Saturday, July 7, 2018

அமெரிக்காவில் இந்து மத வளர்ச்சி

I அமெரிக்காவில் இந்து மத வளர்ச்சி. 

சுவிசேஷக் கூட்டம் நடத்தி, முடவர் கால் பெற்றதாகவும், குருடர்கள் கண் பார்வை பெற்றதாகவும் நடித்து காட்டியும், வீடு வீடாக, தெரு தெருவாக சென்று பிட் நோட்டீஸ் கொடுத்து, அப்பாவி மக்களை மதமாற்றம் செய்ய நினைக்கும் கிறித்தவ கூட்டங்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம் !! 

நீங்கள் இங்கே உங்கள் மூதாதையர்கள் கும்பிட்ட குல தெய்வங்களை பரிதவிப்பில் விட்டு விட்டு, இந்து தெய்வங்களை சாத்தான் என்று கொச்சை படுத்தி பேசி அலைகிறீர்கள். மத வெறி கொண்டு. உண்மை எதுவென்று அறிய நாதி அற்று கிடைப்பதால். 

உண்மை என்னவெனில், ஆதியில்.. உலகம் பூராவும் மாந்தர் சிவ வழிபாடு செய்து வந்தனர் என்பது. 

ஆதி காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே உலகம் பூராவிலும் பரவி கிடந்தது. பைபிள் பழைய ஏ‌ற்பாடு கி. மு. 1500 ம் ஆண்டு வாக்கில் எழுதபட்டது. வட அமெரிக்காவில் 10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவில் எனும்  இடம் உள்ளது என்றும், அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் லிங்கத்தை தனியாகவும், ஆவுடையார் சேர்த்தும் வழிபட்டு வந்தனர்  என்றும் உலக தமிழ் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டு உள்ள சட தலம் எனும் ஆராய்ச்சி நூலில் பதிவு செய்து உள்ளனர். 

அரேபியாவில் yupiratis, Tigris என்ற இரு நதிகளுக்கு இடை பட்ட பகுதி சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகத்தில் சிறந்து விளங்கி இருந்தது. அப்பிரதேச மக்கள் அப்போது உள்ள செய்திகளை களிமண் ஏடுகளில் வடித்து, தீயில் சுட்டு  பாதுகாத்து வந்து உள்ளனர். அவற்றில் சிவன் தொடர்பு உடைய இடப் பெயர்கள் காணப்படுவதுடன், சிவன் மாதமும் குறிக்கப்பட்டு உள்ளது. 

Mosey என்பவர் yakovaa அருளிய 10 கட்டளைகளையும் சிவன் மாதத்தில் 6 ம் நாள் sinoy மலை மீது நின்று மக்களுக்கு எடுத்து கூறினார் என்று கிருத்துவ மறையின் பழய ஏற்பாடு தெரிவிக்கிறது என்றும், mosey ன் காலம் கி. மு. 1500 என்றும் சடத்தலம் தமிழ் ஆராய்ச்சி நூலில் பதிவு செய்து உள்ளனர். 

பைபிள் பழைய ஏ‌ற்பாட்டில் குறிப்பிட பட்டு இருக்கும் Sian என்றும் கடவுளை ப‌ற்‌றிய குறிப்புகளை நன்கு ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் syan எ‌ன்பது சிவன் என்பதுவே என்றும் அது பழைய ஏற்பாட்டில் சிறிது திரிந்து எழுதப் பட்டு உள்ளது என்றும் சட தலம் நூலில் பதிவு செய்து உள்ளனர். 

இயேசு இறக்கும் தருவாயில், என் தேவனே, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று உரத்த குரலில் கதறினார் என்று பைபிள் கூறுகிறது. அப்படியானால் இயேசுவின் தேவன்தான், சியான் என்று பைபிளில் கூறப்பட்டுள்ள சிவன் ஆகும்.

இந்தியாவில் உள்ள மத அறிவில் முழுமை பெறாத இந்து மக்களை, பொய் பிரச்சாரம் மூலம் மதம் மாற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள். அதற்கு நேர் மாறாக ஐக்கிய அமெரிக்காவில் அவர்களாக முன் வந்து இந்து மதத்தை ஏற்று கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. அவர்கள் வேத மந்திரம் ஓதி, சுப நிகழ்ச்சிகளை தூங்குங்கும் நிலை உருவாகி உள்ளது. 

அங்கு இந்துக்களின் எண்ணிக்கை 2.23 மில்லியனை (2, 230,000) எட்டியது. இது கடந்த 2007-ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 85.8% அதாவது 1 மில்லியன் அதிகரித்துள்ளது. 

கடந்த 2007-ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 1.2 மில்லியன் (1,200,000) இந்துக்கள் வாழ்ந்தனர். அண்மைய கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. ஏழு ஆண்டுகாலத்தில் சுமார் 1 மில்லியன் இந்துக்கள் அதிகரித்துள்ளனர். இதற்கு காரணம் நிறைய அமெரிக்கர்கள் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொண்டு இந்து தர்மத்திற்கு திரும்புவதே என்று பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்தனர். இன்னும் வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்கின்றனர்.

கடந்த காலங்களில் ”Religious Landscape Study” எனும் பியூ ரிசர்ச் செண்டர் நிறுவனத்தின் அமைப்புகள் நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் இந்துக்களை பற்றி சில அரிய தகவல்களைச் கிடைத்துள்ளன. அவ்வறிக்கையின்படி அமெரிக்காவில் வாழும் 36% இந்துக்களின் மாத வருமானம் சுமார் 100,000 டாலர்
- 77% இந்துக்கள் பேச்சலர்ஸ் டிக்ரி (Bachelor’s Degree) பட்ட்தாரிகள்
- 48% இந்துக்கள் போஸ்ட்-கிரேஜுவெட் டிக்ரி (Post-Graduate Degree) பட்டதாரிகள்
- இந்துக்களிடையே தான் மிகக் குறைவான விவாகரத்து சம்பவங்கள் (5% குறைவான)
- 91% இந்துக்கள் மதமாறி திருமணம் செய்வதில்லை
- சான் ஃப்ரான்ஸிக்கோவில் (San Francisco) 5% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- நியூ யார்க்கில் (New York) 3% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- அமெரிக்காவில் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது இந்துக்கள்
- குடும்ப உறவுகளில் அதிகப்படியான அக்கறை காட்டுவது இந்துக்கள்
- கணவன் – மனைவி பந்த்த்தை வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றனர்
- அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் பெரும்பாலானோர் 30-35 வயதுடையவர்கள்
- ஐக்கிய அமெரிக்காவில் 500க்கும் அதிகமாக இந்து கோவில்கள் அமைந்துள்ளன
- 24% அமெரிக்கர்கள் மறுபிறவிகளை, கர்மவினைகளை நம்புகிறார்கள்
- சுமார் 22 மில்லியன் அமெரிக்கர்கள் யோகா கலையில் ஈடுபடுகிறார்கள்
- அமெரிக்காவில் வாழும் ஆசியர்களின் 10% இந்துக்கள்

மேலும், அமெரிக்காவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 7.8% சரிந்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 78.4%மாக இருந்த  கிறிஸ்துவர்கள் தற்போது 70.6% மாக குறைந்துள்ளனர். சுமார் 11 மில்லியன் (11,000,000) கிறிஸ்துவர்கள் மதம் விலகிவிட்டனர் என்று பியூ ரிசர்ச் செண்டர் தமது அறிக்கையில் தெரிவி்த்துள்ளது. 

அமெரிக்காவில் சுமார் 23% மக்கள் தங்களுக்கு எந்த மதங்களும் இல்லை, நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 3.1% நாத்தீகர்கள் ஆவர். 1.9% யூதர்கள் ஆவர்.

அமெரிக்காவில், இந்து தர்மம் புதிய எழுச்சி பெற்றிருக்கிறது. நிறைய இளைஞர்கள் இந்துக்களின் பழக்க வழக்கங்களை விரும்பி பின்பற்றுகின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ராமாயண வாழ்க்கை முறை அவர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. எல்லா வழிபாட்டு தலங்களுக்கு சென்று, எல்லா மக்களுடனும் சகஜமாகப் பழகுகின்றனர். இந்து கோயில்களுக்கு மட்டும் அல்லாது, அமெரிக்காவில் சீக்கிய மற்றும் பௌத்த ஆலயங்களும் அமைந்துள்ளன. இந்து மதங்களான சீக்கியமும் பௌத்தமும் அமெரிக்கர்களை அதிகம் கவர்கிறது. 

யோகா கலை, தியான கலை போன்றவை இந்த நாகரீக காலத்தில் தங்களின் மனத்திற்கு வாழ்க்கைக்கும் நிறையவே சாந்தத்தையும் நிம்மதியையும் அளிக்கின்றன என்பது பெரும்பான்மை அமெரிக்கர்களின் கருத்தாகும். இதுவரை சுமார் 6% கத்தோலிக் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவத்தில் இருந்து இந்து தர்மத்திற்கு திரும்பி உள்ளனர்.

ராஜன் ஸெட், அமெரிக்காவின் ”யுனிவெர்ஸல் சொஸைட்டி ஓஃப் ஹிண்டூஸ்ம்” எனும் அமைப்பின் தலைவர் ஆவார். அவர் கருத்துபடி, ”அமெரிக்க இளைஞர்கள் உள்ளத்தேடலில் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். கடல் போன்ற ஞானங்களையும் எல்லையற்ற அறிவுகளையும் வழங்கும் இந்து தர்மத்தை தேடி வருகின்றனர். இந்து தர்மத்தில் படித்து ஆராய்வதற்கு எல்லையற்ற ஞானங்கள் கொட்டி கிடக்கின்றன. பல ரிஷிக்களும், முனிவர்களும், ஞானிகளும், சித்தர்களும் மேலும் எத்தனையோ அறிஞர்களும் அருளுடையர்களும் வழங்கிய அமுதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து, ஏற்கனவே தாங்கள் கற்றுத் தேர்ந்த அறிவியல் ஞானத்தோடு ஒப்பிடும் அமெரிக்கர்கள் பின்னர் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொள்கின்றனர். இதன்மூலம் இந்து தர்மம் அமெரிக்காவில் வளர்ச்சியடைகின்றது. ”

கிருத்துவ மறை கணக்குப் படி உலகை தேவன் படைத்தது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று வலை தளங்களில் உலா வரும் செய்திகளையும், பூமி தட்டையானது என்ற பைபிள் கருத்துக்களையும் அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

பிரார்த்தனைகளால், நோய்களையும், ஊனங்களையும் மாற்ற முடியாது என்ற அறிவு பூர்வமான உண்மை அவர்களுக்கு புலப்பட ஆரம்பித்து விட்டது. 

மேலும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் தங்கள் மதங்களை தேர்ந்தெடுக்க நிறைய சுதந்திரம் வழங்கபடுகிறது. கிறிஸ்துவ அமைப்புகளினாலும் சர்ச்களினாலும் நிறைய தடைகளும் தடங்கல்களும் இருந்தாலும் அதையெல்லாம் மீறி நிறைய பேர் இந்து தர்மத்திற்கு திரும்புகின்றனர். 

இந்தியாவில், கிறிஸ்துவர் இந்து மதத்திற்கு மாறினால் அவரை சர்ச்சில் இருந்து விலக்கி வைக்கும் பழக்கம் எழுதாத சட்டமாக கடை பிடிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலை மாறினால், உலகில் அதிகமானோர் இந்து தர்மநெறிகளை ஏற்க துவங்குவர்; மீண்டும் உலகத்தில் சத்திய யுக வாழ்க்கை ஆரம்பம் ஆகும்.

No comments:

Post a Comment