உடல் வலு வேண்டும் என்று கோழி, மற்ற மாமிசங்களைச் சாப்பிடுபவர்களின் கடைசி எல்லை..?
சாதாரணமான மனிதர்களின் வலு வேறு. பயில்வான்களை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வலு வேறு.
இன்றைக்கு எடுத்துக் கொண்டால் பயில்வான்கள் விஷத்தின் தன்மை கொண்ட நஞ்சினைப் பாய்ச்சிடும் கோழி முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுகின்றார்கள்.
விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியது இந்தக் கோழிகள். அது இடும் முட்டைகள் எப்படிப்பட்டது? கோழி முட்டை விஷத்தைத் தவிர்க்கும் நிலைகள் கொண்டது.
ஆனால், இதிலிருந்து வாயுவின் தன்மை வரும் பொழுது நரம்புகளுக்கு வீரிய உணர்வுகள் கொடுக்கின்றது.
அதே மாதிரி மாட்டிறைச்சியின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்தார்கள் என்றால் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கின்றது. விஷத்தின் தன்மை ஒரு உடலில் படர்கின்றது.
ஒரு இரும்பை நாம் எடுத்து வளைக்க முடியாது. கனமான சம்மட்டியால் அடித்துத்தான் வளைக்க வேண்டும்.
ஆனால், இத்தகைய விஷத்தன்மை கொண்ட வலுக் கொண்டவர்கள் இந்த இரும்பை எடுத்துச் சாதாரணமாக வளைத்து விடுவார்கள்.
ஆனால், அத்தகையை விஷத்தன்மைகளைப் பெற்ற பின் எப்படி மாடு தனது வலுவான நிலைகளை எடுத்து சுமையை அந்த விஷத்தின் தன்மை
யால் இழுத்துச் செல்கின்றதோ இதைப் போல அந்தப் பயில்வான்கள் ஒரு இரண்டு பேரை விட்டால் போதும்.
அல்லது ஒருவரை விட்டாலே போதும். ஒரு டன் அல்லது பத்து டன் வைத்து ஒரு வண்டியை நாம் இழுக்கச் சொன்னால் இழுத்துவிடுவார்கள். ஒரு யானைக்குண்டான பலத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆனால், நாம் ஒரு வலுவான கட்டையைத் தூக்கிக் கொண்டு போய் போடவேண்டும் என்றால் நம்மால் முடியாது.
ஆக, இப்படிச் செய்து கொண்டவர்கள் (பயில்வான்கள்) உணர்வுகள் அடுத்து எங்கே போவார்கள்?
இந்த உணர்வின் அலையான பின் எதை அதிகமாகச் சேர்த்தாரோ இந்த உயிர் அதை வளர்த்து அந்த உணர்வின் நிலை கொண்டு இதைப் போல மாட்டுக்குத்தான் அழைத்துச் செல்லும்.
அவர்களுக்கு இந்த எருமை மாட்டுக்குண்டான புத்திதான் இருக்கும். எருமை தனது வலுவைக் காட்டும். ஆனால், அடித்தால் அதற்குத் தெரியாது.
அவர்களுடன் பேசிப் பார்த்தால் தெரியும். உடனே “உன்..ஹூம்..,” என்று சீறித் தாக்கும் நிலைகளே அவர்களிடமிருந்து வரும். அவர்களிடம் பேச முடியாது.
இவைகளை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.இந்த உடலுக்குப் பின் என்ன? என்பதை நாம் அறிதல் வேண்டும்.
No comments:
Post a Comment