Friday, May 27, 2016

வாராஹி அம்மனை வழிபடு!

 வாராஹி அம்மனை வழிபடு!

- courtesy Thiruvalmsivan ayya

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

varahi

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

வாராஹி அம்மனை வழிபடு!

கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை. ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி : “வாராஹிக்காரனோடு வாதாடாதே”

ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள். எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள் :-

புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

செல்வம், அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மனவலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும், எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்:-

தோல் எடுக்காத உளுந்து வடை, மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.

குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை – செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் – செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு – தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் – மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் – வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் – கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.

வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.

இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஜபத்திற்கான மந்திரங்கள்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.

சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரியஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்.

இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திரஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும், மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.  கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால் துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 1:

ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வாராஹி வராஹமுகி ஐம் க்லெளம் ஐம் அந்தே அந்தினி நம:! ருத்தே ருந்தினி நம:! ஜம்பே ஜம்பினி நம:! மோஹே மோஹினி நம:! ஸ்தம்பே ஸ்தம்பினி நம: ஐம் க்லெளம் ஐம் ஸர்வ துஷ்டப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸர்வ வாக் சித்த சக்ஷுர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம் குரு குரு ஐம் க்லெளம் ஐம் ட: ட: ட: ட: ஹீம் பட்  ஸ்வாஹா!!

ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 2:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்; நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி; அந்தே அந்தினி நமஹா; ருந்தே ருந்தினி நமஹா; ஜம்பே ஜம்பினி நமஹா; மோஹே மோஹினி நமஹா; ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா; சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்சர்வ வாக் சித்த சக்ஷூர்  முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம், ஐம் க்லௌம் ட:  ட:  ட:  ட: ஹூம் அஸ்த்ராய பட் ||

ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை -லகு வார்த்தாளி உபாங்க தேவதை : ஸ்வப்ன வாராஹி, பிரத்யங்க தேவதை: திரஸ்கரணி

ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம்:

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நம:||

இவள் ஸ்ரீ மகாவாராஹியின்  அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம். இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்: ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட:  ட:  ஸ்வாஹா||

அல்லது

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட:  ட:  ஸ்வாஹா||

இவள் ஸ்ரீ  மகாவாராஹியின்  உபாங்க தேவதை. இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை, தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக்  காப்பாள். இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால்  11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை நிறைவேற்றி, பிரச்சனைகளைத் தீர்ப்பாள். இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர்.

ஸ்ரீ திரஸ்கரணி  மூல மந்திரம் :-

ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே; மஹாநித்ரே; சகல பசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா||

இவள் மாயைக்கு அதிபதி. இவளை வழிபட மாயை நீங்கும். மனகுழப்பங்கள் தீரும்.

குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-

1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||

2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :

ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||

3.செல்வ வளம் பெருக:

க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:

ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

5.எல்லா வகையான பயமும் நீங்க:

ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி;     சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே  சதா||

6.வறுமை நீங்க :

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய  த்வம்சய||

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:

மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும். ஒவ்வொரு நாமாவின் முன்னும் பின்னும் ஓம் என்றும் நம: என்றும் சேர்த்து சொல்லவும்.

1.ஓம் பஞ்சமி தேவ்யை நம:
2.தண்டநாதா
3.சங்கேதா
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா
6.வாராஹி
7.போத்ரிணி
8.சிவா
9.வார்த்தாளி
10.மகாசேனா
11.ஆக்ஞா சக்ரேச்வரி
12.அரிக்னீ

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.

காரியசித்தி, பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை, யந்திர, மந்திர, ஹோமம், ரக்ஷை, உள்ளது. ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள், அரசாங்ககளில் வெற்றி தருவதுடன், எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும்.

கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||

***

 “ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார் ?

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார் ?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி***

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார்? என்ற கேள்விக்கு முதலில் எளியோன் அறிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்!

ஷோடசி மஹாமந்த்ரா எனும் 16 பீஜங்களுடைய மந்திரம் பதினாறு வயதினளாம் திரிபுரசுந்தரி எனும் முப்புர அழகிக்கும், நவாக்ஷரி எனும் 9 பீஜ மந்திரம் அழகிய வாலை எனும் பாலா திரிபுரசுந்தரிக்கும் உறியது ஆகும். அப்படியானால் அம்பிகையின் வயதுக்கு ஒரு பீஜமோ!

தச மஹாவித்யை தேவியர்கள் 1. காலீ(ளீ) 2. தாராதேவி, 3. திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி தேவி, 4. புவனேஸ்வரி தேவி, 5. பைரவி தேவி, 6. சின்னமாஸ்தா தேவி, 7. தூமவதி தேவி, 8.பகளாமுகி தேவி, 9. மாதங்கி தேவி மற்றும் 10. கமலா தேவி என க்ரந்தங்கள் விளக்குகின்றன!

இவற்றில் மூன்றாவதாக குறிப்பிட்ட திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி, ஆதி-பரா-சக்தி, மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ லலிதாம்பா, ராஜராஜேஸ்வரிதேவி, மற்றும் தந்த்ர பார்வதிதேவி எனவும் அறியப்படுகிறது.

குஹ்ய-அதிகுஹ்ய தந்திரம் எனும் நூலில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலாதாரமே இந்த தச மஹா வித்யை தேவியர் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஷோடஸியாக 16 வயதினளாகவும், 16 பீஜங்கள் கொண்ட மந்திரத்தின் ஸ்வரூபமாகவும், 16 குணமுடையவளாகவும் விளக்கப்படுகிறது.  இந்த தேவியை ஆராதிக்கும் முறைக்கே ஸ்ரீவித்யா எனவும், ஆராதிப்பவர் சிவனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும், அதுவே அம்மனிதரின் கடைசி பிறப்பாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி ஒரு க்ரந்தத்தில், காமாட்சி அம்மனே சுகுணாத்மிக த்ரிசக்தியாக அவதரித்து தனது திருவாயால் ‘க’ என உச்சரித்து தனது இடது கண்ணிலிருந்து ப்ரம்மனையும், ‘ஆ’ என உச்சரித்து வலது கண்ணிலிருந்து விஷ்ணுவையும், ‘ம’ என உச்சரித்து தனது நெற்றிக்கண்ணிலிருந்து மஹாதேவனையும் குழந்தைகளாக உருவாக்கினாள் என்றும், குழந்தை ப்ரம்மனுக்கு “ஷ்ருஷ்டி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை விஷ்ணுவிற்கு “ஸ்திதி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை மஹாதேவனுக்கு “லய வித்யாத்மிக” க்ஷீரத்தையும் புகட்டினாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கண் என்பதையும், காம என்பதையும் சேர்த்து காமாட்சி என அழைத்தனரோ!

இதே க்ரந்தத்தில் கன்யகா பரமேஸ்வரி தேவியான காமாட்சி, திரிபுரசுந்தரியாக அவதரித்து பந்தகாசுரனை கண்டவுடன் கோபம் கொண்டு அஷ்டதஸ புஜ அல்லது 18 கைகளும் சக்ரம் முதலிய ஆயுதங்களும் தரித்து மும்மூர்த்திகள், தேவர்கள் முன்னிலையில் தனது ஒரு காலை அசுரனின் இதயத்திலும், மற்றொரு காலை அசுரனின் களுத்தினிலும் வைத்து அவனை மிதித்து அவனது தலையை இருகைகளினாலும் பிடித்து க்ஷணத்தில் அவனை அழித்தாள் எனவும், அவனது மகன்கள், உறவுகள் அனைத்தயும் நிர்மூலமாக்கியபின், அசுரனின் உடலை பாலாம்பிகா ரூபத்தில் சர்வாலங்கிருதளாய், இழுத்து வந்தாள் என்கிறது.

இன்னொரு க்ரந்தத்திலோ, அன்னையை நோக்கி பல ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் செய்தபொழுது, ஹோம அக்னியிலிருந்து பாலா ரூபத்தில் “ஆதிபரை” தர்சனம் கொடுத்து, என்ன வரம் வேண்டும் என கேட்க, ரிஷிகளானவர்கள், அம்பிகையை பலவாரு துதித்து, எங்களுக்கு சம்பூரண அஷ்ட மஹா சித்திகளை அருளவேண்டும் என்றும், அம்பிகையே உன்னை இந்த ரூபத்தில் வழிபடும் யாவர்க்கும் அவர் அவர் கோரியதை அனுக்ரஹிக்க வேண்டும் என வேண்டினராம். “அவ்வாரே” என்று அம்பிகை அருளினாளாம்!

லலிதா ரஹஸ்ய சஹஸ்ரமோ, தனது 965 வது நாமத்தில் “பாலா” எனவும், தனது 966 வது நாமத்தில் லீலாவினோதினி எனவும் பரப்ரம்ம ஸ்வரூபிணியை குழந்தையாக சொல்கிறது. இதன் 74 ஆவது வரியில், பண்டாசுரனின் 30 மகன்களையும் பாலாம்பிகா அழித்தாள் (பண்டபுத்ர வதோத்யுக்தா பாலா விக்ரம நந்திதா) என தெரிவிக்கிறது

 இன்னும் பல க்ரந்தங்களில் பாலாம்பிகை வ்ருத்தங்கள் உளது.

இங்கு காரணமாகவே க்ரந்தங்களின் பெயர் வெளியிடவில்லை. இவை எல்லம் விட ஒரு முக்கிய விஷயம் நினைவில் நிற்க!

அன்னை பாலாம்பிகையின் மந்திர சித்தி இல்லாமல், ஸ்ரீ சக்ர உபாஸனை செய்யக்கூடாது என்பது விதியாகும்.

அம்பிகை பாலாவின் மந்திரங்கள் எப்படி வின்யாசம் செய்யப்பட்டுள்ளது க்ரந்தங்களில் என்றும், அந்த மந்திரங்களின் மகிமைகளையும் அம்பிகையின் ஆராதனை முறைகளையும் அடுத்தபதிவில்.



|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்***

இவ்வெளியோன் அறிந்தவரையில் இந்த மந்திரம் மிக பலமானது மிக சுகமானது! இதை இவ்வெளியோனுக்கு தங்கவண்ண கும்பமுனி பலகாலங்களுக்கு முன் கருணையுற்று அருளியதாகும். இதன் பயனோ என்னவோ ஆதிபரையின் பேருளால் பல பல நன்மைகள் இவ்வெளியோனுக்கு சித்தித்தது. இதை அவர்தம் பொற்பாதம் பணிந்து, அவர் அனுமதியின் காண் இங்கு வெளியிடுகிறேன் அனுஷ்டித்து நலம் பெருவீரே!

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ: ஆகச்ச ஆகச்ச பாலே, புவனே, பரமேஸ்வரி, பஞ்சாக்ஷரி, ஆனந்தரூபி நம: / ஸ்வாஹ: ||”

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ:” இது மந்த்ரமஹார்ணவாவிலும், மந்த்ர மஹோததியிலும் காணக்கிட்டும் பாலா மந்திரமாகும்.

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ” இப்படி ஒரு மந்த்ர ஸம்புடீகரணத்தை க்ரந்தங்களில் எளியோன் காணவில்லை!

“ஆகச்ச ஆகச்ச” என்றால் வருக வருக (இதய கமலத்தில் அமர்க)

“பாலே” எனும்பொழுது, பாலாம்பிகை தேவியையும்,

“புவனே” எனும்பொழுது, த்ரிபுவன அரசியாம் திரிபுரசுந்தரியையும்,

“பரமேஸ்வரி” எனும்பொழுது ஆதிபரையையும்,

“பஞ்சாட்சரி” எனும்பொழுது தந்த்ர பார்வதியாம் ஆதிசக்தியையும்,

“ஆனந்தரூபி” எனும்பொழுது ஸ்ரீ லலிதாம்பிகையும் குறிக்கிறது.

உருவிடும்பொழுது நம: என்றும், ஹோமிக்கும்போது ஸ்வாஹ: என்றும் சொல்லவும்.

ஆக ஓரே மந்திரத்தின் மூலம் அம்பிகையின் எல்லா ஸ்வரூபங்களையும் சித்தித்து கொள்கிறோம் அல்லவா! கும்பமுனியின் கருணைக்கு அளவேது! (கும்பமுனி – அகத்தியர்)

இம்மந்திரத்தை தேகசுத்தியுடன், செம்பட்டுடுத்தி, நீரு பூண்டு காலையும் மாலையும் தீபமேற்றி, கிழக்கு முகமாக அமர்ந்து 1008 முறை உருவிட, பின்னர், பாலும், கல்கண்டு, பேரீச்சம்பழம் நிவேதனம் செய்து நிவேதித்த. ப்ரசாதத்தை உட்கொள்ள. சித்தியாகும் வரை நிஷ்டையுடன் அனுஷ்டிக்க.

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம்,யந்திரம்யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும்,விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும்தொடர்புகொள்பவர்க்குவழங்கப்படும் என்பதைபணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்


“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 11

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2***

பரமேஸ்வரன், பரமேஸ்வரியுடன் தனிமையிலிருக்கையில், பரமேஸ்வரிக்கு கீழ்க்கண்டவண்ணம் அருள்கிறார்.

இப்பொழுது ஸ்ரீ பாலா வித்யை பற்றி சொல்கிறேன்! இந்த மந்திரத்தை ஸேவை செய்யும் உபாஸகன், வித்யையில் ப்ரஹஸ்பதிக்கு சமமானவாகவும், தன சம்பத்தில் குபேரனுக்கு சமமானவனாகவும் ஆகிறான்!

இந்த மந்திரமானது “ஐம் க்லீம் சௌ:” எனும் முப்பீஜ மந்திரமாகும். இதற்கு பராசக்தி தேவியின் சாபம் மற்றும் கீலனம் உளது. அதுகாண் இது சித்தியாகாது. இதை சாபோத்தாரணம் மற்றும் உத்கீலனம் செய்தே உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது சாப விமோசனா மந்திரத்தை விவரிக்கிறேன்!

“ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்”. இது ஒன்பது பீஜங்களை கொண்டது ஆகும், இதை 108 முறை உச்சரிக்க, பாலா திரிபுரசுந்தரி மந்திரம் சாப விமோசனம் அடைகிறது.

இனி உத்கீலனா மந்திரத்தை கவனிப்போம்! “ஓம் க்லீம் நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க, மந்திரம் உத்கீலனமாகிறது.

சாபம் மற்றும் கீலனத்தால் ப்ரகாஸமிழந்த மந்திரத்தை ப்ரகாசிக்க செய்யவேண்டிய தீபான மந்திரமும் விதியும் உபதேஸிக்கிறேன்.

“ஐம்” எனும் பீஜத்தை ப்ரகாஸிக்க “வத வத வாக்வாதினி ஐம்” எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

“க்லின்னே க்லேதினி மஹாக்ஷோபம் குரு” எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து “க்லீம்” எனும் காமராஜ பீஜத்தை தீபானம் செய்யவும்.

“ஓம் மோக்ஷம் குரு” என 108 முறை ஜெபித்து “சௌ:” எனும் பீஜத்தை ப்ரகாசிக்க செய்யவும்.

இப்படியாக சாப மோக்ஷம், உத்கீலனம் தீபானம் செய்தபின் புரஸ்சரணம் செய்துகொள்ளவும்

அடுத்த பதிவில் வினியோகம், ந்யாசங்கள், த்யானங்கள் இத்யாதி!


***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 3***

*** வாலை வணக்கம்***

முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள
அபேதம் கூறப்படுகின்றது:-

1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்
       
உந்தனித யத்திலுயர
   
இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென
       
இருபுருவ நடுவில்வளர
   
சந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்
       
சுந்தரிநின் சிரசில்விரிய
   
வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு
       
வாலைதிரி புரையழகியே!

ஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.
ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும்ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வானவில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும்,த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள்புரிவாயாக.

[கோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும்,ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்துவிளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]

****

அஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம் வரமருள விண்ணப்பம்:-

2.அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை
       
ஆதிபரைகோணமொன்றின்
   
நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக
       
நங்கைசிவ மங்கைபரையே
   
மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
       
மங்கலை சிவானந்தியே
   
இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு
       
வாலைதிரி புரையழகியே!

அட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.

இப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.

****

சோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-

 3.மேனியிற்செவ்வாடை வேணியிலிளந்திங்கள்
       
பானுவின்செக்கர்வண்ணம்
   
மோனநகையுலவுசம் மோகனமுகத்திலகு
       
ஞானநயனங்கள்மூன்றும்
   
பாணிநான்கில்அக்க மாலைஏடும்அபய
       
தானகுறிகளுமணிந்த
   
சோணகமலாசனையை பேணினேன்மனதில்திரு
       
வாலைதிரிபுரையழகியே!

பாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.

சிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும்,ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடிசெந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.

****

ஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற
சிவயோகினியுமான ஸ்ரீ பாலாம்பிகை:-

4.நூதனைநலந்தருச னாதனிபுரந்தரைநி
       
ராமயிபுராரிமெய்யின்
   
பாதிபரசாம்பவிப வானிசிவயோகினிவி
       
நோதினிநிதாந்தகலிகை
   
சோதிமயிசெங்கதிர்க் கோதைபரதேவியாம்
       
ஆதியந்தமிலிவிமலை
   
தீதறுபராபரை வேதமாமுதல்விதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

நூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.

****

பாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்
எளிதாகக் கைகூடுவது:-

5.மூலபதுமத்திலொரு முகமாய்மனம்கட்டி
       
முழுசிரத்தையொடுநின்னை
   
சீலமாய்ப்பாவிக்கும் யோகசாதகருக்கு
       
சிரசரோசத்தினின்று
   
கோலநின்மலசுகா தீதபியூடமழை
       
கொட்ட, வாய்க்காதுபோமோ
   
சாலசித்திகளெட்டும்? சாலீனையானதிரு
       
வாலைதிரிபுரையழகியே

மூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;
சாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.

மூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்?

****

மும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்
பரிணாமமே என்பது:-

6.முப்பாதமுற்றகா யத்திரியுமுத்தீயும்
       
முத்தேவர்முச்சக்தியும்
   
தப்பாதமூன்றுபுரு டார்த்தமும்வருணமும்
       
முக்காலமுந்நாடியும்
   
முப்பாருமுக்குணமுமூவேதமுச்சுரமும்
       
மும்மூன்றெனானவையெலாம்
   
முப்புரைஅநாதீத தற்பரையுன்வடிவுதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

முப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்
முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.
முத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.
முச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
மூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.
வருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.
முந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.
முப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.
முக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.
முச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.

இவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத்தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.

****

தேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை
நீக்கவேண்டும் என்று வேண்டுகோள்:-

7.ஓராதசித்தியொடு மூவாததேசுற்ற
       
யோகாதிவீரர்குழுவும்
   
தேவாதிகளும்முனிவர் ஏகாந்ததவசிகளும்
       
தேடியுனையேத்திமகிழ்வார்
   
தேகாதிகட்குற்ற தீராதவாதனைகள்
       
தானாயுடைந்துபொடிய
   
வைகாதெனைக்காக்க வருவாய்கனிந்துதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

யோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும்,தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும்,ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும்உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்துவிலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.

****

அம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-

8.ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்
       
அருளொளிருமழகுமுகமும்
   
தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்
       
தெளிவொடுன்னுபவர்வாழ்வில்
   
நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி
       
ஞானமும்நலமும்வளரும்
   
ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

ஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ரியக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.

****

(நன்றி: உ.இரா.கிரிதரன்.)