Saturday, July 7, 2018

இந்து மதம் உருவான வரலாறு

இந்து மதம் உருவான வரலாறு.

முழு முதல் கடவுள் என்பது எது? கடவுளுக்கு உருவம் இல்லை. ஆனால் மானிடர் அறிந்து தெளியவே உருவம் தரித்து, ஆலயங்களில் தன்னை ஆராதிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டு இருக்கிறான். அவன் நீர் போன்றவன். நீரானது, காற்றாக (ஆக்சிஜன் +ஹைட்ரஜன்), திரவ பொருளாக, திடப் பொருளாக (பனிக்கட்டி) மூன்று நிலைகளிலும் காணப் படுவது போல, இறைவன், அருவ, அரு உருவ, மற்றும் உருவ நிலை என்று மூன்று நிலைகளிலும் காணப் படுவான் என்று ஆதி பாரா சக்தி பிரகடனம் செய்ததாக புராணம் கூறும். அப்படி அவன், தூணிலும் துரும்பிலும் இருப்பான்.

இந்து மதத்தில், சிவனை வணங்குபவர்கள் சைவர்கள் என்றும், விஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர் என்றும் அறியப் படுவர். இவர்கள் இருவரும் வேறு வேறு கடவுளர் இல்லை. “ஹாரியும் (விஷ்ணு) ஹாரனும் (சிவன்) ஒன்று. இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று கிராம புறங்களில் வேடிக்கையாக சொல்வது உண்டு.

இந்து மதத்தில் இத்தனை கடவுள் ஏன்? அவை ஏற்பட்ட வரலாறு என்ன?

உலகில் கடவுள் உண்டு என்பாரும், கடவுள் இல்லை என்பாரும் ஆக இரு பிரிவினர் இருக்கையில், கடவுள் உண்டு என்பதை எப்படி உறுதி செய்வது? தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை " when there is a writing there is a writer ; when there is a pot there is a potter ; when there is a universe there is a creator "என்று குறிப்பிட்டு எழுதி உள்ளார். புத்தகம் எழுத ஒரு எழுத்தாளன், மண் பாண்டம் செய்ய ஒரு குயவன் இருப்பது போல, பேரண்டத்தை படைத்த ஒரு படைப்பாளி உண்டு என்கிறார் அவர்.

அண்ட சாரா சாரமும் அதிலுள்ள வாஸ்துக்கள் அனைத்தும் தாமாக தோன்றியது என்பது அறிவியல் விளக்கம். எந்த பொருள் ஆனாலும் அது தோன்ற காரணம் ஒன்று இருக்க வேண்டும். மழை பெய்ய மழை மேகம் காரணமாய் இருக்கையில், மழை மேகம் உருவாக சூரிய வெப்பமும், நீரும் காரணம் ஆகும். நீரை படைத்தது யார்? சூரியன் அல்லது ஆதவன் சிவ பெருமானின் வலது கண் என்பது வேதம். சூரியன் இல்லா விட்டால் பூ உலகம் ஏது?

இயற்கை உருவாவதற்கு முன்னர், இன்றிலிருந்து சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தோன்றா பெருமையுடன் இருந்ததும், கல்பங்கள் தோறும் உலக அழிவு ஏற்பட்ட பின்னர் அதன் மறு ஆக்கத்துக்கு காரணமாக இருப்பதுமான சக்தியை சூனிய சக்தி என்றும் (zero energy) அந்த சக்தி தோற்றம் இல்லா பெருமை கொண்டது என்றும் அறிவியல் கூறுகிறது. அதுவே ஆதி பாரா சக்தி என்று இந்து மதம் கூறுகிறது. ஆதி என்றால், முதன்மை, பாரா என்றால் அண்ட சாராசாரம். ஆக, ஆண்ட சாரா சர‌த்துக்குமான முழு முதல் சக்தி என்பது அதன் பொருள்.

ஆதி பாரா சக்தியின் கிரியைகளின் பிரதி பலனாக இயற்கையும் அதில் அடங்கும் அனைத்தும் தோன்றியது என்று வேதம் போதிக்கிறது. ஆதி பாரா சக்தியே பிரகிருதி எனும் இயற்கையாக தன்னை மாற்றிக் கொண்டார். ஆதி புருஷன் (the Supreme intelligence) அல்லது சிவன், இயற்கை உயிர் பெற்று எழ காரணம் ஆகும். அதனால் ஆதி பாரா சக்தியும், சிவனும் வேறு வேறு அல்ல. ஒன்று மற்றதில் இருந்து பிரிக்க முடியாதது. உடலும் உயிரும் போல. சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை.

ஆதி பாரா சக்தியின் மாயா சக்தி காரணமாக உருவாகிய பிராகிருதி எனும் இயற்கை, படைப்புக்கான கருப்பொருள் ஆனது. அது பிரம்ம அண்டா எனும் ஒரு மிகப் பெரிய கரு முட்டையாக உருப் பெற்றது. அந்த கரு முட்டைக்குள் அண்ட சாராசாரமும் அடங்கி இருந்ததது என்று மார்கண்டேய புராணம் தெரிவிக்கிறது.

அந்த பிரம்ம அண்டாவை மின்னல் வேகத்தில் வெடிக்க செய்து அண்ட சாரா சாரத்தையும் ஆதி பாரா சக்தி படைத்தார் என்று புராணம் கூறுகிறது. அணு துகள்கள் ஒன்றாக சேர்த்து உரசியதால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, அண்ட பெரு வெடிப்பு ஏற்பட்டு அண்ட சாராசாரமும் உருவானது என்பது விஞ்ஞானம் எடுத்து வைத்து உள்ள அண்ட பெரு வெடிப்பு தத்துவம். இரண்டும் ஒத்து போவதாகவே உள்ளது.

இயற்கை வழிபாடே இந்து மத வழிபாடாக ஆதியில் இருந்தது. இறைவன் பஞ்ச பூத நாயகன் என்று அறியப்படுவான்.

இயற்கையில் அடங்கும் வஸ்துக்கள் அனைத்தையும் உருவாக்குவதற்கு இறைவன் எடுத்துக் கொண்ட கால அளவு ஐந்து அல்லது பத்து நாட்கள் இல்லை. ஒரு கல்ப காலம் என்று கூர்ம புராணம் கூறுகிறது. ஒரு கல்ப காலம் என்பது 429 கோடி உலக வருடங்கள் ஆகும்.

இயற்கை உயிர் பெற்று எழ வேண்டும் என்றால் அதற்கான கிரியைகள் நடந்தாக வேண்டும். அதை திறம்பட நடை பெறுவதற்காக ஆதி பராசக்தி முகமைகளை உருவாக்க காரணமானர். முத‌ன் முதலாக விஷ்ணு தான் தோன்றியாக உருப் பெற்றார். அவரிடம் இருந்து பிரம்மா உருவானார். பிரம்மாவின் முதல் படைப்பு உருத்திரன் அல்லது சிவன். இவர்கள் மும் மூர்த்திகள் என்று அறியப் படுவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே ஆக்கல், காதல், அழித்தல் (மறைதல், அருளல்) எனும் முப்பெரும் தொழில்களை, ஆதி பாரா சக்தியின் முகமைகளாக இருந்து கொண்டு செய்து வருவர் என்று ஆதி பராசக்தி பிரகடனம் செய்தார்.

அத்துடன் சிவன் கடும் தவம் செய்து, ஆதி பாரா சக்திக்கும் மேலான சக்தி பெற்று முழு முதல் கடவுள் ஆவார் என்றும் பிரகடனம் செய்தார். அதன்படி சிவனே முழுமுதல் கடவுள். மற்று எல்லா கடவுள்களும் ஆதி பாரா சக்தியின் முகமைகள் (agents) ஆவர் என்று புராணம் போதிக்கிறது.

பஞ்ச பூதங்களாக இறைவன் இருக்கையில், பஞ்ச பூதங்களை ஆட்சி செய்ய தனித் தனியாக கடவுள்கள் ஏன்? அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளர் உண்டு. அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பவர் தலைமை செயலாளர். அதுபோல் சிவ பெருமான் முழு முதல் கடவுளாக இருந்து கொண்டு, எல்லா உலக அசைவுகளையும் கவனித்துக் கொண்டு இருக்கிறார். துஷ்ட நிக்கிரகம், இஷ்ட பரிபாலனம் என்பது அவன் கொள்கை.

உலகில் அதர்மங்கள் பெருகும்போது அவதாரங்களாக, மூர்தங்களாக இறைவன் வெளிப்படுகிறான். தீமைக்கு எதிராக போரிட்டு தீயவர்களை அழிப்பான் என்பதை ராம, கிருஷ்ண, காளி, பத்திர காளி போன்ற அவதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மாந்தர் ஆதியில், தொழில் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்.  வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் செய்வித்தல் இவை பிராமண தர்மம், அரசாட்சி, படை தொழில், அதர்மங்களை தட்டிக்கேட்டால் சத்திரிய தர்மம். விவசாயம், கால்நடை வளர்த்தல் வைஸ்ய தர்மம். மற்ற மூன்று பிரிவினருக்கும் பணிவிடை செய்தல், வியாபாரம் சூத்திர தர்மம். இந்த தொழில் தர்மம் சனாதன தர்மம் என்று அறியப் பட்டது.

ஆரியர் தான் பிராமணர் என்று ஆரியருக்கும் பிராமணருக்கும் முடிச்சி போட்டு, இந்துக்கள் மத்தியில் பிராமணர் மீது வெறுப்பு பிரசங்கம் செய்து, இந்துக்களை பிரித்தாளும் கொள்கையால் மதம் மாற்ற பார்கிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் இந்து பெருங்குடி மக்களே.

இந்த பிரச்சாரத்தை முன் வைத்துதான் காமராஜர் ஆட்சியை கவிழ்த்தினர் திராவிடம் பேசியவர்கள்.
ஆரியர் என்பார் யுவன தேசத்தில் வாழ்ந்த சிவ நெறியாளர்கள். அங்கே சிவ நெறியாளர்கள் கொடுமை படுத்தப் பட்டதால் (see bible raajaakkalin athikaaram I and II), உயிர் தப்புவதற்காக சிந்து நதியை கடந்து சனாதன தர்ம நெறி உடைய இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்க‌ள் சிந்து நதி கரையில் வாழ்ந்த காரணத்தினால் அவர்களது யுவன உறவுகள் அவர்களை சிந்து என்று அழைத்தனர். சிந்து எனும் சொல் மருவி இந்து ஆனது. அவர்கள் பின்பற்றிய சனாதன தர்மம் இந்து தர்மம் ஆனது. நாளடைவில் இந்து தர்மம் இந்து மதம் ஆனது. இது நடை பெற்ற காலம் சுமார் கி. மு. 9000 ஆகும்.

நம் நாட்டு சரித்திரம் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டது. ஆரியர் யுவன தேசத்தில் கொடுமை தங்காமல் இந்தியா வந்தார்கள் என்று எழுத மனம் இல்லாமல் ஆடு மேய்க்க வந்தார்கள் என்று எழுதி உள்ளனர். நயில் நதி பள்ளத்தா‌க்‌கில் இல்லாத புல்லா?

No comments:

Post a Comment