Saturday, May 5, 2018

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
==========================================

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
உபநிடதங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
இதற்கு சாந்தி மந்திரம் என்று சொல்லப்பட்டு 
உள்ளது. அதன் விளக்கம் இங்கே அன்பர்களுக்காக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம்.
ஆதி ஆத்மீகம் - தற்செயல் விபத்திலிருந்து பாதுகாப்பு.
ஆதி பௌதீகம் - வேற்றுயிர் பகையிலிருந்து பாதுகாப்பு. 
ஆதி தெய்வீகம் - இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று உச்சரிக்கும்போது இந்த
மூன்று காப்புகளும் கிடைக்கிறது. முதல் சாந்தி 
சொல்லும்போது என்னால் எனக்கு எந்த துன்பமும் 
ஏற்படக்கூடாது, இரண்டாவது சாந்தி சொல்லும்போது 
பிற உயிர்களால் எனக்கு எந்த துன்பமும் ஏற்படக்கூடாது,
மூன்றாவது சாந்தி சொல்லும்போது இயற்கை சீற்றங்களால்
எந்த துன்பமும் வரக்கூடாது என்று நினைக்கும்போது நமக்கு
நிச்சயமாக மூன்றுவகைக் காப்புகளும் கிடைக்கும் என்று
சொல்லப்பட்டு உள்ளது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
இதை எந்த மனிதன் சொன்னாலும் நன்மை கிட்டும். காலத்தின்
கட்டாயத்திற்காக இந்த வார்த்தைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

வாழ்க வையகம்! 
வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய🙏🏻

No comments:

Post a Comment