வாராஹி அம்மனை வழிபடு!
- courtesy Thiruvalmsivan ayya
ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||
|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
”வாராஹி அம்மனை வழிபடு!”
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).
ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை. ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.
மந்திர சாஸ்திரபழமொழி : “வாராஹிக்காரனோடு வாதாடாதே”
ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள். எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.
ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும்.
ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
வழிபாட்டு முறைகள் :-
புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.
ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
செல்வம், அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மனவலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.
எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும், எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.
ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.
வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும்.
மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.
பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.
நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.
ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.
நைவேத்தியங்கள்:-
தோல் எடுக்காத உளுந்து வடை, மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.
குறிப்பு :
1. வாராஹிக்கு ஏற்ற மாலை – செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் – செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு – தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் – மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் – வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் – கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.
வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :
1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.
இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஜபத்திற்கான மந்திரங்கள்
மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?
மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.
1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரியஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.
2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்.
இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.
3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திரஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.
4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.
5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.
6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.
7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.
8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.
9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும், மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.
11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.
ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது. கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால் துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 1:
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வாராஹி வராஹமுகி ஐம் க்லெளம் ஐம் அந்தே அந்தினி நம:! ருத்தே ருந்தினி நம:! ஜம்பே ஜம்பினி நம:! மோஹே மோஹினி நம:! ஸ்தம்பே ஸ்தம்பினி நம: ஐம் க்லெளம் ஐம் ஸர்வ துஷ்டப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸர்வ வாக் சித்த சக்ஷுர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம் குரு குரு ஐம் க்லெளம் ஐம் ட: ட: ட: ட: ஹீம் பட் ஸ்வாஹா!!
ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 2:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்; நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி; அந்தே அந்தினி நமஹா; ருந்தே ருந்தினி நமஹா; ஜம்பே ஜம்பினி நமஹா; மோஹே மோஹினி நமஹா; ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா; சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்சர்வ வாக் சித்த சக்ஷூர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம், ஐம் க்லௌம் ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய பட் ||
ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை -லகு வார்த்தாளி உபாங்க தேவதை : ஸ்வப்ன வாராஹி, பிரத்யங்க தேவதை: திரஸ்கரணி
ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம்:
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நம:||
இவள் ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம். இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.
ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்: ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட: ட: ஸ்வாஹா||
அல்லது
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட: ட: ஸ்வாஹா||
இவள் ஸ்ரீ மகாவாராஹியின் உபாங்க தேவதை. இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை, தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக் காப்பாள். இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால் 11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை நிறைவேற்றி, பிரச்சனைகளைத் தீர்ப்பாள். இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர்.
ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம் :-
ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே; மஹாநித்ரே; சகல பசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா||
இவள் மாயைக்கு அதிபதி. இவளை வழிபட மாயை நீங்கும். மனகுழப்பங்கள் தீரும்.
குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
3.செல்வ வளம் பெருக:
க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
5.எல்லா வகையான பயமும் நீங்க:
ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
6.வறுமை நீங்க :
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||
ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும். ஒவ்வொரு நாமாவின் முன்னும் பின்னும் ஓம் என்றும் நம: என்றும் சேர்த்து சொல்லவும்.
1.ஓம் பஞ்சமி தேவ்யை நம:
2.தண்டநாதா
3.சங்கேதா
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா
6.வாராஹி
7.போத்ரிணி
8.சிவா
9.வார்த்தாளி
10.மகாசேனா
11.ஆக்ஞா சக்ரேச்வரி
12.அரிக்னீ
ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.
காரியசித்தி, பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை, யந்திர, மந்திர, ஹோமம், ரக்ஷை, உள்ளது. ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள், அரசாங்ககளில் வெற்றி தருவதுடன், எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும்.
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
***
No comments:
Post a Comment