Revival.Indianism

Wednesday, July 6, 2016

சொர்ண பைரவர் அஷ்டகம்



செல்வம் கொழிக்க செய்யும் 🌼
🌼சொர்ண பைரவர் அஷ்டகம் 🌼-
🌼தமிழில்🌼
🌼தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
🌼நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
🌼ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
🌼ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்
🌼அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை சொர்ண பைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். அவ்வாறு செய்து வந்தால் என்றும் பணத்திற்கு குறைவிருக்காது.
🌼தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.
🌼அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும்.
🌼எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை. வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.
🌼நீங்கள் சொர்ண பைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம். அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
🌼தினமும் வழிபடுபவர்கள் மிகுந்த புண்ணியசாலிகளே...!
Bass Baskar இன் படம்.
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்துபகிர்
8181
1 கருத்து
11 shares
கருத்துக்கள்
Rajakani M
Rajakani M Sri Soornaharsanapairavar namaha
பிடித்திருக்கிறது · பதிலளி · 3 மணிகள்
Rajalingam Nagappan
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
Posted by Rajali1910 at 9:39 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Followers

Blog Archive

  • ►  2020 (6)
    • ►  April (4)
    • ►  February (2)
  • ►  2019 (3)
    • ►  May (2)
    • ►  January (1)
  • ►  2018 (68)
    • ►  December (13)
    • ►  September (6)
    • ►  August (2)
    • ►  July (13)
    • ►  June (12)
    • ►  May (22)
  • ►  2017 (1)
    • ►  July (1)
  • ▼  2016 (114)
    • ►  September (1)
    • ►  August (6)
    • ▼  July (45)
      • ஸப்த கன்னியர்
      • DISTANCE
      • அன்பினால் அனைவரும் வீடுபெறு
      • காயத்ரி மந்திரம்
      • SOME PRACTICES WHICH MATTERS
      • குலதெய்வம்
      • யார் வந்தேறி ?
      • ஸ்ரீ சக்ரம்
      • காசி
      • PIW - Parent Induced Wastefulness
      • *இல்லற தர்மம்*
      • அஷ்ட கர்மம்
      • Aligarh Movement & British role in promoting Musli...
      • விநாயகரின் மூல மந்திரம்
      • வாஸ்த்து!
      • சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!
      • கர்மவினையை மாற்றும் சக்தி
      • கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்
      • அதிர்ஷ்ட லட்சுமி அருள் கிடைக்க செய்ய வேண்டியவை
      • ஓம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர்
      • 27 நட்சத்திர விருட்சங்கள்
      • 32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்
      • நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திர...
      • எங்கு ‪#‎சுத்தமானதிருநீறு‬ கிடைக்கும்
      • என்ன பரிகாரம் செஞ்சாலும் பலன் இல்லையே ? இதற்க்கு எ...
      • மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல...
      • நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செ...
      • ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை
      • விரதம்
      • Success
      • வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை
      • Shivaji and his Generals
      • Punjab Killings
      • திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு ப...
      • Om Agni Chakraaya Namah ||मंत्रॐ अग्नि चक्राय नमः...
      • ஞானத்தை யாரிடம் கற்பது ?
      • சொர்ண பைரவர் அஷ்டகம்
      • மறுபிறப்பு வேண்டாத பக்தர்கள் வழிபாடு செய்யவேண்டிய ...
      • அன்பே சிவம்
      • #‎ஆஷாட_நவராத்திரி‬ (‪#‎வாராஹி_நவராத்திரி‬)
      • அகஸ்திய கவசம் அகஸ்தீஸ்வரர் கவசம்
      • சிவவாக்கியர் சித்தர் பாடல்
      • தமிழ், சமஸ்கிருதம்
      • நவராத்திரி
      • சிற்றின்பம் ...பேரின்பம்...
    • ►  June (7)
    • ►  May (12)
    • ►  April (9)
    • ►  March (33)
    • ►  February (1)
  • ►  2013 (2)
    • ►  December (2)
  • ►  2011 (1)
    • ►  September (1)

About Me

Rajali1910
View my complete profile
Ethereal theme. Powered by Blogger.