Saturday, July 7, 2018

நான் என்பது எது? Who am I ?

எல்லாம் அவன் செயல். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு நாம் என்ற எண்ணம் கொண்டு, அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே! அது இயற்கையாக பரிணமித்து இருக்கும் இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

அதர்மம் புரியதே இயற்கை பொய்த்துவிடும். கடமையை செய் பலன் தருவது இறைவன் கையில் உள்ளது. 

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! வாழவும் சாவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....

உனக்கும் கீழே இருப்பவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி தேடு. (கவி கண்ணதாசன்) 

(inputs From Indira Haridoss) 

நான் என்பது எது? 

மனித உடலை மூன்று  கூறுகளாக பிரிக்கலாம். ஒன்று சூல உடல். அது கண்ணுக்கு தெரியும் உடல். அடுத்த உடல் சூக்கும உடல். அது கண்ணுக்கு தெரியாத நிழல் உடம்பு அல்லது பேய் உடம்பு. மூன்றாவது உடம்பு கரண உடல். அதுவே உயிர் என்பது. இவற்றில் எது நான் என்பது? முதல் உடம்பு நிலை அற்றது. மனம் எடுக்கும் முடிவுக்கு செயல் வடிவம் தரும் ஒரு கருவி ம‌ட்டுமே அது. எனவே அது நான் ஆகாது. மூன்றாவது உடல் எனும் உயிர் நிலையானது. அது கடவுளின் உடமை என்பதால் அதுவும் நான் ஆகாது. அப்படியானால் நான் என்பது இரண்டாவது உடலான சூக்கும உடல் அல்லது பேய்  உடம்பு ஆகும். மனம் அதன் அங்கம். 

நான் எனும் இந்த பேய் உடம்பின் அங்கமான மனமே மனிதன் உயிர் பெற்று இருக்கும்போது போடும் ஆட்டங்களுக்கு எல்லாம் மூல காரணம். மனம் நினைக்காத வரை அதர்மம் குறித்த எண்ணம் ஒருவனுக்கு வருவதில்லை.

No comments:

Post a Comment