சூரிய வணக்கம்
”ஆதித்ய ஹ்ருதயம்” மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம். இராவணனுடனான போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரம் இது.
சூரியனின் ஆற்றலை, திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்து வந்தால் பகைகள் விலகும்; தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
ஆனால் இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும். அப்படிச் செய்ய எல்லாராலும் இயலுமா? சம்ஸ்கிருதம் தெரியாதவர்களால் இதைச் சரிவர உச்சரிக்க முடியுமா?
முடியாது…
அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும். இது உண்மை.
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!
எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.
எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்இன்று 29/3/20 ஞாயிறு அன்று சூர்ய வழிபாடு செய்ய வேண்டும் எதிரியை அழிக்க வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம். எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார் ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே துணை
சூரியன் பல வேறு பெயர்கள் :
பரிதி
பாற்கரன்
ஆதித்தன்
பனிப்பகை
சுடர்
பதங்கன்
இருள்வலி
சவிதா
சூரன்
எல்
மார்த்தாண்டன்
என்றூழ்
அருணன்
ஆதவன்
மித்திரன்
ஆயிரஞ்சோதியுள்ளோன்
தரணி
செங்கதிரோன்
சண்டன்
தபனன்
ஒளி
சான்றோன்
அனலி
அரி
பானு
அலரி
அண்டயோனி
கனலி
விகர்த்தனன்
கதிரவன்
பகலோன்
வெய்யோன்
தினகரன்
பகல்
சோதி
திவாகரன்
அரியமா
இனன்
உதயன்
ஞாயிறு
எல்லை
கிரணமாலி
ஏழ்பரியோன்
வேந்தன்
விரிச்சிகன்
விரோசனன்
இரவி
விண்மணி
அருக்கன்
சூரிய வட்டம் = விசயம்
சூரிய கிரகணம் = கரம், தீவிரம்.
எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்
ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.
ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார். விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.
ராமரை நோக்கி விபீஷணன், ஐயனே! அன்னையை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறான் ராவணன். உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது. ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான் என்று ராவணனின்-உயிர் ரகசியத்தைக் கூறினார்.
உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார். அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது. அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர். ஆக முப்பத்தியரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.
ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்
இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வகுத்தது. ஆதித்ய ஹ்ருதயம், எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.
ஆதித்ய ஹிருதயம் பாடல்களின் தமிழக்கத்தில் சில....
* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.
* கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.
* ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.
* வணங்குவோருக்கு வெற்றியையும், க்ஷேமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
No comments:
Post a Comment