Sunday, July 31, 2016

ஸப்த கன்னியர்

🌹ஸப்த கன்னியர்🌹
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே.......
ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.

1.🍓பிரம்மி🍓
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)ஐ.ஏ.எஸ்.,வங்கிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்."
2.🍎மகேஸ்வரி 🍎
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.
இவளது காயத்ரி மந்திரம்
"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்."
3.🍇கெளமாரி🍇
அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன்.குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கெளமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)
கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்."
4.🍊வைஷ்ணவி 🍊
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி.குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்."

🌻ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம்

DISTANCE

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

அன்பினால் அனைவரும் வீடுபெறு

சிவ தியானம்
ஜயோ ஜயோ நான் போறானே நான் வாழனும்.
என்னை வாழவிடுங்க
ஏதாவது வழியிலா என் உடம்பு என்னும் 9 ஓட்டையில் நுழைந்து நான் வாழனும்
வீடுபேறு அடையானும்

என்னை புரிஞ்சுக்குங்க அப்பா, அம்மா,மனைவி, கணவரே, மகனே, மகளே என்னை வாழவிடுங்க,,,
நான் வாழனும் நீ காத்தினாலும் உன்னை வாழவிடமாட்டோம்.
உனக்கு மாப்பிள்ளை வேஷம் போட்டு பன்னீர்தெளித்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்து ,
உன்வீடு இதுதான் பார்த்துகொள் ,
நீ உன் வீடு என்னும்
காடுநோக்கி இழுத்துசென்று எரித்துவிடுவோம்.
ஜாக்கிராதை.
இங்கே வாழும் பொமுது
உன் ஒனை உருக்கி சிவத்தை உணர்ந்தால் சிவம் இல்லை நீர் எமக்கு வெறும் சாவம் மட்டுமே.
ஒவ்வொரு மனிதருக்கும் இது பொறுந்தும்.
சிவவேடம் அணிந்தோம்
ஆனால் கபாடதாரியாகி மாயலோகத்தை உருவாக்கி ஜாலவித்தை புரிந்து அடியார் என்னும் சிவஅன்பாரை அடிமையாகி சிவபாவம் தேர்ஏறி பாவனிவாருகிறோம்.
கங்களான் பூசும்
கவச திருநீற்றை,
கன்டிகையும் பூசவிடாமால் அணியாவிடாமாலும்
எச்சரிக்கை விடுத்தோம்.
அப்பன் அன்பை அடையாவிடாமால் சைமயசின்னம் கட்டுபாடு உருவாகிகூட்டாம் கூட்டாமாக அப்பன் தாழ் விழ்ந்து விடாமால் தனித்து செயல்படவிடாமால் குருஎன்னும் வார்த்தையிலேயே அடிமை ஆக்கிகொண்டோம்.
காலம் காலமாக முன்னோர் சொன்னா அறிவு மற்றும் வாழ்வு மேன்மை, குறித்து சொன்னா அனைத்தையும் நாம் 6th அறிவால் வென்று
காலம்வேறு என்று புறகணித்து உன்னை தனித்து காட்டி உன்னை வருத்திகொண்டாய்.
புராணம், வரலாறு கதையொல்லாம் வாழ்க்கை முன் உதாரணம் எடுத்துகொள்ளமால் வெறும் கட்டுகதை ஆக்கினோம்.
போதும் நிறுத்திகொள்ளுங்கள். இன்னும் மிச்சம் இருப்பது கொஞ்சபேர் தான்.
அப்பன்மேல் அன்பு வைத்து சிவவேடம் அணீந்து இருக்கிறோம்.
உங்கள் கண்களுக்கு ஏழையாகவும் ,
கோழையாகவும் ,
வாழ தெரியாதவார்ககவும் தெரியாலாம்.
புராணத்தை திருப்பி பாருங்கள்
அப்பன் சிவபெருமான்
நம் பிள்ளை எபொழுது நாம்மை உணர்ந்து அப்பன் அழைப்பான் என்று நம்பெருமான் காத்து கொண்டிருக்கிறர்
நிர் உணர்ந்து அப்பன்னு என்று அழைத்தால் அம்மையாப்பருடன் உமக்கு காட்சிகொடுப்பார்
பெரியபுராணம் 63 நாயன்மார்களால் வரலாற்றால் சொல்லாபட்ட உண்மை.
பயம் வேண்டாம்.
உலகபிராமண்டாத்தை கண்டு மிரளவேண்டாம்.
உங்க உயிர் என்னும் ஆன்மா வீடுபேறு அடையா வழிவகுத்து சிவகதி அடைந்து பெறுவாழ்வு வாழ்ந்து அப்பன் மேல்கொண்ட அன்பினால் வீடுபெறு அடையுங்கள் புராணம் வரலாறு திருமுறையில் சொல்லபட்ட உண்மை.
அப்பன் மேல் அன்பைபெருக்கி அப்பன் சிவபெருமான் அன்பினால் வீடுபேறு அடையுங்கள்.
ஒன்னை உருக்கி உள்ஒளி பெறுக்குங்கள்.
இப் பிறப்பைகண்டு பயம் வேண்டாம்
உமக்கு கொடுக்கபட்ட பிறவிவினை உன்ஆன்மாவை பக்குவபடுத்தி உன்னை ஆட்கொண்டு வீடுபெறுகொடுக்கவே.
அந்த பிறவினை என்னும் துன்பகடாலில் விழுந்து பிரளமால் அந்த வினையால் அப்பன் மேல் கொண்டா அன்பை பெருக்கி வருகிறாயயா என்பது மட்டுமே சோதனை.
அப்பன் பிறவி வினையே என்னும் சோதனையே அப்பன் திருவடி அடைந்து வீடூபெறு அடையமட்டுமே.
பயம் வேண்டாம் அப்பன் திருவருள் கூடும் நேரம் இது.
அப்பன் தியாகராஜா பெருமான் திருவருளால் அப்பன் தியாகராஜாபெருமான் நாம்கொண்ட அன்பினால்
அனைவரும் வீடுபெறு அடைவோம்.
திருச்சிற்றம்பலம்.

Wednesday, July 27, 2016

காயத்ரி மந்திரம்

காயத்திரி மந்திரத்தை ஜபிப்பதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

 காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் “நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் “பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் “காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்” எனக் குறிப் பிட்டுள்ளார்.ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் “ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் “யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் “உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்” என்பதாகும்.இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

  வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

“ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்”

 நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

 காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

  டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது….

  கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும்., மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால்., இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. ஒரு மந்திரமோ., தியானமோ., யோகவோ., உடற்பயிற்சியோ., ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ—ம்) காபி., டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும். த்யானமோ., மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர., பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ., கடைப்பிடிக்கும் பழக்கமோ., அதற்கு நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ—ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால்.,  வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

★ மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

★ ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

★11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும்., சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

★ 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ., ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

★ 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

★ 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் “க்ரே” பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

★ இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம்., மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

 மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும்,, பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

★ காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்….

★ கிழக்கு முகமாக அமருங்கள்.

★ ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

★ மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

SOME PRACTICES WHICH MATTERS

*விபூதி*
எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

*கட்டை விரல்*

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

*ஆள் காட்டி விரல்*

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

*நடுவிரல்*

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

*மோதிர விரல்*

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

*சுண்டு விரல்*

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

*மோதிர விரல் – கட்டை விரல்*

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்......*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.

*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.

*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.

*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும். 

Tuesday, July 26, 2016

குலதெய்வம்

வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல்
குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு.
குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு விசேஷங்களை முதலில் குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள்.
ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
தடைகள் விலக பரிகாரம் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?
ஒருவேலை தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளிகிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா.” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குலதெய்வத்தை பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒருநாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும்.
தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சல் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள்.
குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம்தான்.

யார் வந்தேறி ?

யார் வந்தேறி ? ஒண்ட வந்த பிடாரி..ஊர் பிடாரியை வந்தேறி என்கிறதாம்.
=============.
பிராமணனைப் "பார்ப்பான்" என்று சொல்வது அசிங்கப்படுத்தும் வார்த்தை என்று நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டு "பார்ப்பான்", "பார்ப்பான்" என்கிறோம். திராவிடக் கழகத்தினர் பார்ப்பனர்கள் தமிழர் அல்லர். பார்ப்பனர்கள் "ஆரியர்கள்" என்று பிரசாரம் செய்கின்றனர்.
கீழே பாருங்கள். நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் 'தொல்காப்பியம்'. கிறிஸ்துவுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல். (BCE). அதிலேயே பார்பனர்கள் பற்றி கூரியிருகின்றது.
தொல்காப்பியர்
------------------------
1. பேணுதகு சிறப்பின் பார்ப்பான் (தொல்காப்பியம் செய்யுளியல் 182)
"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறு வகையோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).
3.மதுரை வேளாசான்
---------------------------------
• திணை - வாகை
• துறை - பார்ப்பன வாகை
4. புறநானூறு
-----------------------
ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும் ..." (புறம் 9).
"பார்ப்பார்த் தப்பிய கொடுமை ..." (புறம் 34).
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..." (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப்பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24).
5. இளங்கோ
--------------------
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் (சிலப்பதிகாரம் 1:1:49))
6. சீத்தலைச் சாத்தனார்
"பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி" ... (மணிமேகலை 22:41,42)
7.காளமேகம்
----------------------
”மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - …” (பாடல் 6).
பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).
8. நெடுங்கண்ணனார்
-------------------------------
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே - (குறுந்தொகை-156)
9. நல்லாதனார்
-----------------------
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் ..." (திரிகடுகம் 34)
10.பரஞ்சோதி முனிவர்
------------------------------------
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின்
மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ..." (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
"சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).
11.வள்ளுவர்
---------------------
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (ஒழுக்கமுடமை 134).
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
நிச்சயம் முயற்சிக்கிறேன்...பொழிப்புரை தேடி அனுப்புகிறேன் புத்தகத்திலிருந்து...
"பேணுதகு சிறப்பின் பார்ப்பான் " என்று தொல்காப்பிய பாடல்படி "பார்பனன் என்பவன் பேணுதற்கு நல்லவன் " என்று புரிகிறது.
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் " - மறைவழி நடக்கும் அந்தணர்கள் என்றும் புரிகிறது.
திருவள்ளுவர் , "அறவாழி அந்தணர்" என்றும் "அந்தணன் என்போன் அறவோன்' என்றும் கூறியதிலிருந்து மதிபிற்குரிய சமூகம் என்பது புலனாகிறது.
மதுரை வேளாசன் பாடலால் பார்பனன் சொல் கேட்டு ஒரு போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது.
ஹா ஹா..இது மட்டும் இல்லை...திருக்குறளே போதும் சார்..இதைத் தவிர நிறைய பாடல்கள் இருக்கு...இவர்கள் தமிழையும் படிக்க விடாமல், மற்ற மொழிகளையும் படிக்க விடாமல் இருக்க இது தான் காரணம். குட்டு வெளிப்பட்டு விடும்.. தமிழ் இலக்கிய தொல்காப்பியரே சொல்ல்லியிருக்காரே என்று சொல்லிபாருங்க. 

ஸ்ரீ சக்ரம்

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

காசி

*காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.*

*காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.*

*வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.*

*சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.*

*அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.*
*இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

*நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.*
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
*4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.*
ஆக, 13*9*4 = 468.
*நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.*
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
*மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.*
*மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.*
*இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).*
*அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.*
*காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.*
*பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.*
*இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.*
*முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.*
*இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.*
*இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?*
*468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.*
*இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.*
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு *காசி விஸ்வநாதர்* கோவிலில் முடியும்.
*அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.*
*இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.*
*இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.*
இன்றளவிலும் இப்பூஜை *விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
*அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.*
*அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.*
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், *காசியின் 468 கோவில்களிலும்* செய்யப்பட்டது.
*இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.*
*இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.*
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
*இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.*
இது ஒரு சக்தி உருவம்.
*இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.*
*அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.*
*இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்*

PIW - Parent Induced Wastefulness

PIW - Parent Induced Wastefulness.... (Don't) take it easy!

When parents strive to give their children the best of everything at an early age, they are sowing seeds for materially insatiable monsters that are prone to sloth, apathy, avarice and fear.

Don’t stand in self- defense as yet. I have proof. As I Sit in my counselor’s chair day after day I encounter an altogether a new disorder that I have come to label as- *Parent Induced HB Wastefulness* (PIW).

Here are a few examples:

26-year-old Manas does not want to finish his Engineering degree because he does not ‘feel like’ studying. But he harasses his parents every day for money. He tells me that whenever he did not feel like doing any particular activity, his parents told him he can quit. They always said they did not want him to get ‘stressed’ like they were when growing up.

34-year-old Raghav is a qualified Engineer and is married for 2 years but his wife is not ready to live with him hence the counseling. He is qualified alright but refuses to stick to any job as it makes him feel stressed! Every two months he runs back home from work and wants his parents to solve his problem like they did every time he refused to go to school.

28 years old Anjali does not want to go back to her one-year-old marriage because it is too much for her to work in the office and then look after the household. She wants her mother to come and live with her and do the household work.

There are many but all originating in overzealous parents wanting to protect their children from even the smallest discomfort in childhood. You love them alright, but when you shell them from the adversities of life, what you are doing is bringing them up in a sterile environment. The result- the moment they are exposed to the world their immunity buckles up and they stand threadbare wanting to run away from everything that is anything but comfortable.

They have to live in this very world and away from you. Do you really love them? Or do you love yourself more? If it is them, then you would ensure to make them future ready- let them face, talk to them, provide support, but let them face- housework, studies, bullying and adversities. Tell them money is limited and let them learn to hear a lot of ‘NO’- That’s what makes them- FUTURE READY

Dr. Sapna Sharma
 Psychotherapist, Spiritual Counselor, LIfe Reinvention Coach & Motivational speaker.

*இல்லற தர்மம்*

🌿🌺🎋🌺🌿        
*இல்லற தர்மம்*
******🙏🙏******

🌹கட்டிய மனைவியை 
கடைசி வரை 
கண் கலங்காமல் 
காப்பவன் 
தவம் செய்ய தேவை இல்லை 

🌹இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும் 

 96 தத்துவங்கள் 
முடிவு பெறுவது 
இருபத்தி ஒரு வயதிலே 

அதன் பிறகே 
அவனது 
சொந்த 
ஆன்ம கர்மா 
செயலில் இறங்கும். 

சிவமாக இருந்தால் மட்டும் 
சிரசு ஏற முடியாது 
சக்தியோடு 
துணை சேர வேண்டும். 
சிரசு ஏற பல வழி 

தியானம் மூலம் 
பக்தி மூலம் 
ஞான மூலம் 
யோக மூலம் 
தீட்சை மூலம் 
சிவசக்தி மூலம் 
இன்னும் 
எத்தனையோ மூலம் 
வழி உள்ளது 
சிரசு ஏற. 

ஆனால் 
சிறந்த மூலம் 
இல்லற தர்மம். 

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே 
சக்தி பிறந்து விடுகிறது 

சக்தி மாறி 
சிவம் சேர்ந்தாலே 
பிறவியே சிக்கலே 

மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை 

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தி யோடு 
சிவம் சேரும் போதே 
சர்வமும் சாந்தி ஆகும் 

சிவ சக்தி இடையே 
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!

ஆனால் 
சக்தியின் கண்ணீருக்கு 
சிவம் காரணமானால்
அதை விட 
கொடிய கர்மா 
உலகில் இல்லை 

ஒருவன் 
வாழ்வை ஜெயிக்க 
ஆயிரம் வழி 
தர்மத்தில் உள்ளது உண்மையே

ஆனால் 
உறவுகளை கொண்டே 
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும் 
ஒரு வழி உள்ளது 
உலகம் அறியாதது. 

சொந்தம் என்பது 
பழைய பாக்கி என 
அறிந்தவணுக்கு 
சொந்தம் சுமை இல்லை. 

நட்பு என்பது 
பழைய பகை என்பதை 
பண்போடு அறிந்தவணுக்கு 
பதற்றம் இல்லை 

எதிரி என்பவன் 
தனது கர்மாவின் 
தார்மீக கணக்கே என 
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி 
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே 

உனது செயலே 
கர்மா ஆகி 
அந்த கர்மாவே 
நீ எதிரி என நினைக்கும் 
ஒரு உயிருள்ள சடலத்தை 
உனக்கு எதிராக 
பயன்படுத்துகிறது என நீ 
உணரும் போது 

உன் எதிரி முகத்தில 
உனது கர்மா 
உனது கண்களுக்கு தெரிய வந்தால் 

எதிரி 
உனக்கு எதிரே இருந்தாலும் 
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை 
உடனிருந்தே கொல்லும் 
உறவும் 
உன்னோடு பிறக்கும் 
உனது 
பழைய கணக்காலே

பழைய கணக்கு புரிந்தால் 
பந்த பாசம் 
சகோதரத்துவம் மீது 
பற்று அற்ற பற்று வைத்து 
பிறவி கடமை வெல்லலாம் 

கர்மாவின் கணக்கு புரிந்தால் 
உனது பக்கத்தில் 
சரி பாதி அமரும் 
மனைவி 
யார் என்றும் புரியும் 

தாய் தந்தையை 
அன்போடு 
பூஜிப்பவன்
தந்தை வழி 
தாய் வழி 
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம் 

உறவுகளுக்கு 
அவர்கள் தரும் இன்னல்கள் 
பொறுத்து 
உபகாரமாக உதவி வந்தால் 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 
உனது 
ஏழு ஜென்ம 
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம். 

கோயில் போனாலோ
மகா குலத்தில் 
குளித்தாலோ
ஒன்னும் மாறாது 

சிறு இன்பம் மட்டும் 
சிறிது காலம் கிடைக்கும் 
அவ்வளவே 

ஆனால் 
ஒரே ஒரு உறவை 
நீ பூஜித்தால்
பிறவி பிணி 
மொத்தமாக தீரும் 
அது 
மனைவியே. 

மனைவியை 
மகிழ்ச்சியாக வைப்பது 
உலகிலேயே 
சிரமம் மட்டும் அல்ல 
அது தான் 
உலகிலேயே 
சிறந்த 
தவம் 

தவம் என்பது 
சாமாண்யன்களுக்கு சிரமமே 

கட்டிய மனைவியை யும் 
உன் மூலம் 
அவள் பெற்ற பிள்ளைகளையும் 
உளமாற நேசித்து 
உன்னதமாக 
உனது வாழ்வை 
ஆனந்தமாக நீ 
அர்ப்பணித்தால்
அதுவே 
உலகின் சிறந்த தர்மம் 
சிறந்த தவம் 

தாய் தந்தை யை 
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை 
பித்ரு தோஷம் நீங்க. 

உறவுகளை மதித்தால் 
கிரக தோஷம் நீங்க 
திருவண்ணாமலை 
இடைக்காடரை
தேட தேவை இல்லை 
நவ கிரகமும் 
சுற்ற தேவை இல்லை 

மனைவியை 
பெற்ற பிள்ளையை நேசித்தால் 
அவர்களை 
ஆனந்தமாக வைத்தால் 
கர்ம விமோஜனம் தேட 
அகத்தீசனை தேடி 
பாபநாசம் 
போக தேவை இல்லை 

இதற்கு தான் 
இல்லற வாழ்க்கை அமைத்தான் 
நமது 
முப்பாட்டன் 
ஆதி யோக வம்சம். 

🍃மனைவி அழும் வீடே 
நரகம். 

🍃மனைவி சிரிக்கும் வீடே 
பிரபஞ்ச சொர்க்கம்.

🍃சக்தி உணர்ந்தாலே மட்டுமே 
சிவம் ஜோதி ஆக முடியும். நன்றி🌸      🌿ஷங்கர்குரு🌿