Saturday, May 5, 2018

மனித மூளை

இந்த பூமியில் உள்ள படைப்புக்களிலேயே மிகவும் சிக்கலான ஒரு படைப்பு மனித மூளை. நமது மூளைக்குள் நுாறு பில்லியன் நியுரோன்கள் நரம்புக் கலன்களாக இருக்கின்றன. ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என ஆராய்ந்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டத்தில் உள்ள விண்வெளியில் நுாறு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்திருக்கின்றனர். ஆகவே மூளையின் விரிவு, அண்டம். மூளையில் மின்னும் நுhறு பில்லியன் நியுரோன்கள் தான் வான்வெளியில் மின்னுகின்ற நுாறு பில்லியன் நட்சத்திரங்கள்.

இதைத் தான் நமது சனாதன தர்மம், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று கூறியிருக்கின்றது. இந்த உடலில் மூளையாக இருந்து இயங்குவது, வானத்தில் நட்சத்திரங்களாக இருந்து இந்தப் பூமியை இயங்கச் செய்கின்றது. என்னுடைய எண்ணங்களையும், ஞாபகங்களையும் நான் ஒதுக்கி வைத்துவிட்டு. வெட்டவெளியாக என்னை உணருகின்றபோது, அண்டத்தில் இருக்கும் சக்தி எனது உச்சியிலிருக்கும் சகஸ்ராரத்தின் வழியாக எனக்குள் நிறைகின்றது.

இது தான் தியானத்தின் பயன். தியானத்தில் அமர்ந்து, எண்ணங்களை ஒதுக்கி, என்னுள் வெளியை ஏற்படுத்தியவுடன் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி மேலேறி சகஸ்ராரத்தில் நிற்கின்றது. இந்நிலையில் மேலே இருந்து இறைசக்தி சகஸ்ராரத்தில் இறங்கி என்னுள் கலக்கின்றது.

இந்த நிலையில் நிறைந்துதான் மகான்கள், தம்மை உணர்ந்தவர்களாய் செயல்படுகின்றார்கள். அவர்களுக்குத் தன் செயல் என்ற ஒன்று இல்லை. எல்லாம் அவன் செயல். நாமோ எல்லாம் நாமே செய்வதாக நினைத்து, எண்ணங்களை வளர்த்துக் குழப்பி, எல்லாவற்றையும் வீணாக்கி விடுகின்றோம். இறை சக்தியாய்ச் செயல்பட விடாமல் ஈகோவால் செயல்படும்போது அவை சரிவர நிகழாமல், தோல்வியையும் துன்பத்தையும் தருகின்றன. இதைத் தான் ”குறுக்காலே போவானேன்” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

தர்மவழியில் நடக்கப்பழகினால், எதிர்மறைச் செயல்களில் ஈடுபட மூளை துாண்டாது, என்பதைத்தான் இது குறிக்கின்றது. குறுக்கு வழிகளில் சென்றால் அது அதர்மம். அதன் முடிவு நன்மையைத் தராது. முறையாகச் செயல்பட்டால் அது தர்மம். முதலில் துன்பங்களைக் கொண்டுவந்தாலும் முடிவு நன்மையாக அமையும். உடல் செயல்படாமல் சும்மா இருந்தால், அது தானாக வந்து இதனுடன் இணையும். ஆனால் சும்மா இருக்கிறோமா? என்பது தான் கேள்வி.
இப்படி மூளையைக் கொண்டு செயல்படாமல், தானாகச் செயல்படாமல், அதைச் செயல்பட அனுமதித்து, அமைதியாய் இருப்பதுதான் அனுபூதி நிலை. ஆத்ம அனுபூதி என்பது இதுதான். ஆத்மா மட்டுமே செயல்படுகின்ற நிலையில் வாழ்பவர்கள் அனுபூதிமான்கள் ஆவார்கள். ஆத்ம அனுபூதி நிலையை அடைந்த பிறகு ஞானமும் தேவையில்லை.

உலகம் முழுவதிலும் ஆன்மீக எழுச்சி பரவத் தொடங்கியுள்ள காலமாக இன்றைய காலகட்டம் அமைந்திருக்கின்றது. என்றும் நிலைபெற்றதாகவும், இறையாற்றலிலிருந்து உள்ளுணர்வால் பெறப்பட்ட உண்மைகளைக் கொண்டதாகவும், உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை உலக நாடுகளில் உள்ள தேடல் உணர்வு கொண்டோர் புரிந்து கொண்டுவிட்டனர்.

தற்போது அமெரிக்காவின் நியுஜெர்ஸியில் உள்ள செடன் ஹால் பல்கலைக்கழகத்தில் (Setan Hall University) பகவத்கீதை பாடமாக்கப்பட்டிருப்பதுடன், ஒரு கிறித்துவ தேவாலயத்தில், அந்த மதபோதகரே உபநிடதக் கருத்துக்களின் உயர்வுகளைத் தமது ஆசியுரையின் ஊடாக எடுத்துரைத்துப் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

பெற்றோருக்கு இந்த நுால்கள் மிகச் சிறந்த விதத்தில் உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முதலில் நமக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தானே, பிறருக்கு அவற்றை எடுத்துக்கூற முடியும்?

Article by Pattambi Iyer

No comments:

Post a Comment