளமன்னனுக்கு ஆன்மீக உபதேசம் அருளினார்.

தமக்கும்(தர்மசாஸ்தா)வாபரனுக்கும்(பேட்டை சாஸ்தா)வித்தியாசம் இல்லை என்று கூறினார்.

எருமேலியில் வாபரனுக்கு ஒரு கோயில் அமைக்குமாறும் பணித்தார்.

பின் ஒரு அம்பு எய்தார் அந்த அம்பு விழுந்த இடத்தில் தனக்கு பதினெட்டு தத்துவ படிகளுள்ள ஒருகோவிலும் இடது பக்கம் சற்று தள்ளி மஞ்சள் மாதாவுக்கு ஒருகோவிலும் கட்டுமாறு கட்டளையிட்டுவிட்டு மறைந்தார்.

அதன்படி பந்தள மன்னன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச்சென்றார். எல்லோரும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது வாபரன் மன்னனை சந்தித்து அவரை வேறு யாருமறியாமல் பொன்னம்பல மேட்டிற்கு கூட்டிச்சென்று தர்ம சாஸ்தாவிடம் சேர்த்தார்.

மன்னன் மீண்டும் உபதேசம் பெற்றார்.
எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து தெளிவுபெற்றார் மன்னன்.

வாபரன் மீண்டும் யாருமறியாமல் மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில் கொண்டு சேர்த்தார்.பந்தள மன்னன் ஸ்ரீ ஐயப்பனின் கட்டளையின்படியும் அகத்திய முனிவரின் உபதேசங்களின்படியும் முதலில் எருமேலியில் வாபரனுக்கும் பின் சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பனுக்கும் மஞ்சள்மாதாவிற்கும் கோயில்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து உற்சவமும் நடத்தினார்.

எருமேலியில் அமைக்கப்பட்டுள்ள கோயில் பேட்டை சாஸ்தா கோவில் என்றழைக்கப்படுகிறது.

*பேட்டை சாஸ்தா என்பது வாபர ஸ்வாமி என்ற பூதத்தலைவன் ஆவார்*

அன்று முதல் தன்னை வணங்கி பேட்டை துள்ளி காடு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றி கானகம் கடக்க துணை செய்து வருகிறார் வாபரஸ்வாமி.

*வாவர் என்ற பொய்கதை*

நமது பாரதநாடு பல நூற்றாண்டு காலம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடிமைப்பட்டுக்கிடந்தது

அக்காலத்தில் நம்நாட்டு மன்னர்கள் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து கொடுக்க நேர்ந்தது அவ்விதமான ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாகிய அக்கால பந்தளமன்னன் ஒருவர்;

*அமீர்காதி செய்னுதீன் பஹதூர் பாவா பா வர் முசலியார் என்ற முஸ்லீம் குடும்பத்திற்கு எருமேலியிலும் பதினெட்டாம்படியிலும் பள்ளிவாசல் அமைத்து ஐயப்ப பக்தர்களிடம் நிதிவசூல்செய்துகொள்ள அனுமதித்து செப்புபட்டயம் வழங்கினார்*

எருமேலி பளளிவாசலில் சமாதி வைக்கப்பட்டுள்ள முஸ்லீமின் பெயர் பாபர் என்றும் பெதருதீன் என்றும் சிக்கந்தர்ஷா என்றும் அலியார்தங்ஙள் என்றும் பலகருத்துக்கள் உள்ளன.

பள்ளிவாசல்களை அமைத்துக்கொண்ட முஸ்லீம்கள் ஐயப்பபக்தர்களிடையே வாவர் என்ற பொய்க்கதையை பரப்பினார்கள் 

*ஸ்ரீ ஐயப்பஸ்வாமி வாவர் என்ற முஸ்லீமை வெல்லமுடியாமல் தோழனாக்கிக் கொண்டதாகவும் வாவர்சமாதியில் வணங்கிவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்றும் கதைகட்டினார்கள்*

நாளடைவில் கள்ளம்கபடமறியாத ஏமாளிகளாகிய ஐயப்பபக்தர்கள் வாபர சுவாமியை மறந்தார்கள். 

*வாபர சுவாமிதான் பேட்டை சாஸ்தா என்பதை மறந்தார்கள்*

வாபர சுவாமிக்கு பதில் வாவர் சமாதியை கும்பிட ஆரம்பித்தார்கள்.
முஸ்லீம்களை திருப்திபடுத்த புனிதபள்ளிக்கெட்டில் ஓம் சின்னத்திற்குப்பதிலாக பிறைச்சின்னம் பொறித்துக் கொண்டார்கள். 
*பக்தர்களின் பணம் பள்ளிவாசலில் கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியது.*

*ஆண்டுதோறும் ஐயப்பபக்தர்களின் லட்சக்கணக்கான பணத்தைப்பெற்று அந்த பள்ளி வாசலும் முஸ்லீம் சமுதாயமும் உயர்ந்து கொண்டிருக்கிறது*

இதில் வேடிக்கை என்னவென்றால்
வாவர் சமாதியில் இருப்பவர்கள் உட்பட எந்த முஸ்லீமும் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை நம்பவில்லை நாங்கள் அல்லாவைத்தவிர வேறு யாரையும் நம்பமாட்டோம் என்கிறார்கள் 

கேரளத்து தேவஸ்வம் போர்டார் இந்துக்களின் இந்த ஏமாளித்தனத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

*ஐயப்பனை நம்பாமல்,விரதமேதும் இல்லாமல், அசைவ உணவு உண்ணும் முஸ்லீம்களிடம் ஐயப்ப பக்தர்கள் திரு நீறு (சாம்பல்) பெற்றுக்கொள்கிறார்கள்*

இந்த பொய்கதைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் ஐயப்பஸ்வாமியின வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரிந்து கடைபிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

*ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி பற்றிய மூலநூல் பூதநாதோபாக்யானம் என்ற சமஸ்கிருத நூல் ஆகும்* இது பிரம்மாண்ட புராணத்தில் உட்பட்டது ஆகும்.

மலையாளத்தில் இதன் மொழிபெயர்ப்பு கல்லறயிக்கல் கிருஷ்ணன் கர்த்தா அவர்களால் 1928ல் வெளியானது.

இந்நூலின் பெயர் பூதநாதோபாக்யானம்(கிளிப்பாட்டு)என்பதாகும்.

இதுவே முதல் மலையாளநூல்.

இரண்டாவதாக மூலநூலைத்தழுவி உரைநடையில் மலையாள மொழியில் பி.என்.கிரிஷ்ணுண்ணி என்பவர் 1938ல் ஸ்ரீ பூதநாதன் என்ற நூலை வெளியிட்டார்.

*மேற்கூறிய நூல்களில் வாபர சுவாமியைப்பற்றி கூறப்பட்டுள்ளது. வாவர் என்ற முஸ்லிம் பற்றி எந்தச்செய்தியும் இல்லை*

1946-ல் வித்துவான் குறுமள்ளூர் நாராயண பிள்ளை என்பவர் மலையாள மொழியில் பூதநாத சர்வஸ்வம் என்ற நூலை வெளியிட்டார்.

மேலும்1984-ல் ஆசிரமம் தாமோதரன் என்பவர் வெளியிட்ட ஐயப்ப சர்வஸ்வம் என்ற மலையாள நூல் 1988-ல் ஆஸ்திக மணி A.சுப்பிரமணிய அய்யர் வெளியிட்ட ஐயப்பன் பெருமை என்ற தமிழ் நூல் முதலிய பல நூல்களை பரிசோதித்ததில் *வாவர் பற்றிய கதை ஒரு இடைச்செருகல் என்பது தெளிவாகிறது*

1938-க்கும் 1946-க்கும் இடையில் சூர்ப்பன் கவி, பாண்டிச்சேவம், பந்தளச்சேவம், இளவர்சேவம், பாலாழிமதனம், ஈழச்சேவம்,வாவரங்கம் என்னும் பெயர்களில் மலையாள மொழியில் பல சாஸ்தாப்பாடல்கள் பாடப்பட்டன.

இவற்றில் சில வாவர் என்ற பொய்கதையை பரப்பின.தற்காலத்தில் வியாபார நோக்கத்தில் சினிமாக்களும் சினிமாப்பாடல்களும் பொய்க்கதையை மேலும் பரப்பியிருக்கின்றன.

அன்பான வேண்டுகோள் 

இதைப்படிக்கும் ஐயப்ப பக்தர்கள் பேட்டை சாஸ்தா என்ற வாபர ஸ்வாமியை வழிபட வேண்டுமென்றும் புனித பள்ளிக்கெட்டை பள்ளிவாசலுக்குள் கொண்டு சென்று விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றும் இருமுடிக்கெட்டில் ஓம் சின்னம் பொறிக்கவேண்டும் என்றும் ஸ்வாமி ஐயப்பன் அருளிய பூதநாத கீதையை கற்றுத் தெளிய 
வேண்டுமென்றும் அன்பாய் வேண்டுகிறேன்.

*சித்தர்களின் அருட்கொடை !* BLESSINGS OF SITHHARS

*சித்தர்களின் அருட்கொடை !*
-----------------------------------------------------

*உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து  நோய்களுக்கும் எளிய தீர்வை தேனியை சேர்ந்த பரம்பரை சித்த வைத்தியர் திரு.ஜகத்குரு ஐயா அவர்கள் pdf புத்தகமாகவும், Google drive ல் ஒலிப்பதிவாகவும் தொகுத்து  வெளியிட்டுள்ளார்.*

*உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த pdf புத்தகத்தை புரட்டிப்பாருங்கள், Google drive ல் இவருடைய ஒலிப்பதிவை கேளுங்கள்.*

*அதில் குறிப்பிட்டிருப்பதை பின்பற்றுங்கள். குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் இருந்து ஒரு மண்டலத்திற்குள் உங்கள் நோய்கள் காணாமல் போவதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.*

*இந்த pdf புத்தகத்தை அச்சடித்து பரிசாகவும், தாம்பூலத்தில் வைத்தும் கொடுங்கள், இன்னும் எந்த எந்த வழிகளில் எல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல முடியுமோ அந்த வழிகளில் மக்களுக்கு இந்த சித்தர்களின் அருட்கொடை கிடைக்க வழிவகைச்செய்யுங்கள்.*

*இப்பதிவின் கீழ் சித்தர்களின் அருட்கொடை pdf புத்தகத்தையும், Google drive ஒலிப்பதிவின் link ஐயும் இணைத்துள்ளேன்.*

*நமது தமிழ் மரபு மருத்துவத்தின் சக்தியை இவ்வுலகம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.*

*மீண்டும் இம்மண்ணின் மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ☺🙏🌷*


*அனைத்து நோய்களையும் நிரந்தரமாக குணமாக்கும் சித்தர்களின் அருட்கொடை Google drive ஒலிப்பதிவு 👆*

*இந்த சித்தர்களின் அருட்கொடையை மக்களுக்கு கொடையாக வழங்கிய திரு.ஐகத்குரு ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ☺🙏🌷*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*