அணுவின் இயக்க உணர்வை அறிந்தவன் அகஸ்தியன், நஞ்சை வென்றவன் அகஸ்தியன், நஞ்சை ஒளிக்கதிராக மாற்றியவன் அகஸ்தியன்
அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது அகஸ்தியனுடைய தாய் நஞ்சை வென்றிடும் தாவர இனத்தைத் தனக்குள் பூசிக் கொண்டது.
மற்ற நஞ்சு கொண்ட விலங்கினங்களிலிருந்து தான் காத்துக் கொள்ளும் நிலை பெற்ற இந்தத் தாய் நஞ்சை வென்றிடும் உணர்வின் சத்தை நுகர்ந்த தாய் அவ்வாறு சுவாசித்ததனால் அந்தத் தாயின் கருவில் விளையும் குழந்தைக்கும் இது நுகர்ந்த உணர்வுகள் நஞ்சை வென்றிடும் சக்தி பெறுகின்றது.
அந்தக் கருவிலே விளைந்த சிசு அவன் பிறந்தபின் நஞ்சை வென்றிடும் சக்தி பெறுகின்றான். நஞ்சினை வென்றிடும் சக்தி பெறும் பொழுது நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.
நஞ்சு மற்ற பொருள்களுடன் சேர்த்த பின் எந்தெந்த மணம் இருக்கின்றதோ அது எப்படி இயக்குகிறது என்று அகஸ்தியன் அறிகின்றான்.
ஏனென்றால், நஞ்சில்லாத தாவர இனம் இல்லை. நஞ்சில்லாத கோள்கள் இல்லை. நஞ்சில்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளை அகஸ்தியன் அறிகின்றான்.
நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கும் பொழுது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றிவிடுகின்றது. நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கின்றது.
நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது ஒரு கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளுக்குள் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தக் கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை வருகின்றது.
நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே, உணர்வின் தன்மை அதற்குள் சுவைக்கும் உணர்வின் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே வருகின்றது.
இப்படிச் சாந்த உணர்வுக்குள் நஞ்சு கலந்தால் நஞ்சினைத் தொடர்ந்த நிலைகள் தாவர இனங்களும் விளைகின்றது. இவ்வாறு அதனதன் நிலைகளை இந்த உண்மையின் உணர்வினை அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.
ஆக, அணுவின் இயக்க உணர்வைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
தாய் கருவிலே நஞ்சை வென்றிடும் உணர்வு பெற்றவன். தாய் கருவிலிருந்து வெளி வந்தபின் அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றது.
இவனிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளோ மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தன் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றான். அவன்
இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை அறிந்தான்.உலகம் எப்படி இயங்குகின்றது என்ற வலுவின் தன்மையை அவனுக்குள் உருவாகும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
அப்படி உருப்பெற்ற உணர்வு தான் வானுலகில் இருந்து வரும் மின்னலானாலும் அதைக் காட்டிலும் இடி மின்னலானாலும் அகஸ்தியன் உற்று நோக்கினால் அது ஒடுங்குகிறது.
அவனுக்குள் அது அடங்கி உணர்வின் ஒளியின் கதிராக வளரும் தன்மை வருகின்றது.ஐந்து வயதில். வானுலக இயக்க உணர்வினை அறியும் ஆற்றல் பெறுகின்றான்.
நஞ்சின் மோதலால் ஏற்படும் விஷக் கதிரியக்கத்தால் ஏற்படும் மின் அணுக்களின் தாக்குதல் தான் “மின்னல்”.
விஷத்தின் மோதலில் வரும் போது அது துகள்கள் பரவலாகச் சிதறும் பொழுது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கின்றது.
அப்படிக் கலக்கப்படும் பொழுது அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதை வலுவூட்டும் நிலைக்கு வருகின்ரது. எதனுடன் கலந்ததோ எந்த உணர்வின் சத்தைக் கலந்ததோ அதனுடன் இது கலந்தபின் அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.
இதை அந்த அகஸ்தியன் உணர்கின்றான்.
ஏனென்றால், இந்த உணர்வுகள் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது தனக்குள் அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.
மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது. மற்ற பொருள்களுடன் கலக்கின்றது.
அது விஷம் கொண்டது.
ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை இவன் அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் அது இவனுக்குள் அடங்குகிறது. அதை அடக்கும் சக்தி அவனுக்குள் வருகின்றது.
ஆக, நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களை இவன் உற்று நோக்கி அதனின் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான். அப்பொழுது தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வருகின்றது.
No comments:
Post a Comment