Monday, April 4, 2016

மனமே புரிந்து கொள் .....!!!

மனமே புரிந்து கொள் .....!!!
எனக்கு ஏற்படும் 
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப்பொமுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் நான் செய்திருக்கும் செயல்களின் பயன்.
உயிரானது
வெளி உலகத்தின் மீது கொண்டுள்ள ஆசைகளை எல்லாம் கடந்து உள்ளத்திற்கு உள்ளே சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். எந்த உயிரானது இறைவனைத் தரிசிக்கவில்லையோ அந்த உயிரானது பேரின்பத்தை அடையாது.
மனமே
துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டு விடு உனக்கேன் வேதனை வரப்போகிறது. அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள். காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
புரிந்து கொள்
எப்போது நீ போடும் திட்டங்கள் தோல்வி அடைகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதி அளித்து விட்டான் என்று பொருள்.
வாழ்கையில்
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. ஏற்றத்தில் மயக்கமும் வீழ்ச்சியில் கலக்கமோ கொள்ளாதே .....
எனக்கு தோல்விகள் குழப்பம்கள் ஏற்படும் பொழுது நான் அடிக்கடி படிக்கும் வசனம்கள் .....
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவ சிவ சிவ ஓம் ....

SEE GOD

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!
பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்
அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்
அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்
மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.
முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன
சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.
புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.
பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.
தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.
நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம். 
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்
மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.
அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.
அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.
மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.
தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.
சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.
கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.
உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.
மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது.

மனோவசியம்

மனோவசியம்
மனோவசியம் என்றால் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருந்தால் இந்தத் தொடர்பு அம்சத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் மனோ வசியத்திற்கு உள்ளாகி இருந்தால், அவருக்கு, வசியம் செய்தவரின் குரல் மட்டுமே கேட்கும். அவருடைய அடக்கமான ஆணையிடும் குரல் கேட்குமே தவிர, பார்வையாளர்கள் இருந்தால்கூட அவர்களின் உரத்த குரலும் கேட்காது. இந்தியப் பெண் வட்டப்பொட்டு வைத்துக் கொள்வதும் இதேபோலத்தான். அவளுக்கு அது ஆழ்ந்த கருத்தைத் தூண்டி விடும். மனோவசியத்திற்கு உள்ளானவர், வசியம் செய்தவருக்கு மட்டுமே கதவு திறக்கிறார். மற்றவர்களுக்கு அவர் கதவு மூடிக்கொள்கிறது. கிசுகிசுத்தாலும் கூட அவர் செய்துவிடுவார். மற்றவரின் உரத்த குரல்கூட அவர் காதில் விழாது. அந்த மனிதரின் பிரக்ஞைக்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு. அது வசி யம் செய்தவருக்கு மட்டுமே திறக்கும். அவரது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்தவரோடு மட்டும் பந்தப்பட்டு விடுகிறது.
இதேபோலத்தான், பெண்ணின் வட்டப்பொட்டு அவள் கணவனுடன் மட்டும் பந்தப்பட்டு விடுகிறது. அவள் தன் கணவனை மட்டுமே பின்பற்றுவாள். அவனுக்கு மட்டுமே சரணடைவாள். அதுதவிர, உலகின் மற்றவர்களிடையில், அவள் தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வாள். அவளது பெண் மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது. கணவன் இறந்தவுடன் அவள் தன் திலகத்தை அழித்து விடுகிறாள். காரணம், இனி அவள் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை! அதன் அறிவியல் அம்சம் என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. பெண், விதவையாகி விடுவதால் பொட்டு அழிக்கப்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். காரணம் வேறானதாக இருக்கிறது.
அதன்பிறகு அவள், அதிக சுதந்திரத்துடன் ஆண் பிள்ளைபோல வாழ்நாள் முழுதும் வாழலாம். மிகுந்த சுதந்திரம் பெற்றால், அது அவளுக்கு மேலும் நல்லதாகிறது. அற்ப காரியத்திற்கும் கூடப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை அவளை விட்டு அடியோடு விலகிப்போய் விடுகிறது. பொட்டுப் பரிசோதனை ஆழமானது. சரியான இடத்தில், சரியான பொருள் கொண்டு, சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. அது வெறும் அழகுக்கு என்றால், அதற்கு எந்தவித மதிப்பும் இல்லை. வெறும் சம்பிரதாயமாக மட்டுமே அமையும். அதனால் தான், பெண்ணுக்கு முதன் முதலாகப் பொட்டு வைப்பதை ஒரு சடங்காகச் செய்கிறார்கள். அது, குரு சீடனுக்குத் திலகம் சூட்டுவது போன் றது. அப்படிச் செய்தால்தான் அது பயனுள்ளதாக அமையும்.
அவையெல்லாம் இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டன. அவற்றிற்குப் பின்னால் உள்ள அறிவியல் சங்கிலி முழுசாய்த் தொலைந்து விட்டது. எல்லாம் வெறும் சடங்காகி விட்டது. உள்ளீடற்ற வெறும் கூடாகிவிட்டது. சிலர் இன்னும் எந்த நோக்கமும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அதைச் சுமந்து திரி கிறார்கள். பயன்தரும் மூன்றாம் விழிச்சக்கரம் பற்றி, மேலும் சிலவற்றைச் சொல்கிறேன். ஆணைச் சக்கரத்திலிருந்து நேர் மேலே இழுக்கப்படும் கோடு, மூளை யை இரு சம பாகங்களாக பிரிக்கிறது. இடம், வலம் என மூளை, அந்தக் கோட்டில்தான் ஆரம்பமாகிறது. நமது மூளையில் பாதிகூடப் பயன்படுத்தப்படுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்! நம்மிடையே அதிபுத்திசாலிகளாக உள்ள அறிஞர்கள்கூட பாதிப் பகுதியை கூட பூரணமாய் பயன்படுத்துவதில்லை! மற்ற பகுதி சும்மா கிடக்கிறது, வளர்ச்சியே இல்லாமல்!
அது ஏன் அப்படியிருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கும் மனோதத்துவ நிபுணர்களுக்கும் இன்னும் புதிராகவே இருக்கிறது. அறுவை செய்து பாதி மூளையை அகற்றி விட்டாலும்கூட, ஒருவர் இயல்பாகவே இயங்க முடியும்! அது அகற்றப்பட்டதுகூட அவருக்குத் தெரியாது! ஆனால், இயற்கை எதையுமே தேவையில்லாமல் படைக்காது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு தனி மனிதருடைய மூளையில் தவறு ஏற்பட லாமே தவிர, ஒட்டு மொத்தமான சமுதாய மூளைகளில் தவறு நேராது, சமுதாயத்தின் அரைவாசி மூளை பயன்படாமல் செயலற்றுப் போனாலும்கூட. அந்த அரைவாசி மூளை செயல்படுவது, யோகத்தில் மூன்றாம் விழிச்சக்கரம் செயல்பட ஆரம்பித்தால்தான். அரைவாசி மூளை மூன்றாம் விழிச்சக்கரத் திற்குக் கீழே உள்ள மையத்தோடு இணைந்திருக்கிறது. மற்ற அரை மூளை, அந்தச் சக்கரத்திற்கு மேலே உள்ள மையத்தோடு 
இணைந்திருக்கிறது.
மூன்றாம் விழிச்சக்கரத்திற்குக் கீழே உள்ள மையங்கள் செயல்படும்போது மூளையின் இடப்பகுதி வேலை செய்கிறது. மேலே உள்ள மையங்கள் செயல்படும்போது மூளையின் வலப்பாகம் செயல்படுகிறது. மறுபாதி செயல்படாதவரை அது பற்றி எதையும் நாம் தெரிந்துகொள்ள இயலாது.ஸ்வீடனில் ஒருவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அப்போது அவருக்கு, பத்து மைல் சுற் றளவில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்தன! மூளையில்தான் ஏதோ பழுது ஏற்பட்டுவிட்டது என்று முதலில் நினைத்தார்கள். காரணம், தன் காதில் ஏதோ ரீங்காரம் எழுவதாகத்தான் அவர் தெரிவித்தார்.
ஆனால், இரண்டு வாரங்களில் அவர், வானொலி நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் பயந்துபோய், என்ன கோளாறு எ ன்று மருத்துவரைக் கேட்டார். மருத்துவர், அவர் கேட்டதைச் சொல்லும்படிக் கேட்டார். நோயாளி, கேட்ட பாடலைச் சொன்னார். அதை, மருத்துவர் வீட்டிலிருந்து புறப்படும்போது கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அவர் புறப்படும் போது ஒலிபரப்பு முடிந்துவிட்டது. மறு ஒலிபரப்பு ஆரம்பமாகும் நேரத்திற்கு மருத்துவமனைக்கு ஒரு வானொலிப் பெட்டியை கொண்டு வந்தார்கள். சோதனை செய்ததில் அந்த வானொ லியில் ஒலிபரப்பானதே, அவரது காதுகளில் ஒலித்திருக்கிறது. அவரது காதுகள் வானொலி ஏரியல்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பது தெரிந்தது! அவருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை நடத்தியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அந்த வானொலி ஓசையை நிறுத்த வழியே இல்லை! அவர் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும், வானொலி அவரது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது!
இந்த நிகழ்ச்சி நமக்கு ஒன்றைத் தெளிவாக்குகிறது - காதுக்கு மகத்தான சக்தி இருக்கிறது! இந்த நூற்றாண்டின் இறுதியில், வானொலிப் பெட்டி இல் லாமலேயே நம்மால் நிகழ்ச்சிகளைக் கேட்கும் நிலை வரலாம்! காதில், ஆரம்பிக்கவும் நிறுத்தவும் செய்கிற ஒரு கருவியை மாட்டிக் கொண்டால் போதும். ரயில் விபத்தின் காரணமாக அந்த யோசனை வந்தது. பல யோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் விபத்துகளாலேயே கண்டுபிடிக்கப்பட்டன. நமது பழைய சிந்தனைகள் காரணமாக, காதுக்கு அப்படியொரு சக்தி இருப்பதாக நம்மால் நினைக்கவே முடியவில்லை. வானொலி பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. காதுகள் வந்த பின்னால்! காதுகள் முன் மாதிரி! காது இருப்பதால்தான் வானொலி காதின் மற்ற ஆற்றல்கள் என்ன என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு விபத்தின் மூலமாகக் கண்டுகொண் டால்தான் உண்டு!
இரண்டாம் உலகப் போரின்போது இதேபோன்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. காயம்பட்ட ஒருவன் மயக்கமடைந்தான். அவனுக்கு நினைவு திரும்பிய போது, அவனால் விண்மீன்களைப் பார்க்க முடிந்தது. பகல் நேரத்திலேயே! விண்மீன்கள் எப்போதும் அங்கேதான் இருக்கின்றன. கதிரொளியின் வீச் சால் பகலில் புலப்படுவதில்லை. வெகு தொலைவில் உள்ள அவற்றைக் கதிரொளி காணவிடாமல் தடுத்து விடுகிறது. கதிரவனைவிடப் பல்லாயிரம் மடங்கும் பல லட்சம் மடங்கும் ஒளியும் பருமனும் மிக்க விண்மீன்கள் இருக்கின்றன. அவை, கதிரவனை விட வெகு தொலைவில் இருக்கின்றன. கதிரொளி நமது பூமியை அடைய சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றன. நமக்கு மிக அருகிலுள்ள விண்மீனின் ஒளி பூமியை அடைய நான்கு ஒளியாண்டுகள்ஆகின்றன!
ஒளி வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வேகத்தில் பயணம் செய்தும்கூட கதிரொளி பூமியைச் சேர சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றன. அருகிலுள்ள விண்மீன் ஒளியோ நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது! ஒளி பூமியை அடைய, நான்காயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் விண்மீன்களும் நான்கு லட்சம் ஆண்டுகள், நான்கு கோடி ஆண்டுகள், கோடானு கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு, அளவு கடந்த தொலைவில் உள்ள விண்மீன்களும் பிரபஞ்ச வெளியில் இருக்கின்றன! சில விண்மீன் ஒளிகள், புறப்பட்ட காலத்தில் பூமியே உருவாகவில்லை என்றும் அவை வந்து சேரும்போது பூமியே இல்லாமற்போகலாம் என்றும் விஞ் ஞானிகள் கூறுகிறார்கள்! பூமி என்றொரு கிரகம் இருந்ததே அந்த விண்மீன் ஒளிக்குத் தெரியாமல் போய்விடும்! அவை பயணத்தில் இருக்கும்போதே பூமி அழிந்து விடலாம்!
காயம்பட்ட மனிதன் பகலில் விண்மீன்களைப் பார்த்தான். அவன் விழிகளுக்கு என்ன நேர்ந்தது? அவற்றிற்கு அதீத சக்தி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி கண்ணின் அபூர்வ ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நமது கண்களில் அழுத்தமான ஆற்றல் உறங்கிக்கொண்டிருக்கிறது அது நமக்குத் தெரியாது.அது நமக்கு ஓர் அற்புதம்போலத் தோன்றுகிறது. ஆனால், அது அற்புதமல்ல. நமக்குள் எத்தனையோ அற்புதங்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால், அவை வெளிப்படுவதில்லை. பூட்டிய கதவுகளுக்குள் அவை அடைபட்டுக் கிடக்கின்றன. நமது அரைவாசி மூளை பயன்படுத்தப்படாமல் இருப்பது பற்றியும் நெற்றிக்கண் தூண்டுதல் பெற்றால் அது செயல்பட ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட் டேன். அதுதான் யோக தரிசனம்.
அண்மைக்கால நிகழ்ச்சிகளால் அந்த அகப்பார்வை வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லை. இருபதாயிரம் ஆண்டுகளாக நமக்குத் தெரிந்திருக்கும் உண் மைதான் அது. விஞ்ஞான முடிவுகளை உறுதியாகச் சார்ந்திருக்க வழியில்லை. காரணம், இன்று உண்மையாக இருப்பதை விஞ்ஞானம் ஆறு மாதத்தில் பொய்யாக்கி விடும்! ஆனால், இந்த யோகக் காட்சி, குறைந்தபட்சம் இருபதினாயிரம் ஆண்டு அனுபவப் பழமை கொண்டது. இப்போதுள்ள இந்த மனித நாகரீகம்தான் முதலாவது என்ற மயக்கம் நமக்கு உண்டு. ஆனால், பல மனித சமுதாயங்கள் முன்னே தோன்றி மறைந்துவிட்டன. இதே அறிவியல் சிகரங்களை மனிதன் நமக்கு முன்னே பலமுறை எட்டிப் பார்த்துவிட்டான். அந்தச் சமுதாயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
1924ல், ஜெர்மனியில் அணுசக்தி ஆய்வு மையம் ஒன்று நிறுவப்பட்டது. ஒருநாள் திடீரென ஒருவர் அந்த மையத்திற்கு வந்தார். தம் பெயர் ஃபால்க நெலி என்று சொல்லிக்கொண்டார். அணு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தார்! நமக்கு முன்னே பல சமுதாயங்கள் அணுசக்தி யால் அழிந்திருக்கின்றன. ஆய்வைத் தொடராமல் நிறுத்தி விடுவது நல்லது என்று எச்சரித்துவிட்டு உடனே வெளியேறி விட்டார்! அப்புறம் அவரைத் தேடினார்கள். அவரைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவே இல்லை!-சுடுகாட்டு சித்தன்-

கங்கை ஓர் ரசாயனச் சாலை

கங்கை ஓர் ரசாயனச் சாலை


கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீர்களுக்கும் கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை - சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம். கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர்கள் சில வாரங்களிலேயே நாறிவிடும்.
ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை! இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல.
கங்கையின் பிறப்பிடம் ‘கங்கோத்ரி’ என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது. சூஃபிகளின் ஊரான ‘அல்குஃபா’ பற்றி முன்பு குறிப்பிட்டேன். ஒரு நோக்கம் எதுவும் இல்லாமல் அங்கே நம் உடலுடன் போய் விடுவது சாத்தியம்தான். அங்கே தேடிப் போக விரும்பினால், தவறான வரைபடத்தைத் தந்து விடுவார்கள்! தேடிப் போகாமல், எந்த நோக்கமும் இல்லாமல் போனால், எதிர்பாராமல் அங்கே போய்விடக்கூடும்.
எதிர்பாராமல் அல்குஃபாவை அடைந்து விடுவது சாத்தியமே தவிர, கங்கையின் பிறப்பிடத்தை அடைவது சாத்தியமே இல்லை. பருவுடல் தாங்கி அங்கே செல்ல முடியாது. ஆனால், சூட்சும சரீரத்தில் போகமுடியும். உண்மையான கங்கோத்ரி சாதாரணக் கண்களுக்குத் தெரியாது. தியானத்தில், பருவுடல் பின்னே தங்கிவிட, சூட்சும சரீரம் கங்கோத்ரியை நோக்கிப் பயணம் செய்யும். அப்போதுதான், அப்போது மட்டுமே, கங்கை நீரின் சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அதை நிரூபிக்க முடியாது என்று சொன்னேன், நிரூபிக்க எந்த வழியும் இல்லை. கங்கையின் பிறப்பிடத்தில் ரசவாதம் நிகழ்கிறது. அதனால்தான், கங்கையின் இரு கரைகளிலும் புனிதத் தலங்களை இந்துக்கள் அமைத்திருக்கிறார்கள். இந்துக்களின் புனித தீர்த்தத் தலங்கள் ஆற்றங்கரைகளிலும் சமணரின் புனிதத் தலங்கள் மலைகளின் உச்சியிலும் ஏன் அமைந்திருக்கின்றன என்று நீங்கள் வியப்படையலாம்.
பசுமையற்ற வறண்ட மலைமீதே சமணரின் புனிதத் தலங்கள் அமைந்திருக்கின்றன. பசுமையான மரச்சோலைகள் நிறைந்த மலைகள் விலக்கப்படுகின்றன. இமயம் போன்ற அழகிய மலைகள்கூட நிராகரிக்கப்படுகின்றன. ஒரு மலை வேண்டுமென்றால், இமயமலையைவிடச் சிறந்தது வேறு என்ன கிடைத்துவிடும்?
ஆனால், சமணர்கள் வேண்டுவதோ வறண்ட மலைகள்! வெயில் காயும், பசுமையற்ற சூடேறிய பாறைகள் கொண்ட, தண்ணீர் இல்லாத மலைகள்! காரணம், அவர்கள் அனுபவிக்கும் ரசவாதம் உடலின் வெப்பத்துடன் தொடர்புடையது. இதற்கு நேர் மாறாக, இந்துக்களின் ரசவாதம் தண்ணீர் என்ற மூலகத்துடன் தொடர்புடையது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சாவிகள். ஆறோ, குளமோ, பசுமையோ இல்லாத இடம் இந்துக்களுக்குத் தீர்த்தத்தலம் ஆகாது. இவர்களின் சோதனையெல்லாம் தண்ணீரின் தொடர்பு கொண்டவை. இவர்களின் புனிதத்தலங்கள் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டவை.
தண்ணீரால் உருவானவை. ஆனால் சமணத் தலங்கள் நெருப்பாதாரம் கொண்டவை. உடலில் நெருப்பைப் பாய்ச்சும் இடங்களே அவர்களின் புனிதத் தலங்கள். 
இந்து வேதங்களும், முனிவர்களும், நீர் ஆதாரத்தையே வலியுறுத்துகிறார்கள். அதனால்தான், இந்து சன்னியாசிகள் பால், தயிர், வெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். தம்முடலில் ஈரப்பதம் இருப்பதற்காக, தேவையான ஈரப்பதம் இல்லாவிட்டால், இந்து சாவி திறக்காது! இதற்கு மாறாக, உடலில் வறட்சியை ஏற்படுத்துவதே சமணரின் நோக்கம். இந்த வறட்சியைப் பாதுகாக்க வேண்டியிருப்பதால்தான் அவர்கள் குளிப்பதில்லை! சமண சன்னியாசிகளின் உடல் அழுக்கேறி நாறுவது இதனால்தான். ஆனால் குளிக்காமைக்கான காரணத்தை அவர்களால் விளக்க முடிவதில்லை.
ஏன் அவர்கள் எப்போதாவது குளிக்கிறார்கள்? அவர்களுடைய சாவி தண்ணீர் அன்று; நெருப்பு. நெருப்புத்தான் அவர்களின் தவம். அதுதான் சுய சித்ரவதை! எல்லாவகையிலும் உள்ளே தீயை எழுப்புவதுதான் சமணரின் நோக்கம். அவர்களின் உடல்களின் மேல் தண்ணீர் ஊற்றினால் உள் நெருப்பு பலவீனப்பட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால், பசுமையற்ற, நீரற்ற, வறண்ட மலைகளில் நாம் சமண முனிவர்களைப் பார்க்க முடிகிறது. சூடேறிய பாறைகளின் சூழலில்தான் அவர்கள் இருப்பார்கள்! எல்லா மதங்களிலும் உண்ணாவிரதம் உண்டு. விரதத்தின்போது தண்ணீர் அருந்தலாம். ஆனால், சமணம் நீர் அருந்தக் கூடாது என்கிறது! இல்லறச் சமணர்களால், வீட்டில் தண்ணீர் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால், குறைந்த பட்சம் இரவிலாவது தண்ணீர் குடிக்காமல் இருக்குமாறு அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், தண்ணீரோடு சேர்ந்து பூச்சி புழுக்கள், கிருமிகள் உள்ளே போய்விடக்கூடாது என்பதற்காகவே அந்த நிபந்தனை விதிக்கப்படுவதாக சமணர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமணரின் எல்லா விதிகளுமே அகத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்காகத்தான். மகாவீரரைப் போலக் குறைந்த அளவு நீர் அருந்துவதால், ஆணின் விந்து வறண்டு போய் விடும் என்பது இன்னொரு செய்தி! அதனால், பிரம்மச்சரியம் காப்பது எளிதாகி விடுகிறது. கொஞ்சம் ஈரப்பதம் உடலில் இருந்தாலும் விந்து பாயத் துடிக்கும்! சமணரின் ஆதாரபூர்வமான புனிதத் தலங்கள், வறண்ட இடங்களில் அமைந்திருந்தாலும், பிற்காலத்தில் அவர்கள் மற்றவர்களைப் பார்த்து, நீர் நிலைகள் அருகே புனித இடங்களை அமைக்கத் துவங்கினார்கள். இவை அர்த்தமற்றவை. ஆதார பூர்வமானவையும் அல்ல. இந்துக்களின் ஆதாரபூர்வமான தீர்த்தத்தலம், ஆற்றங்கரைகளில், பசுமை விரித்த அழகிய சோலைகள் அருகேதான் இருக்கும். ஆனால், சமணர் தேர்ந்தெடுத்த மலைகள் அழகற்றவை. பசுமை இருந்தால்தானே அழகிருக்கும்?
சமண முனிவர் குளிக்காததோடு பல்லும் விளக்க மாட்டார்! பல் விளக்கவும் தண்ணீர் வேண்டுமே! இந்த வறட்சியின் அடிப்படையைச் சமண வேத நூல்களின் மூலம்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் கடுந்தவமே அகத்தீயை எழுப்புவதுதான். தண்ணீரின் தொடர்பால் தீயின் கடுமை குறைந்துவிடும். தண்ணீரின் இந்தப் புறக்கணிப்பு, தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்கான எதிர்மறை வழி. நமக்குள் மூலகங்கள் சமநிலையில் உள்ளன. ஏதாவது ஒரு மூலகத்தின் மூலமாக ஆன்ம பயணம் போக விரும்பினால், அதற்கு மாறான மூலகங்களைப் புறக்கணிக்க வேண்டி நேர்கிறது. நெருப்பின் மீது கவனம் செலுத்தினால் நீர் அதற்கு விரோதமாகிறது. நீர் குறையக் குறைய உள்ளே நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கும். கங்கையில் ரசாயனச் சோதனையும் நடக்கிறது; ரசவாதமும் நடக்கிறது. கங்கையில் குளித்த பின் ஒருவர் புனிதத்தில் பிரவேசித்து விடலாம்.
கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது. கங்கை நீரையே அருந்தி வருபவர், வேறு நீர் அருந்தினால், சிரமத்தில் சிக்கிக் கொள்வார்! கங்கை நீரைப் போலவே இருக்கும்படி மற்ற ஆற்று நீரையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முடியவில்லை. காரணம், சாவி தொலைந்துவிட்டது! கங்கையில் நீராடிய பின், கோயிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான். வேறு மூலகங்களும் புண்ணியத் தலமாகப் பயன்படுகின்றன. அவை மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, மறைந்த எகிப்திய நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பிரமிடுகளைச் சொல்லலாம். பிரமிடுகள் தீர்த்தத் தலங்கள்!
பிரமிடுகளில் உள்ள சுவையான அம்சம், அதற்குள் பரிபூரண இருள் குடிகொண்டிருப்பதுதான். அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது. அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் உள்ளே சென்றவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில்தான் போயிருக்க வேண்டும். ஆனால், சுரங்கப் பாதைச் சுவர்களில் புகையின் சுவடே இல்லை! பிரமிடுக்குள் செல்லும் பாதை வளைந்து வளைந்து நீண்டு செல்வது. எப்படிப் போனார்கள்? எண்ணெய், நெய் விளக்குகள் கொண்டு போனதற்கான அடையாளமும் உள்ளே இல்லை. யாருமே உள்ளே செல்லவில்லையென்றால், அந்தப் பாதைகள், படிக்கட்டுகள், கதவுகள், உட்சாளரங்கள் எல்லாம் எதற்காக?
பெரிய புதிர்தான்! புதிர் அவிழாமல் போனதற்குக் காரணம் அந்தப் பிரமிடுகள் மன்னரின் சமாதிகள் என்ற தவறான கருத்துத்தான். உண்மையில் அவை தீர்த்தத் தலங்கள். அகத்தின் நெருப்பில் சோதனை செய்பவரின் உடல் ஒளிவீசும்! அப்படிப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே நுழையத் தகுதி படைத்தவர்கள். மின்னொளியும், தீப்பந்தமும் இல்லாமல், தம் உடலின் ஒளி கொண்டே மேன்மக்கள் உள்ளே சென்றிருக்க வேண்டும்! ஆனால், அந்த உடல் வெளிச்சத்தை, தீயுடன் தொடர்பு கொண்ட சில தனிச் சிறப்புடைய தியான முறைகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். உள்ளே செல்கிறவர்களுக்கான தகுதியாக அந்த உடல் வெளிச்சம் அன்று கருதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரமிடுகளை ஆராயப் பல விஞ்ஞானிகள் முயன்றார்கள். அவர்களில் ஒரு விஞ்ஞானியின் உதவியாளர் காணாமல் போய்விட்டார். எல்லோரும் உள்ளே செல்லும் பாதைகளில் விளக்கொளியில் தேடினார்கள். ஒரு முழுநாள் ஆகியும் அவர் கிடைக்கவே இல்லை. அப்புறம் அவர், இரவு இரண்டு மணிக்கு வெளியே ஓடோடி வந்தார், பைத்தியம் பிடித்தவர் போல!
‘‘‘நான் சுரங்க இருளில் போய்க் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு வழி திறந்தது போல் தோன்றியது. தொடர்ந்து மேலே போனேன். குறிப்பிட்ட இடத்தைக் கடந்ததும் சட்டென என் பின்னால், கதவு மூடியது போல வழி அடைத்துக் கொண்டது. திரும்பி நகர்ந்து தடவிப் பார்த்தேன். ஒரு பாறை நான் வந்த வழியை அடைத்துக் கொண்டிருந்தது, கதவு போல. அது எப்படி, எங்கிருந்து நகர்ந்து வந்து கச்சிதமாக அடைத்துக் கொண்டது என்பது தெரியவில்லை. சத்தம் போட்டுப் பார்த்தேன். பயனில்லை வேறு வழியில்லாமல் தொடர்ந்து இருளில் போய்க் கொண்டே இருந்தேன். அப்புறம், நான் எப்படி வெளியே வந்தேன் என்பதே தெரியவில்லை. அதை விளக்கிச் சொல்ல என்னால் முடியவில்லை!’’ என்றார் அவர். அவர் அரைக் கிறுக்குப் போல் உளறினார். எதை எதையோ பார்த்ததாக உளறினார். மற்றவர்கள் எவ்வளவோ தேடிப் பார்த்தும் அவர் எந்த இடத்திலிருந்து அவர் வெளியேறினார் என்பதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை!
அவர் மயங்கி விழுந்து கனவு கண்டிருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். என்றாலும் அவர் சொன்னதை, சொன்னபடியே எழுதி வைத்து விட்டார்கள். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு எழுத்துப் பிரதி அவர்கள் கைக்குக் கிடைத்தது. அதிலும் அந்த ஆள் சொன்னது போலவே அவருக்கு முன்பு யாரோ எழுதி வைத்திருந்தார்கள்! அதனால் மர்மம் துலங்கவில்லை; மேலும் ஆழமாகி விட்டது! சில மனிதருடைய மனோநிலைக்கு ஏற்றபடி உள்ளே நிகழ்ச்சிகள் நடக்கின்றனவா அல்லது எதேச்சையானதா என்பது தெளிவாகவில்லை. சிலரின் சில மனோநிலைகள் கதவைத் திறக்கவும், மூடவும் செய்யுமோ? எப்படி என்று தெரியவில்லை. ஆனால், கதவு திறப்பதற்கான வழியும் வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
நான் குறிப்பிடும் ரகசிய இடங்களுக்கான கதவுகள் இருக்கின்றன; சாவிகளும் இருக்கின்றன. ஆனால், அவை மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த இடங்கள், ஒருவரது பிரக்ஞையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. பிரமிடின் உள் மண்டபங்கள், அறைகள், அவற்றின் அளவுகள் திட்டவட்டமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று. அறையின் மேற்பகுதி தாழ்வாக இருந்தால், ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல் உணர்வீர்கள். உங்களை எதுவுமே அழுத்துவதில்லைதான். ஆனால். உங்களுக்குள் அப்படிப்பட்ட உணர்வு தோன்றி விடுகிறது. உயர்ந்த மேற்பகுதி கொண்ட விசாலமான அறைகளுக்குள் நுழையும்போது, நமக்குள் ஏதோ விசாலமடைவதாக உணர்கிறோம். தியானத்திற்கு உதவும் முறையில் அறைகளை அமைத்து விட முடியும். ஒவ்வொரு புனித இடத்திற்கும் தனி இசை உண்டு. எல்லா இசைகளும் அப்படிப்பட்ட இடங்களிலிருந்தே பிறக்கின்றன.
அவை தியானம் செய்பவர்களால் உருவாக்கப்பட்டவை. இசைக்கலை மட்டுமல்லாமல் நாட்டியக் கலையும் கோயில்களிலேயே தோன்றின. நறுமணம் கூட முதன் முதலில் கோயில்களில்தான் பயன்படுத்தப்பட்டது. இசையால் இறைவனை அடையலாம் என உணரப்பட்டது. இசையின் மூலமாக அதற்கு நேர்மாறான திசையிலும் நாம் போகலாம். குறிப்பிட்ட நறுமணம் தெய்வத்தை நெருங்கச் செய்யும். இன்னொரு நறுமணம் புலன் உணர்வுகளைத் தூண்டி விடும். சில அறைகளில் விரைவில் தியானம் கை கூடும். சில அறைகளில் தியானம் தடைபட்டு விடும்! கைதிகளை மூளைச் சலவை செய்வதற்காக சீனாவில், தனிப்பட்ட அறைகளைக் கட்டினார்கள். முன்கூட்டித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அவை. அளவுகள் மாறிவிட்டால், மூளைச் சலவை சிரமமாகிவிடும். பல நீண்ட சோதனைகளுக்குப் பிறகே, அவற்றின் நீள, அகல, உயரங்கள் வரையறை செய்யப்பட்டன. அந்த மாதிரியான அறைக்குள் நுழைந்தவுடனே கைதியின் மனதில் பாதிப்பு உண்டாகி விடுகிறது.
அவனது மனம் மாறுவதற்கு அல்லது சிதைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதும் கண்டறியப்பட்டது! அத்தகைய மனச் சிதைவை சில இசைகள் விரைவுபடுத்தும் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது! தலையின் மீது குறிப்பிட்ட இடத்தில் அடித்தாலும் அது விரைவாகும்! கைதியின் தலைக்கு மேல் நீர் நிறைந்த பாத்திரம் தொங்கும். அதனடியில் ஒரு சிறு துளை. நீர், துளித் துளியாக அவனது உச்சந்தலை மேல் சொட்டிக் கொண்டிருக்கும். அவன் நின்று கொண்டிருப்பான். அசையாதபடி கட்டிப் போடப்பட்டிருப்பான். தலையையும் அசைக்க முடியாது. உட்காரவும் முடியாது!
ஒரு மணி நேரத்திற்கு மேல் கைதியால் தாக்குப் பிடிக்க முடியாது. தண்ணீர் தலைமேல் கொட்டும் சப்தம் பெரிதாகிக் கொண்டே போகும்! கடைசியில் மலையே தலை மீது விழுவது போல் தோன்றும்! குறிப்பிட்ட அளவுள்ள அறையில், திரும்பத் திரும்ப தலையில் நீர் சொட்டும் போது, இருபத்து நான்கு மணி நேரத்தில் அவனது புத்தி பேதலித்து விடும். அப்புறம் அவன் பழைய ஆள் அல்ல. முற்றிலும் மாறியிருப்பான். என்றாலும் இதைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருப்பார்கள்!
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்

Sunday, April 3, 2016

வெற்றி தரும் அரிய மந்திரம்.

வெற்றி தரும் அரிய மந்திரம்.
நான் சொல்லப்போவது மெய்ஞான வழி. ஞானிகள் அனுபவித்து வெற்றி பெற்ற வழி. பலரும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வழி. இதற்கு நீங்கள் வானத்தை வில்லாக வளைக்க வேண்டாம். மணலை கயிறாகத் திரிக்க வேண்டாம். வேண்டுவதெல்லாம் ஒரு தனியான இடம். அது உஙகள் அறையாக இருக்கலாம் அல்லது தெரு முனையாக இருக்கலாம். காலையோ, மாலையோ அல்லது இரவாக கூட இருக்கட்டும். அதற்கென ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம ஸ்வாஹா: “
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல், மனதிற்குள் ஆழமாக, மிக மிக ஆழமாக 20 நிமிடம் தொடர்ச்சியாக உருவேற்றுங்கள். சில நாட்களிலேயே நல்ல பலனை காண்பீர்கள். அனுபவபூர்வமாக பெற்ற பலனை கண்டு வியந்து இதனை எல்லோரும் அறியட்டுமே என இயம்புகிறோம். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள் த்ன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று பலர் கூறலாம். அவர்கட்கு பதிலை தேடி அலைய வேண்டாம். ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டவனுக்கு கையிற் கிடைத்த மரக்கட்டை போன்றது இந்த மந்திரம். இதனை பற்றிக்கொண்டால் கரை சேரலாம் என்று சவால் விட்டுக்கூறுகிறேன். முயன்று பாருங்கள் வெற்றி சர்வ நிச்சயம். முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் இதனை நீவீர் செய்து முடியும். பெற்ற வெற்றிகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

Friday, April 1, 2016

GOOD OLD HABITS

 பழக்கவழக்கங்களை நாம் கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வாழை இலை சாப்பாடு ஏன்?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. 'ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.

விபூதி பூசுவதன் ஏன்?

தலைக்கு குளித்து விட்டு விபூதியை நெற்றி நிறைய பூசினால் தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் தண்ணீரை விபூதி உறிஞ்சி விடும்.

விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. இந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

அனுமந்தர் வசிய மந்திரம்

அனுமந்தர் வசிய மந்திரம்
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக
வசி வசி சுவாகா.


இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம்
உரு செபிக்க சித்தியாகும்.

செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை
போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஸ்ரீ சொர்ண கால பைரவர்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாயஅஜாமிலா பத்தாய லோகேஸ்வராயஸ்வர்ணாகர்ஷண பைரவாயமம தாரித்தர்ய வித்வேஷணாயஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:
”இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.
3.வடுக பைரவ மூல மந்த்ரம்:”
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”
சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.
4.பைரவ காயத்ரி
1:”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…பைரவர் காயத்ரி
2:”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம்வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹேஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்
ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவமகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தேஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹசொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹஓம் பக்தப்பிரிய நமஹஓம் பக்த வச்ய நமஹஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹஓம் ஸித்தித நமஹஓம் கருணாமூர்த்தி நமஹஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹஓம் ரசஸித்தித நமஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்
1ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாயஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராயஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாயமஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம்
2ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாயதன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
3ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாயலோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாயமமதாரித்ரய வித்வேஷனாயஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!சிதம்பரம்
ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம்,"
ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம்ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !சூல ஹஸ்தாய தீமஹி !தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹேஸ்வாந வாஹாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹேதீர்கதிஷணாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் பைரவாய வித்மஹேஆகர்ஷணாய தீமஹிதந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை ச வித்மஹேபைரவ்யை ச தீமஹிதந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்
விரித்த பல்கதிர்கொள் சூலம்வெடிபடு தமருகம்கைதரித்ததோர் கோலகால பயிரவனாகிவேழம் உரித்து உமை அஞ்சக் கண்டுஒண்திருமேனி வாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச்செந்நெறிச் செல்வனாரே... திருநாவுக்கரசர் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம்

பணத்தை கவர வேண்டுமா ? ஆன்மீகத்தில்…….!


செல்வத்தின் மீது கவனத்தை குவியுங்கள். பணத்தின் பற்றாக்குறை மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதிக பணத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவது இயலாத காரியமாகிவிடும்.
உங்களுக்கு தேவைப்படும் பணம் உங்களிடம் ஏற்கனவே இருப்பது போன்று பாவனை செய்வதும், கற்பனை செய்து கொள்வதும் அதைப் பெற உதவும். செல்வம் இருப்பது போன்ற விளையாட்டில் ஈடுபடுங்கள். பணம் குறித்த உங்களது மனநிலை மேம்படும். அந்த மனநிலை இன்னும் சிறப்பானவை உங்கள் வாழ்க்கையை நோக்கி பாய வழி வகுக்கும்,
தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வு உங்கள் வாழ்வின் இன்னும் அதிகமான பணத்தை விரைவாக கொண்டுவர சிறந்த வழி இதோ……….

உங்கள் மனநிலை எப்போதும் செல்வத்தை குவிப்பதற்க்கு உறுதியாக நிற்கும் ஆன்மீகம். மஹாவிஷ்ணு பூஜை மந்திரம்.

"சங்கு சக்கர கெதாபரனே, துவாரகா நிலை யச்சுதா, கோவிந்தா, புண்டரீகா, க்ஷரக்ஷமாம் சரணா, கதா நமோ பிராமண்ய தோவையா, கோபிகாரமணா, ஹிதாலையா, ஜெகதீதயா, கிருஷ்ணா, கோவிந்தாயா நமோநம"

செய்ய வேண்டிய விதி :
ஒரு கும்பத்தில் தண்ணீர் கொண்டு வந்து, மஞ்சள் நூலினால் கும்பத்தைச் சுற்றி, துளசி, புஷ்பம், சாத்தி, மேற்படி மந்திரத்தை பச்சைக் கம்பளியின்பேரில் உட்கார்ந்து கொண்டு வடக்கு முகமாக இருந்து கொண்டு, துளசி மணியால் ஜெபம் செய்யவும்.

மூலமந்திரம் :
"ஓம் நமோ பாகவதோ, கிருஷ்ணாயா, வாசுதேவாயா, கோபிகலோலா, அம் உம் சௌவும், ஸ்ரீ விஷ்ணு வம்ச திலக ஸ்ரீஹரி, எனக்கு வசமாக சுவாகா"
உரு 1008 ஜெபிக்கவும்.

முதல் நாள் மட்டும் தீட்சை எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் அதன் பிறகு தினந்தோறும் 108 உருவோ, 508 உருவோ, 1008 உரு ஜெபித்து வரவும்.

பலன் :
இந்த மஹாவிஷ்ணுவின் திருமந்திரத்தை எவரும் தினந்தோறும் 1008 உரு ஜெபம் பண்ணுவாராகில் அவருக்குச் சத்துரு கிடையாது. ஜலத்தில் ஜெபம் செய்து ஸ்திரீகளுக்குக் கொடுத்தால், அவர்கள் ஒருக்காலும் தங்கள் புருஷனை விட்டு அன்னியரை விரும்பமாட்டார்கள்.


லட்சுமி தேவி வசிய தீட்சை மந்திரம்
பணத்தை கண்டு அஞ்சும் செல்வந்தர்களே ?
பணம் வேண்டும் என்று நினைக்கும் ஏழைகளே......
நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காரணம் தெரியாமல் வேதனைகளும் பல துன்பங்களும் நம் வாழ்க்கையில் தினம் நடைபெறுகின்ற ஒரு செயலாகவே இருக்கிறது,
செல்வங்கள் இருந்தும் செல்வம் இல்லாத தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு பரிதாபகரமான ஒரு நிகழ்வு.


எந்த தெய்வத்தையோ அல்லது தேவதைகளையோ வணங்கினாலும் காரணம் புரியாமல் அவதிப்படுகின்றவர்கள், வீட்டை சரியாக அமைத்தும் செல்வம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், பல தொழில்கள் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள், பணம் இருந்தும் எந்த தொழில் செய்தால் நஷ்டம் வராமல் பலனை தரும் என்று குழப்பத்தில் இருப்பவர்கள் போன்ற பல சிந்தனைகளில் ஏங்கி தவிக்கும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு, நமது பாரதத்தில் உள்ள எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நமது கலாச்சாரம் அழிந்து கொண்டே வருகின்ற இந்த வேளையில் நாம் மட்டும் பயன் பெற்றால் போதாது என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே.,……….
நமது முன்னோர்கள் எதையும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஏதோ அவர்களுக்கு உயிரை கொடுப்பது போல நம்மை அழித்தது போதும். எல்லா பலன்களும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு லட்சுமி தேவி வசியம் மூலம் உங்கள் வளர்ச்சியின் முதல் படியாக இருக்கும் இந்த பயிற்சி.
லட்சுமி தேவி வசிய தீட்சை எடுப்பது எப்படி, இதை கற்றுக் கொள்வது எப்படி என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றியதை நாங்கள் அறிகிறோம்.
லட்சுமி தேவி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
நீங்கள் எதிர் பார்க்கும் லட்சுமி தேவி வசிய மந்திரம் இதோ………….
"ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா "
எப்படி உச்சரிப்பது எத்தனை நாள் என்பது உங்கள் மன நிலையை பொறுத்து குறைந்தது 48 நாள் முதல் 97 நாட்களுக்குள் உங்களுக்கு லக்ஷ்மிதேவி வசியமாகி விடுவாள்.