Saturday, May 5, 2018

Caste

ஜாதிப் பேசும் திகவினருக்கும் 

பிரிவினை வளர்க்கும் ஜாதி அரசியல்வாதிகளுக்கும் சமர்பணம்

"ப்ராஹ்மணோ”‌உஸ்ய முக’மாஸீத் | பாஹூ ரா’ஜன்யஃ’ க்றுதஃ |
ஊரூ தத’ஸ்ய யத்வைஶ்யஃ’ | பத்ப்யாக்‍ம் ஶூத்ரோ அ’ஜாயதஃ ||"

இந்த வரிகளை மேலோட்டமாக படித்தால், இதன் அர்த்தம் - "முகத்திலிருந்து வந்தவன் ப்ராஹ்மணன், தோளிலிருந்து வந்தவன் க்ஷத்ரியன்,தொடையிலிருந்து வந்தவன் வைஷ்யன், காலிலிருந்து வந்தவன் சூத்திரன்". 

அப்போது  வேதத்தில் ஜாதி சொல்லப்பட்டிருக்குதானே என்று நீங்கள் கேக்கலாம். அதுதான் இல்லை. 

மேலே சொன்னவரிகள் ஒரு சமூகத்தில் உள்ள 4 வகையான தொழில்களையே குறிக்கும். 

1 . ப்ராஹ்மணன் என்பவன் படிப்பு மற்றும் நற்பண்புகளை சொல்லிகுடுக்கும் ஆசிரியர். ஆசிரியருக்கு தேவை அறிவு, அதுனால் தான் ப்ராஹ்மணன் முகத்தில் இருந்து தோன்றினானென்று குறிப்பிடுகிறது 

2. தன் நாட்டையும் நாட்டுமக்களையும் எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுபவனே க்ஷத்ரியன். ஒரு க்ஷத்ரியனுக்கு தேவை பலமான தோள்கள், அதுனால் தான் க்ஷத்ரியன் தோளிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது 

3. வியாபாரம்/வணிகம் செய்து தன் வசிக்கும் நாட்டிற்கு பொன் மற்றும் பொருள் ஈட்டுதருபவன் வைஷ்யன் 

4. விவசாயம், சிற்ப கலை, மண்பாண்டங்கள் செய்வது போன்ற இதர தொழில்களில் ஈடுபட்டவர்களை சூத்திரர்கள் எனப்படுவர். ஒரு உடம்புக்கு எப்புடி கால்கள் வலுசேர்க்குமோ அதுபோல் ஒரு சமூகத்தின் இருக்கும் மக்கள் வளமாக வாழ இவர்களின் பங்கு தான் மிகவும் முக்கியம், அதுனாலதான் சூத்திரன் கால்களிலிருந்து வந்தான் என்று குறிப்பிடுகிறது 

கொஞ்சம் உற்று கவனித்தால் உங்களுக்கு தெரியும் - இந்த இடத்தில  "இவன் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்" என்று குறிப்பிடவில்லை, மாறாக ஒரு சமூகம் என்பதை ஒரு மனிதனின் உடம்போடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இது ஜாதி கிடையாது. 

நாம் நம் உடம்பில் எப்பொழுதாவூது இதுதான் முக்கியம், இது முக்கியம் இல்லையென்று நினைத்திருக்கோமா? இல்லை தானே. நம் முகம், கைகள் போலவே கால்களையும் பராமரிக்கிறோம்தானே! 

உங்களுக்கு மேலும் ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன் - வேதத்தில் உயர்த்தி பேசப்படுபவன் சூத்திரனே. 

என்ன குழப்புகிறதா? வாருங்கள் விளக்குகிறேன் 

(a) புருஷ சூக்தத்தின் அடுத்தபடியாக வருவது நாராயண சூக்தம். இதில் பின்வரும் ஸ்லோகம் இருக்கிறது - 
"அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ"
இதன் அர்த்தம் - இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் நாராயணன், எங்கும் நாராயணன், எதிலும் நாராயணன். இந்த பிரபஞ்சமே நாராயணன். 

(b) சனாதன தர்மத்தின்படி (இன்று இருக்கும் ஹிந்து மார்க்கம்) "நாராயணன்" தான் வேதத்தில் போற்றப்படும் "புருஷன்". 

(c) சனாதன தர்மத்தின் ஒரு முக்கிய அங்கம் - "பக்தி".
பக்தி மார்க்கத்தின் ஒரே கொள்கை - பரமாத்மாவிடம் சரணாகதி வழியாக முக்தியடைவது, அதாவது ஒருவருடைய அகங்காரத்தை இறைவனுடைய சரணங்களில் (பாதத்தில்) சமர்ப்பித்தால் தான் அவன் முக்திக்கு அருகதை ஆகிறான். 
இங்கு பரமாத்மா என்பது வெறுயாரும் இல்லை, வேதங்கள் போற்றும் "புருஷன்", நாராயணனே தான். 

(d) அலைமகள் என்று போற்றப்படும் சகல செல்வத்தையும் (பொருள் செல்வம், ஞான செல்வம்) அருளும் "அன்னை லட்சுமிதேவி", நாராயணனின் பாதத்தின் அருகில் தான் அமர்ந்திருக்கிறாள். அன்னையின் திருவருட்பார்வை இல்லையெனில் சரணாகதி என்பது கிட்டாத எட்டாத கனி. 

இதிலிருந்து என்ன புலப்படுகிறதென்றால் - வேதபுருஷனாகிய நாராயணனின் உடம்பில் மிகவும் புனிதமானது அவனுடைய சரணம்/பாதமே/கால்களே. அந்த புருஷனின் கால்களில் தோன்றிய "சூத்திரர்களை" மதிக்காத/மரியாதை செய்யாத எந்த சமூகத்துக்கும் அலைமகளின் கடாக்ஷம் [செல்வ செழிப்பாயினும், சரணாகதி ஆயினும்] கிடைக்காது.
இது தான் வேதத்தின் தாத்பர்யம், அதில் அடங்கியிருக்கும் சூக்ஷுமம்.

ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், ராகவேந்திர ஸ்வாமி போன்ற மஹான்கள் யாரும் ஜாதி என்று பார்த்ததில்லை, காரணம் அவர்கள் அனைவரும் நான் மேலே கூறிய வேதத்தின் சூக்ஷுமத்தை அறிந்தவர்கள். நாமும் அவர்களுடைய வழிகாட்டுதலில் நடப்போம்.

No comments:

Post a Comment